உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவுக்கு நோய்க்கிருமி கடத்த முயன்று சிக்கிய 2 பேர்: எப்.பி.ஐ. விசாரணை

அமெரிக்காவுக்கு நோய்க்கிருமி கடத்த முயன்று சிக்கிய 2 பேர்: எப்.பி.ஐ. விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஆபத்தான உயிரியல் நோய்க் கிருமிகளை கடத்தியதாக சீன பெண் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.இதுபற்றிய விவரம் வருமாறு: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w0or2fen&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சீனாவைச் சேர்ந்தவர்கள் யுன்கிங் ஜியான் (33), ஜூன்யோங் லிபு(34). இவர்களில் ஜுன்யோங் லிபு, சீன பல்கலைக்கழகம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அங்கு அவர் இந்த நோய்க்கிருமிகள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்.டெட்ராய்ட் மெட்ரோபாலிட்டன் விமான நிலையம் வழியாக அவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைந்து மிச்சிகன் பல்கலை.யில் ஆராய்ச்சி செய்ய திட்டமிட்டுள்ளார். பிடிபட்ட அவர்கள் ஆபத்தான உயிரியல் நோய்க்கிருமியை அமெரிக்காவுக்குள் கடத்திக் கொண்டு வந்ததாக கைது செய்யப்பட்டனர். பூஞ்சை வகையான இந்த நோய்க்கிருமி வேளாண்மை உயிரியல் ஆயுதமாக கருதப்படுகிறது. அதாவது, பார்லி, கோதுமை, சோளம், அரிசி போன்ற பயிர்களுக்கு ஹெட் பிளைட் என்ற நோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. பயிர்களை தவிர கால்நடைகள் மற்றும் மனிதர்களுக்கும் தீங்கை உண்டாக்கும்.பிடிபட்ட இருவர் மீதும் சதி, பொருட்களை கடத்துதல், பொய் தகவல்களை அளித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன. இது குறித்து எப்.பி.ஐ., இயக்குநர் காஷ் படேல் கூறி உள்ளதாவது; அமெரிக்க நிறுவனங்களுக்குள் ஊடுருவி,உணவு விநியோகத்தை அச்சுறுத்தி உயிர்களுக்கும், பொருளாதாரத்துக்கும் கடும் தீங்கு விளைவிக்கவே இதுபோன்ற செயல்கள் அரங்கேறுகின்றன என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

சண்முகம்
ஜூன் 05, 2025 07:19

ஈனர்கள் கடத்தியது.


Rathna
ஜூன் 04, 2025 19:42

மர்ம நபர் 2 பேர் சீனக்காரன். கோவிட் உற்பத்தி மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்.


என்றும் இந்தியன்
ஜூன் 04, 2025 16:41

இது ஒரு ஜுஜுபி. 2 பேரை மட்டும் பிடித்ததாம் அமெரிக்கா மீதி 28 பேரை எப்போது பிடிக்கப்போகின்றீர்கள். வெறும் 2 பேர் கொண்டது அல்ல இந்த குழு , இந்த செயலுக்கு மொத்தம் 30 பேர் இருப்பார்கள்.


Sampath
ஜூன் 04, 2025 14:40

அமெரிக்கா உலக வங்கி மூலமாக கடனும் கொடுக்கும்


Ramesh Sargam
ஜூன் 04, 2025 13:16

பாகிஸ்தான் நாடு பயங்கரவாதிகளை உருவாக்கும் நாடு என்றால், இந்த குட்டிச்சாத்தான் சீனா உயிர்கொல்லி நோய்க்கிருமிகளை உருவாக்கி எதிரி நாடுகளை அழிக்கப்பார்க்கிறது. இந்த இரண்டு நாட்டிடமும் நாம் மிக மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.


மீனவ நண்பன்
ஜூன் 04, 2025 14:11

நீங்க அமேரிக்கா போகாதீங்க


முக்கிய வீடியோ