உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி; 3 பேர் காயம்

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி; 3 பேர் காயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: தென்மேற்கு வர்ஜீனியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.அமெரிக்காவின் வடக்கு உட்டா நகரில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு போலீஸ் அதிகாரி காயம் அடைந்தார். தற்போது மீண்டும் தென்மேற்கு வர்ஜீனியாவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் தனது வீட்டிற்குள் இறந்து கிடந்ததை போலீசார் கண்டறிந்தனர். அதே நேரத்தில் மற்றொரு நபர் அருகிலுள்ள கார் நிறுத்துமிடத்தில் இறந்து கிடந்தார். மேலும் 3 பேர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயம் அடைந்தனர். இவர்களை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இறந்தவர்களின் அடையாளங்களை போலீசார் வெளியிடவில்லை. துப்பாக்கிச்சூடு நிகழ்ந்த இடத்தில் வசிக்கும் மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தினங்களில், அமெரிக்காவில் இரண்டு துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
ஆக 19, 2025 20:32

அமெரிக்காவில் தினம் தினம் விசித்திரமான தீபாவளி பட்டாசு வெடிப்பு. இந்தியாவில் காற்று மாசு. அங்கே மக்கள் சா வு.


அப்பாவி
ஆக 19, 2025 18:35

அங்கு தினமும் துப்பாக்கி சூடு. இங்கே தினமும் கார் விபத்து.. ஒரே ரூட்டில்தான் பயணிக்கிறோம்.


ரங்ஸ்
ஆக 19, 2025 09:02

துப்பாக்கி சூடு இல்லாமல் அமெரிக்க மக்கள் அமைதியாக வாழ வழி செய்யட்டும். பிறகு மற்றவர்களுக்கு அறிவுறுத்தட்டும். வெளி நாட்டு மக்கள் மன அமைதி தேடி நம் நாட்டிலுள்ள ஆசிரமங்களுக்கு வருகிறார்கள். நம் நாட்டு கொள்கை, "சர்வே ஜனா சுகினோ பவந்து" - உலக மக்கள் அனைவரும் அமைதியாக வாழ வேண்டும்.


sankaranarayanan
ஆக 19, 2025 08:36

உலக அமைதியை கட்டிக்காக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பு முதலில் அவரது நாட்டில் உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத துப்பாக்கி கலாசாரம் மாதந்தோறும் தவறாமல் எங்கேயாவது நடப்பதை முதலில் கட்டுப்படுத்தட்டும் பிறகு உலக அமைதிக்காக இவர் பாடுபடட்டும்


தியாகு
ஆக 19, 2025 07:51

மூர்க்க நாடுகளில் தினமும் குண்டு வெடிப்புகள் எப்படி சர்வ சாதாரணமோ அப்படி மதம் மாற்றும் நாடுகளில் தினமும் துப்பாக்கி சூடுகள் சர்வ சாதாரணம். ஆனா பாருங்க இவனுங்க ரெண்டு பெரும் சேர்ந்து அமைதியான பிற மதங்களை குறைசொல்லிக்கிட்டு திருவானுங்க.


S.V.Srinivasan
ஆக 19, 2025 07:49

டிரம்ப் அண்ணே சும்மா இந்தியா மேல வரி போட்றதுலயே குறியா இருக்காதீங்க. உங்க உள்ளூர்ல நடக்கிற அராஜகத்தையும் கொஞ்சம் அடக்கற வழியை பாருங்க. பொழுது போய் பொழுது விடிஞ்சா உங்க ஊர்ல துப்பாக்கி சூடுங்கிற செய்திதான் வருது.


முக்கிய வீடியோ