தெற்கு சூடான் விமான விபத்தில் 20 பேர் பலி!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
ஜூபா: தெற்கு சூடானில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகினர்.ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானின் யூனிட்டி ஸ்டேட்டில் அட்ராஜிக் என்ற சிறிய விமானம் எண்ணெய் வயல் விமான நிலையத்திலிருந்து ஜூபாவுக்குச் சென்று கொண்டிருந்தது. நடுவானில் சென்று கொண்டிருந்த விமானம், திடீரென கோளாறு ஏற்பட்டு விழுந்து நொறுங்கியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uet80gvl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விமானத்தில் பயணித்தவர்களில் 20 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர், கிரேட்டர் பயனீர் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த எண்ணெய் தொழிலாளர்கள். பலியானவர்களில் சீனா மற்றும் இந்தியாவை சேர்ந்தவர்களும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து யூனிட்டி மாநில தகவல் துறை அமைச்சர் கேட்வேச் பிபால் கூறியதாவது:சிறிய ரக விமான விபத்தில் பலியானவர்களில் 2 பேர் சீனாவை சேர்ந்தவர்கள்; ஒரு இந்தியரும் இருந்துள்ளார். இந்த சம்பவம் இப்பகுதியில் விமானப் பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்புகிறது.தெற்கு சூடான் சமீபத்திய ஆண்டுகளில் பல கொடிய விமான விபத்துக்களைக் கண்டுள்ளது. இது விமானப் போக்குவரத்து பாதுகாப்பில் இருக்கும் குறைபாடுகளை வெளிக்காட்டுகிறது.இவ்வாறு கேட்வேச் பிபால் கூறினார்.