உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க ராணுவ விமானத்தில் 205 இந்தியர்கள் வெளியேற்றம்; டிரம்ப் அரசு நடவடிக்கை

அமெரிக்க ராணுவ விமானத்தில் 205 இந்தியர்கள் வெளியேற்றம்; டிரம்ப் அரசு நடவடிக்கை

வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸிலிருந்து ராணுவ விமானத்தில் 205 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=aggarr16&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அமெரிக்காவின் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை சார்பில், முறையான ஆவணங்கள் இன்றி தங்கள் நாட்டில் தங்கி உள்ளவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 15 லட்சம் பேர், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியது தெரியவந்து உள்ளது. இவர்களை கணக்கெடுக்கும் அந்த நாட்டு அரசு, சட்டவிரோதமாக வந்தவர்களை அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பும் வேலையில் ஈடுபட்டுள்ளது. அதன்படி இந்தியர்கள் 205 பேர் ஆறு மணி நேரத்திற்கு முன்பு டெக்சாஸிலிருந்து புறப்பட்ட அமெரிக்க ராணுவ விமானத்தில் நாடு கடத்தப்பட்டதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.சட்டவிரோதமாக அமெரிக்காவில் 18,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளன.

தூதரகம் விளக்கம்

இது குறித்து டில்லியில் உள்ள அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: அமெரிக்காவில் எல்லைகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குடியேற்றச் சட்டங்களை கடுமையாக்கி, சட்டவிரோத குடியேறிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்கா தகவல் அனுப்பி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Dr Sundar
பிப் 11, 2025 07:20

தெரியால் பேசாதீர்கள் அமெரிக்கா மற்றும் எல்லா கோன்ரிஸ் ஹாவ் வெரி ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் ஆஸ்திரேலியா யு வில்ல பெ இந்த டீடென்ஷன் சென்டர் அண்ட் deported


kalyan
பிப் 04, 2025 21:46

அடப்பாவி, இதில் ஜெயஷங்கருக்கு எதுக்கு வெட்கம் வரவேண்டும்? அங்கே தங்கி மாட்டிக்கொண்டவர்கள் அவருடைய மாமனா இல்லை மச்சானா ?


அப்பாவி
பிப் 04, 2025 18:40

ஜெய்சங்கருக்கு வெட்கம் வருதாமா? வராதாம். அவிங்க நேரு காலத்தில் போய் அங்கேயே தங்கினவங்களாம்.


kalyan
பிப் 04, 2025 16:28

எவ்வளவு செலவு எய்தசெய்து அமெரிக்கா போனார்கள் என்பதல்ல கேள்வி முறையான வழியில் விசா எடுத்து அரசின் அறிவுடன் வெளிநாடு செல்பவர்கள் சென்றவுடன் அங்குள்ள தூதரகத்தில் பதிவு செய்து கொள்வது அவசியம். ஏனென்றால் முறையாக சென்று அந்நாட்டில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் - உதாரணத்திற்கு ஆப்கானிஸ்தான் உக்ரைன் போன்ற நிலைமைகள் - தூதரகம் உங்களுக்கு முறையாக திரும்பிவர உதவவும் செல்வது முக்கியம் . திருட்டுத்தனமாக குடியேறியவர்களை திருப்பி அனுப்புவது அரசின் தவறால் என்று கூறுவது ஒரு போதும் முறையாகாது


Bye Pass
பிப் 04, 2025 18:49

வெளிநாடு செல்பவர்கள் சென்றவுடன் அங்குள்ள தூதரகத்தில் பதிவு செய்து கொள்வது அவசியம்.இமிக்ரேஷன் இந்த வேலையை ஏர்போர்ட்டிலேயே செய்து விடுவார்கள் ..சில கிரிமினல்கள் visas காலாவதி முடிந்தவுடன் வெளியேறாமல் அங்கே தங்கிவிடுகிறார்கள்


Narayanan Muthu
பிப் 04, 2025 14:51

அமெரிக்ககாரன் இந்தியாவுக்கு வர வரிசையில் காத்துக் கிடப்பானுங்கன்னு உருட்டனதெல்லாம் பொய்யா 2 ruppes அடிமைகளா. இந்திய ரூபாய்க்கு சமமா டாலர் மதிப்பு ன்னதெல்லாம் வெறும் உருட்டு மட்டும்தானா. உலக மகா பொய்யனுங்கப்பா இவனுங்க.


Senthoora
பிப் 04, 2025 15:26

என்ன பண்ண அடுத்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்கணுமே , நீங்க வேற உருட்டுறது என்று,


Ganesh
பிப் 04, 2025 13:15

இதை வரவேற்கிறோம்.... ஆனால் வருகிறவர்கள் இந்தியர்கள் தானா என்று சரி பார்த்து இந்தியாவில் சேர்க்க வேண்டும். அதே போல் நம்முடய விமானம் மூலம் அவர்களை கொண்டு வரவேண்டும். அதுதான் மரியாதை...


V வைகுண்டேஸ்வரன்
பிப் 04, 2025 16:03

கள்ளத்தனமா குடியேறி இந்தியாவின் மானத்தை வாங்கினவனுங்களுக்கு எதுக்கு மரியாதை???


RK
பிப் 04, 2025 11:37

True American Mr.Donald Trump


Rangarajan Cv
பிப் 04, 2025 11:25

Every country should act against illegal migrants. Before receiving such migrants, we should ensure/check that Indians are accepted.


lana
பிப் 04, 2025 10:39

தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை சரி தான். அவர் நாட்டை காக்க அவர்கள் க்கு உரிமை உண்டு. நம்ம நாட்டுல உள்ள வங்க தேச மற்றும் பிற கள்ள குடியேறி களை வெளியே அனுப்ப வேண்டும்.


ஆகாஷ்
பிப் 04, 2025 10:26

வாங்க. ரெண்டு கோடி வேலை காத்திருக்கு. டாலரை ஒழித்துக் கட்டுவோம்.


Senthoora
பிப் 04, 2025 15:30

ஆட்சிக்கு வந்ததுமே 100 நாளில் கருப்பு பணம் வரும் என்று சொன்னாரு ஒருத்தர், இப்போ ஆர்ச்சிக்கு அந்த 100 மணித்தியாலத்தில் பல இலச்சம் செலவு செய்து அமெரிக்கா போனவங்க ரிட்டன்.


சமீபத்திய செய்தி