உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடா தேர்தலில் சீக்கியர்கள் 22 பேர் வெற்றி

கனடா தேர்தலில் சீக்கியர்கள் 22 பேர் வெற்றி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: கனடா பார்லிமென்டிற்கு நடந்த தேர்தலில் சீக்கியர்கள் 22 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.வட அமெரிக்க நாடான கனடாவில் கடந்த 28ம் தேதி பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. இதில், ஆளும் லிபரல் கட்சி, எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் மற்றும் புதிய ஜனநாயக கட்சி ஆகியவை களமிறங்கியது. இத்தேர்தலில், மார்க் கார்னி தலைமையிலான ஆளும் லிபரல் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது.இந்த தேர்தலில் புதிய ஜனநாயக கட்சியை சேர்ந்த, காலிஸ்தான் ஆதரவு தலைவர் ஜக்மீத் சிங் தோல்வியடைந்தார். அவரது கட்சியும் படுதோல்வியை சந்தித்து உள்ளது. இதனால், அக்கட்சி தேசிய அந்தஸ்தை இழக்கும் அபாயம் உள்ளது.அதேநேரத்தில், இந்த தேர்தலில் சீக்கியர்கள் 22 பேர் வெற்றி பெற்றுள்ளனர். லிபரல் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் அவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.பிராம்ப்டன் வடக்கு தொகுதியில் லிபரல் கட்சியை சேர்ந்த ரூபி சகோட்டா, பிராம்ப்டன் கிழக்கு தொகுதியில் லிபரல் கட்சியைச் சேர்ந்த மணீந்தர் சித்துபிராம்ப்டன் கிழக்கு தொகுதியில் சுக்தீப் கங் உள்ளிட்டோர் வெற்றி பெற்றுள்ளனர்.இவர்களை தவிர்த்து அமைச்சராக இருந்த அனிதா ஆனந்த், அஞ்சு தில்லான், சுக் தலிவால், ரன்தீப் சராய், பாரம் பெயின்ஸ் ஆகியோர் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜஸ்ராஜ் ஹலான், தல்விந்தர் ஹில், அமன்ப்ரீத் கில், அர்பன் கன்னா, டிம் உப்பால், பரம் கில், சுக்மன் கில், ஜக்சரண் சிங் மற்றும் ஹர்ப் கில் உள்ளிட்ட சீக்கியர்களும் வெற்றி பெற்று உள்ளனர்.அதேபோல், இந்த தேர்தலில் சில சீக்கியர்களும் தோல்வியடைந்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ravi Manickam
மே 01, 2025 22:45

ஜக்சரன் சிங் மஹால் எங்கள் தொகுதி MP, இனிமேல் தான் காலிஸ்தானிகளுக்கு ஆப்பு வைக்க போகிறார், எங்கள் தொகுதி இந்துக்கள் அனைவரும் வைத்த ஒரே கோரிக்கை காலிஸ்தானிகள் ஒழிப்பு.


Ramesh Sargam
மே 01, 2025 21:28

கனடாவில் வசிக்கும் காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்கள், சீக்கிரம் அந்நாட்டைவிட்டு துரத்தப்படவேண்டும்.


தத்வமசி
மே 01, 2025 21:05

காலிஸ்தானி தீவிரவாதிகளை வெளியேற்றினால் கனடா உருப்படும்.


முக்கிய வீடியோ