உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவின் சட்ட மசோதாவால் 3 லட்சம் இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு

அமெரிக்காவின் சட்ட மசோதாவால் 3 லட்சம் இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன் : அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் பட்டப்படிப்பு முடிந்தவுடன் செயல்முறை அனுபவத்துக்காக மூன்று ஆண்டுகள் வரை பணிபுரிய வகை செய்யும் திட்டத்தை நீக்க புதிய மசோதாவை அந்நாட்டு அரசு கொண்டுவர உள்ளது. இதனால் மூன்று லட்சம் இந்திய மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரியில் பொறுப்பேற்றார். அவர் அமெரிக்கர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் குடியேற்ற கொள்கைகளில் மாற்றங்கள் செய்து வருகிறார்.அதில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பது மற்றும் விசா வாயிலான சட்டப்பூர்வ குடியேற்றத்தை கட்டுப்படுத்துவது ஆகியவையும் அடங்கும். சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து அவர்களை சொந்த நாட்டுக்கு அமெரிக்கா திருப்பி அனுப்பி வருகிறது.அதே போல் எச்.1பி விசா மற்றும் மாணவர்களுக்கான எப்.1 விசாக்களுக்கு ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளை டிரம்ப் விதித்துள்ளார்.அமெரிக்காவின் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகளில் பட்டப்படிப்பு மேற்கொள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கு எப்.1 விசா வழங்கப்படுகிறது.இதில் குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் பயிலும் மாணவர்களுக்கு, பட்டப்படிப்பு முடிந்த பின்னும் மூன்று ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி செயல்முறை பயிற்சி என்ற பெயரில் வேலை பார்க்க அனுமதி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இந்திய மாணவர்களே அதிகம் பயன் அடைகின்றனர். 2023 --- 24 கல்வியாண்டில் 97,556 மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்துள்ளனர். பட்டப்படிப்புக்கு பெற்ற லட்சக்கணக்கான ரூபாய் கல்விக் கடனை இவ்வாறு பணி செய்தே பலரும் அடைக்கின்றனர். தற்போது இந்த திட்டத்தை தடை செய்யும் சட்ட மசோதாவை டிரம்ப் அரசு பார்லிமென்டில் கொண்டுவர உள்ளது. இந்த மசோதா சட்டமாக மாறினால் அமெரிக்காவில் படித்து வரும் மூன்று லட்சம் மாணவர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறி ஆகும்.கார்னெல், கொலம்பியா, யேல் போன்ற பல்கலைகள் வெளிநாட்டு மாணவர்கள் கோடை விடுமுறைக்கு சொந்த நாட்டுக்கு செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளது. திரும்ப அமெரிக்காவுக்கு வர அனுமதி மறுக்கப்படலாம் என்ற காரணத்தால் பல மாணவர்கள் தங்கள் பயணங்களை ரத்து செய்துள்ளனர்.இவர்கள் இனி எச்.1பி விசாவுக்கு மாற வேண்டும். இந்த விசா ஆண்டுக்கு 85,000 வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே போட்டி அதிகம். பணி அனுபவம், அதிக திறன் மற்றும் அதிக சம்பளம் இருப்பவர்களுக்கே பெரும்பாலும் இந்த விசா கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
ஏப் 10, 2025 09:48

இங்கேதான் கிராமத்துக்கு ஒரு ஐ.ஐ.டி என்.ஐ.டி தொறந்திருக்காங்களே. இங்கேயே படிக்கக்கூடாதா?


மீனவ நண்பன்
ஏப் 10, 2025 19:45

டாஸ்மாக் பெயரை மாத்திட்டாங்களா ?


M S RAGHUNATHAN
ஏப் 10, 2025 07:41

அமெரிக்காகாரன் அவன் நாட்டு மாணவர்கள் வாழ வழி தேடுகிறான். அதில் என்ன தவறு. இங்கு அரசு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு என்று அராஜகம் சரி என்றால், டிரம்ப் செய்வது மிக சரி.


M S RAGHUNATHAN
ஏப் 10, 2025 07:39

எங்களுக்கு அமெரிக்கா பெட்ரோமாக்ஸ் மட்டும் தான்.வேண்டும். திறமை இருந்த படித்துவிட்டு இந்தியா திரும்பி MNC களில் வேலைகளுக்கு Apply செய்து முறையான documents வைத்துக் கொண்டு அமெரிக்காவோ, அண்டார்டிகாவோ செல்லுங்கள்.


R Dhasarathan
ஏப் 10, 2025 06:44

Govt should increase IIT intake capacity and more colleges required. We should have more world class colleges in our country.


மீனவ நண்பன்
ஏப் 10, 2025 05:38

அமெரிக்காவில் வேலை வாய்ப்பு குறைவு படிக்க போனால் அங்கே தங்கி வேலை செய்து க்ரீன் கார்டு சிட்டிசன் ஷிப் கனவில் இருக்கிறார்கள் அமேரிக்கா சென்று படிக்க செலவு செய்யும் பணத்தில் இந்தியாவில் கௌரமாக வாழலாம் இப்போதைக்கு ரஷ்யா உக்ரேன் இஸ்ரேல் தான் வேலைவாய்ப்பை வழங்கும் இங்கிலாந்து ஆஸ்திரேலியா கனடா நாடுகளில் நிலைமை அமெரிக்காவை விட மோசம்


அப்பாவி
ஏப் 10, 2025 09:49

ஆம்... ரஷ்யா, உக்ரைனில் போரில் சண்டை போட ஆள் தேடறாங்களாம். நிறைய ஆள் எடுக்கறாங்களாம். போங்க.


மீனவ நண்பன்
ஏப் 10, 2025 19:50

போர் முடிந்தவுடன் கட்டுமான பணிகளுக்கும் வங்கி வியாபாரம் போன்ற பல துறைகளிலும் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவார்கள் ..இஸ்ரேல் ஏற்கனவே ஹரியானா புஞ்சாப் உதிர்ப்பிரதேசங்களிலிருந்து ஆட்களை வேலைக்கு அழைத்து செல்ல ஆரம்பித்து விட்டார்கள் ..ரஷ்யாவிலும் உக்ரேனிலும் எண்ணற்ற காலியிடங்கள் நிரப்ப வேண்டிய கட்டாயம்


புதிய வீடியோ