உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போர் நிறுத்தத்தை மீறிய இஸ்ரேல், ஈரான்: டிரம்ப் கண்டிப்பு

போர் நிறுத்தத்தை மீறிய இஸ்ரேல், ஈரான்: டிரம்ப் கண்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: போர் நிறுத்தத்தை இஸ்ரேலும், ஈரானும் மீறியுள்ளன என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் இரண்டு வாரங்களாக நீடித்து வந்தன. இரு நாடுகளும் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வீசி தாக்குதல் நடத்தின. இதனிடையே இரு நாடுகள் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். இதனால், மத்திய கிழக்கு பகுதியில் அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ta2emkzc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பிடிக்கவில்லை

இது தொடர்பாக நெதர்லாந்தில் நடக்கும் நேடோ அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க கிளம்பும் முன்னர் டிரம்ப் நிருபர்களிடம் கூறியதாவது: ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை மீறியுள்ளன. ஒப்பந்தம் போட்ட உடன் இஸ்ரேல் குண்டுகளை வீசியது. நீண்ட காலமாக கடினமாக சண்டையிடும் நாடுகள் நம்மிடம் உள்ளன. என்ன செய்கிறார்கள் என அவர்களுக்கு தெரியவில்லை. போர் நிறுத்த மீறலை வேண்டுமென்றே செய்ததாக தெரியவில்லை. இன்று இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது எனக்கு பிடிக்கவில்லை. அதனை தடுக்க முடியுமா என பார்ப்பேன்.ஒப்பந்தம் போட்டதும் உடனே ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்தியது பிடிக்கவில்லை. அவர்கள் ஆயுதங்களை பயன்படுத்த வேண்டியது இல்லை. பழிவாங்கல் அதிகமாக இருந்தது எனக்குப் பிடிக்கவில்லை. நியாயமாகச் சொன்னால், இஸ்ரேல் நிறைய ஆயுதங்களை பயன்படுத்தியது. போர் நிறுத்தத்தை ஈரான் மீறியதாக இஸ்ரேல் நினைத்ததாக நான் கேள்விப்பட்டேன். இதனை நாங்கள் விரும்பவில்லை. இஸ்ரேலின் நிலைப்பாடு எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.அப்போது, டிரம்ப் சில ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகளை திட்டினார்.

விதிமீறல்

முன்னதாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: இஸ்ரேல் குண்டுகளை வீசக்கூடாது. இதனை செய்தால்,அது பெரிய விதிமீறல் ஆகும். உங்கள் பைலட்களை நாட்டிற்கு அழைத்து வாருங்கள். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார். மற்றொரு பதிவில், ஈரானை இஸ்ரேல் தாக்கப்போவது கிடையாது. அனைத்து விமானங்களும் தாய்நாடு நோக்கி திரும்பி உள்ளன. யாரும் பாதிக்கப்படபோவதில்லை. போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நெதன்யாகுவுடன் ஆலோசனை

இதனிடையே, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார். போர் நிறுத்தம் குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ராமகிருஷ்ணன்
ஜூன் 25, 2025 09:34

ஒருபயலும் உன் பேச்சை கேட்க மாட்டேன் என்கிறார்கள். ஆனால் நீங்கள் நான் தான் நாட்டாமை என்று புலம்பி வருகிறாய், உங்கள் மதிப்பை நீங்களே குறைத்து கொள்ளாதீர்கள்


Narayanan Muthu
ஜூன் 24, 2025 20:01

இவர் உலகமகா கோமாளியாக மாறி வருகிறார்


Ramesh Sargam
ஜூன் 24, 2025 19:59

போரில் ஈடுபட்டுள்ள இரண்டு நாடுகளும் போர் நிறுத்த எண்ணத்தை மீறியதால், டிரம்புக்கு மீண்டும் அந்த நோபல் அமைதி பரிசு வாய்ப்பு போச்சு. பாவம் டிரம்ப்.


ASIATIC RAMESH
ஜூன் 24, 2025 18:14

நீங்களாகவே போர் நிறுத்தம் என்று முந்திரிக்கொட்டை மாதிரி பெரியண்ணன் என்ற பெயர் பெற நினைத்தீர்கள்... இந்தியா - பாகிஸ்தானுக்கு சொன்னதுபோல.. ஆனால் காமெடி ஆகிவிட்டீர்கள்... தேவையில்லாமல் உங்கள் மூக்கை அடுத்தவர்கள் மீது நுழைக்காதீர்கள்... அவர்கள் எப்படியும் என்னவும் செய்துகொள்ளட்டும்... இப்படித்தான் பலவருடங்கள் முன்பு ஈராக்கில் நீங்கள் சொன்ன கெமிக்கல் ஆயுதங்களையும் கண்டுபிடியுங்கள். வல்லரசுகளின் சதுரங்க விளையாட்டிற்கு பிறர் மீது குற்றம் சாட்டி பின்னர் தங்களது வர்த்தக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைப்பது நியாயமா ? அதற்காக நான் ஈரானுக்கு ஆதரவாக பேசவில்லை. இந்த அணு தொழில் நுட்பம் பரவ யார் காரணம் ? ஒரு காலத்தில் ஈராக்கை மிரட்டினீர்கள்... ஆப்கனை மிரட்டி வெளியேறுநீர்கள்... இப்போது ஈராக்கை குறி வைத்துள்ளீர்கள். ஒருகாலத்தில் இந்த ஈரானை பயன்படுத்திதான் உங்கள் ஏவுகணைகளை Scud & Petriot. வடகொரியா - தென்கொரியா உக்ரைன் - ரஷ்யா சீனா - தைவான் இந்தியா - பாகிஸ்தான் சிரியா பிரச்சினை போன்ற பிரச்சினைகளில் ஐ நா தவிர யாரும் தலையிடாமல் இருந்தாலே போதுமானது.. இப்போது ஐ நாவும் அறிக்கைகள் விடுவதோடு அதன் செயல்பாட்டை நிறுத்திக்கொள்கிறது. பாருங்கள்.. கடைசியில் ஈரானில் அணு செறிவூட்டவே இல்லை என்று ஆகப்போகிறது.... ஒவ்வொரு வல்லரசும் அடுத்த நாடுகளில் தங்களது ஆளுமையை திணிக்காதீர்கள்... முடிந்தால் ஏழை நாடுகளுக்கு அவர்கள் வளர்ச்சிக்கு உதவுங்கள்... இல்லையா.. உங்கள் வேலையை பார்த்து பொங்கல்... யூத நாடோ, இந்து நாடோ, கிறிஸ்தவ நாடோ, இஸ்லாமிய நாடோ... மதவாத இனவாத நாடாக இருந்தால் யாரும் அவர்களிடம் வர்த்தகம் செய்யாமல் மாற்று வழியை செய்யுங்கள்.. முதலில் மனிதர்களாக இருங்கள்...


சங்கர்
ஜூன் 24, 2025 18:07

முதலில் டிரம்ப் ஐ கண்டிக்க வேண்டும்.


புதிய வீடியோ