உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரதமர் மோடியால் இந்தியா பெரிய பலன் அடைந்துள்ளது: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாராட்டு

பிரதமர் மோடியால் இந்தியா பெரிய பலன் அடைந்துள்ளது: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' பிரதமர் மோடியால் இந்தியாவும், நட்பு நாடுகளும் பெரிய பலன் அடைந்துள்ளன'' என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் பாராட்டி உள்ளார்.இது குறித்து ஆன்டனி பிளிங்கன் கூறியதாவது: இந்தியாவை அபரிமிதமான வெற்றி பெற்ற நாடாக அமெரிக்கா கருதுகிறது. மோடி தலைமையிலான அரசு குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தி உள்ளது.பல இந்தியர்களின் வாழ்வில் நேர்மறையாக தாக்கத்தை உண்டாக்கி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோரின் முயற்சியால் அமெரிக்கா- இந்தியா உறவு நெருக்கமாகி உள்ளது. அதிபர் ஜோ பைடன் பதவிகாலத்தில் வெளியுறவு கொள்கையில் அடிப்படை உரிமைகள் சார்ந்தும், ஜனநாயகம் சார்ந்தும் கவனம் செலுத்த அமெரிக்கா விரும்பியது. அதன் படியே செயல்படுத்தி வருகிறது. பிரதமர் மோடியால் இந்தியாவும், நட்பு நாடுகளும் பெரிய பலன் அடைந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramesh Sargam
ஜன 19, 2024 00:35

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் அவர்களுக்கு நமத பிரதமர் மோடிஜியை பற்றி நன்றாக புரிகிறது. ஆனால், வேதனை, நம் நாட்டில் உள்ள பல 'சொந்த இடத்தில் வாழாத (பொறம்போக்கு இடத்தில் வாழும்)' ஒரு சில ஜென்மங்களுக்கு மோடிஜியை பற்றி தெரியாமல்போனதுதான் மிகவும் வேதனை அளிக்கிறது. நன்றி திரு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் அவர்களுக்கு.


venugopal s
ஜன 18, 2024 15:12

இந்தியாவின் தலையில் ஐம்பதாயிரம் கோடிக்கு அமெரிக்கா ஏதோ ஆகாத பொருளை கட்டுவதற்கான பூர்வாங்க வேலை இது என்பது புரிந்தால் சரி தான்!


முருகேசன்,சோளிங்கர்
ஜன 18, 2024 16:27

துபாய்ல போய் முதலீட்டை அள்ளிட்டு வர்றேன்னு போய் இதுவரை எவ்வளவு முதலீடு தமிழகத்துக்கு கொண்டு வந்தார்


vadivelu
ஜன 18, 2024 16:34

ஆகாத பொருளை கட்ட இதென்ன ராசா, கமிஷனை வாங்கி கொண்டு கண்டதை வாங்கி போட. அவர் சொல்வது உண்மை, உங்களுக்கு கசக்கத்தான் செய்யும்.


Senthoora
ஜன 18, 2024 18:17

இந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஐஸ் வைக்கிறார்,


Raja
ஜன 18, 2024 19:28

அந்த "ஆகாத பொருள்" தான் உன்னையும் உன்குடும்பத்தையும் காத்து நிற்பது.


Subramanian N
ஜன 18, 2024 19:53

அந்த ஆகாத பொருள்


Subramanian N
ஜன 18, 2024 19:54

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை