உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்கா செய்ததையே செய்தோம்: கத்தார் மீதான தாக்குதலை நியாயப்படுத்துகிறார் இஸ்ரேல் பிரதமர்

அமெரிக்கா செய்ததையே செய்தோம்: கத்தார் மீதான தாக்குதலை நியாயப்படுத்துகிறார் இஸ்ரேல் பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெல் அவிவ்: '' இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது போல தான் நாங்களும் கத்தாரில் தாக்குதல் நடத்தினோம்,'' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.காசாவில் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று முன்தினம்( செப்.,09) கத்தாரில் ஹமாஸ் அமைப்பின் உயர் அரசியல் தலைவர்கள் வசிப்பிடத்தை குறிவைத்து இஸ்ரேலிய விமானப்படைகள் தாக்குதல் நடத்தின. இதில், கலில் அய் ஹய்யா என்ற மூத்த தலைவரின் மகன் உட்பட 5 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிவித்தது. அதேபோல், கத்தார் தரப்பில், பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்ததால் அந்நாடு இஸ்ரேல் மீது ஆத்திரம் அடைந்தது. ' இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு' என்ற கடுமையாக விமர்சித்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kz3xv2ps&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த தாக்குதலுக்கு ஜோர்டான், சவுதி உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியுள்ளதாவது: அல்கொய்தா பயங்கரவாதிகளை தேடி ஆப்கானிஸ்தான் சென்று, பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதி ஒசாமா பின்லாடனை அமெரிக்கா கொன்றதை போல் நாங்களும் செய்துள்ளோம். தற்போது பல்வேறு நாட்டு தலைவர்கள் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கின்றனர். இதற்கு அவர்கள் வெட்கப்பட வேண்டும்.பாகிஸ்தானில் ஒசாமா பின்லாடனை அமெரிக்கா கொன்ற பிறகு அவர்கள் என்ன சொன்னார்கள்? ' ஐயோ, பாகிஸ்தானுக்கு என்ன ஒரு பயங்கரமான விஷயம் செய்யப்பட்டது?' என சொன்னார்களா? அவர்கள் பாராட்டினார்கள் . அதேகொள்கைக்காக நின்று அதனை செயல்படுத்தும் இஸ்ரேலை அவர்கள் பாராட்ட வேண்டும். இவ்வாறு அந்த வீடியோவில் நெதன்யாகு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Pandi Muni
செப் 12, 2025 07:56

மூர்க்க தீவிரவாதி எங்க போய் ஒளிந்துகொண்டாலும் இனி தப்ப முடியாது. நீ நடத்து ராஜா.


மனிதன்
செப் 11, 2025 21:12

உலகின் மோசமான தீவிரவாதி இஸ்ரேல்தான்...ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரிய விரட்டின கதையாக ஆட்டையைப்போட்டு ஆட்டையைப்போட்டு பாலஸ்தீனம் என்ற நாட்டை அழித்து இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கி இருக்கிறார்கள்...உண்மையை சொன்னால் உலக நாடுகளெல்லாம் சேர்ந்து இஸ்ரேலைதான் அழிக்கவேண்டும்...


ஆரூர் ரங்
செப் 11, 2025 22:14

ஹிந்துக்களின் ஓவர் கருணையை தவறாக எடுத்துக்கொண்டு சிலிண்டருடன் அலையுறாங்க .


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 11, 2025 22:18

எப்படி? காப்டிக் கிறிஸ்தவர்களின் எகிப்தை, பார்சிக்களின் ஈரானை, யூதர்களின் இஸ்ரவேலை, ஹிந்துக்களின் சிந்து பஞ்சாப் பெங்கால் இந்தோனேஷியா மாகாணங்களை, பௌத்தர்களின் ஆப்கான் மற்றும் மலேசியாவை ஆட்டையை போட்டது போலவா? இன்னும் நிறைய இருக்கு. இப்போ இந்த லிஸ்ட் போதும்.


Shivakumar
செப் 12, 2025 03:04

முதலில் வரலாற்றை தெரிந்து கொண்டு பேசவும். யூதர்களுக்கும் இஸ்ரேல் என்ற நாடு சொந்தம்தான். ஆனால் அவர்கள் வெவ்வேறு நாடுகளுக்கு சென்று விட்டார்கள். மீண்டும் தனது தாயக நாட்டுக்கு செல்லவேண்டும் என்று முடிவு செய்து வந்து சேர்ந்த இடம்தான் இன்றைய இஸ்ரேல். அதில் அவர்களுக்கும் பங்கு உண்டு என்பதுதான் வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. தனது இனத்தின்மேல் ஒருவன் தாக்குதல் நடத்தும்போது தன்னை தற்காத்துக்கொள்ள உரிமை உண்டு, இதைத்தான் இஸ்ரேல் பிரதமர் சொல்கின்றார்.


Kasimani Baskaran
செப் 11, 2025 21:09

தீவிரவாதத்தை எந்த நாடும் ஞாயப்படுத்த முடியாது. இந்தியா பாகிஸ்தானை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் செய்தது போல தீவிரவாத இலக்கை மட்டுமே இஸ்ரேல் தாக்கியது. ஆகவே இதை பெரிது படுத்துவது தீவிரவாதம் பின்னால் போவது போலத்தான்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 11, 2025 20:52

அப்படிப் போடு போடு போடு. அடிச்சுப் போடு கொய்யால. இந்த அடி போதுமா... இன்னும் கொஞ்சம் வேணுமா?...


தாமரை மலர்கிறது
செப் 11, 2025 19:40

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தால், அந்த நாட்டை தாக்குவோம் என்று இவர் சொல்வதில் நியாயம் உள்ளது.


Sundar
செப் 11, 2025 19:18

ஹமாஸ் முதலில் ஒழுங்காக இருந்திருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காது...


Sivak
செப் 11, 2025 19:17

100% Justified.


Mohamed Rafeek
செப் 11, 2025 18:48

well done Israel. well done Benjamin Netanyahu.


Mohamed Rafeek
செப் 11, 2025 18:41

This is not correct. Israel is terrorist country.


Shivakumar
செப் 12, 2025 03:00

NO. what they are doing 100% correct.


Pandi Muni
செப் 12, 2025 07:53

...மனிதனை மிருகமாக்குகிறது


Mohamed Rafeek
செப் 11, 2025 18:38

இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு என்று ஐநா அறிவிக்கவேண்டும் . if you doubt about some personal inside some other country then first inform them to hand over. without any intimation any one can not attack to other country. This is crime . all arab countries should come together and raise against israel.


Shivakumar
செப் 12, 2025 03:06

Is this applicable for pakistan..??


சமீபத்திய செய்தி