உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு 4 பேர் பலி, 12 பேர் காயம்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு 4 பேர் பலி, 12 பேர் காயம்

நியூயார்க்: அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தின் லேலண்ட் நகரில் உள்ள பள்ளி ஒன்றில், உள்ளூர் மக்கள் 'ஹோம்கமிங்' என்ற ஆண்டு விழாவைக் கொண்டாட ஏராளமானோர் கூடியிருந்தனர். இதற்காக, அங்கு கால்பந்து போட்டியும் நடத்தப்பட்டது. நள்ளிரவு போட்டி முடிந்து அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மர்மநபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி னார். இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர்; 12 பேர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் மற்றும் பின்னணி குறித்த தகவல் தெரியவில்லை. துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடையதாக 18 வயது இளைஞர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
அக் 12, 2025 01:06

இந்தியாவில் உள்ள தமிழகத்தின் மீனவ பிரச்சினை எப்படி முடிவுக்கு வராதோ, அதேபோன்று அமெரிக்காவில் துப்பாக்கி சூடு பிரச்சினை. இது இரண்டையும் நிறுத்தி ஒரு நிரந்தர முடிவு காண்பவர்களுக்கு அடுத்தவருட அமைதிக்கான நோபல் அமைதி பரிசு. அமெரிக்காவில் தினம் தினம் தீபாவளி.


புதிய வீடியோ