உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மியான்மரிலிருந்த தப்ப முயன்ற 427 ரோஹிங்கியா அகதிகள் பலி?

மியான்மரிலிருந்த தப்ப முயன்ற 427 ரோஹிங்கியா அகதிகள் பலி?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நைப்பியதோ : மியான்மரில், கடல் மார்க்கமாக இரு கப்பல்களில் தப்பிச்செல்ல முயன்ற ரோஹிங்கியா அகதிகள், 427 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என, ஐ.நா., சபை தெரிவித்துள்ளது.மியான்மரில், 2017ம் ஆண்டு முதல் அந்நாட்டு ராணுவத்தால், அங்கு வசிக்கும் முஸ்லிம் சிறுபான்மையான ரோஹிங்கியா மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். சிலர் கடல் மார்க்கமாக வேறு நாடுகளுக்கு தப்பி செல்கின்றனர்.இந்நிலையில், மியான்மரில் இருந்து கடல் மார்க்கமாக வேறு நாடுகளுக்கு தப்பிச்செல்லும் நோக்கில் சமீபத்தில் இரு கப்பல்களில் ஏராளமான அகதிகள் சென்றனர். அந்த கப்பல்கள் இரண்டும் கடலில் மூழ்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.இதுகுறித்து, ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையர் வெளியிட்ட அறிக்கை:மியான்மரில் இருந்து கடல் மார்க்கமாக தப்ப முயன்ற ரோஹிங்கியா அகதிகள் சென்ற இரண்டு கப்பல்கள் கடலில் மூழ்கின. இதில் கடந்த 9ம் தேதி 267 பேர் சென்ற கப்பலில், 66 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இதேபோல் 10ம் தேதி, 247 பேருடன் சென்ற கப்பலில், 21 பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர்.மீதமுள்ள 427 பேரின் நிலை பற்றி இதுவரை எந்த விபரமும் கிடைக்கவில்லை. இதுபற்றி ஐ.நா., குழு முதற்கட்ட விசாரணையை துவக்கியுள்ளது. அவர்கள் உயிரிழந்திருந்தால் இந்த ஆண்டின் மோசமான விபத்தாக இது கருதப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Murugan
மே 26, 2025 10:19

If They will allow them to their country.Then they will make problem to the country. Example India,how they are making problem to India


D Natarajan
மே 26, 2025 08:59

ஏன் இஸ்லாமிய நாடுகள் இவர்களை ஏற்றுக்கொள்ள கூடாது.


Keshavan.J
மே 26, 2025 10:40

அவர்கள் இஸ்லாமிய நாட்டுக்கு செல்ல மாட்டார்கள். ஆங்கிலேயர் நாட்டிற்கும் இஸ்லாம் இல்லாத நாட்டிற்கு சென்று பல வருஷங்கள் கழித்து அந்தத் நாட்டை இஸ்லாமிய நடக்குவது தான் அவர்கள் பிளான். இன்னும் கூட உங்களுக்கு புரியவில்லையா. இஸ்லாமியா நாட்டுக்கு சென்று இஸ்லாமியத்தை பரப்பி என்ன லாபம்.


Tiruchanur
மே 26, 2025 08:57

காலங்காத்தால ...


Keshavan.J
மே 26, 2025 07:52

ஐக்கிய நாடுகள் சபை ஒரு வெத்து வெட்டு சபை ,மியான்மார் ஒரு குட்டி நாடு அங்கு நடக்கும் அராஜகம் நிறுத்த மூடியவில்லை, வெட்க கேடு.


முக்கிய வீடியோ