உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசாவில் துயரம்; உதவி மையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பாலஸ்தீனர்கள் 48 பேர் பலி

காசாவில் துயரம்; உதவி மையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பாலஸ்தீனர்கள் 48 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: காசா உதவி மையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, பாலஸ்தீனர்கள் 48 பேர் உயிரிழந்தனர்.இஸ்ரேல்- ஹமாஸ் படையினர் இடையே நீண்ட நாட்களாக போர் நடந்து வருகிறது. காசாவில் இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் ராணுவ தாக்குதலில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். காசா உதவி மையங்களில், நிவாரண பொருட்களுக்காக காத்திருந்த 1000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாகவும், இஸ்ரேல் பசி, பட்டினியை ஆயுதமாக பயன்படுத்துவதாகவும் ஐநா குற்றம்சாட்டி உள்ளது.இஸ்ரேல் தாக்குதல் ஒரு பக்கம் மறுபக்கம் காசாவில் உள்ள ஜிகிம் கிராசிங்கில் உள்ள உதவி மையத்தில் ஏற்பட்ட, கூட்ட நெரிசலில் சிக்கி, பாலஸ்தீனர்கள் 48 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். காசாவின் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஜூன் மாதத்திலிருந்து குழந்தைகள் 89 பேரும், வயதானவர்கள் 65 பேரும் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்துள்ளனர். சர்வதேச நாடுகள், காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Sridhar
ஆக 03, 2025 18:14

இவ்வளவு தூரம் துயரங்கள் நடந்தும் ஹமாஸ் தீவிரவாதிகள் இன்னும் சரணடைய மாட்டேங்கறாங்களே?? அந்த மக்களே ஒரு நிலையில் கொதிப்படைந்து ஹமாஸ் தீவிரவாதிகளை காட்டிக்கொடுக்கும் பணியில் ஈடுபடவேண்டாமா? இந்த போர் கடைசி ஹமாஸ் தீவிரவாதி உயிர் இருக்கும்வரை தொடரும். அங்குள்ள மக்கள் இதை உணர்ந்து நடந்தால், எஞ்சி இருப்பவர்கள் பிழைக்கலாம். இல்லையென்றால், நாம் எடுத்த கொள்கை முடிவுக்காக இறந்தோம் என்ற பெருமையில் அழியவேண்டியதுதான்


ராமகிருஷ்ணன்
ஆக 03, 2025 17:57

முஸ்லிம் மதத்தினர் செய்த கொடுமைகளுக்கு பதிலடிகள் வாங்குகிறார்கள் நடப்பதை பார்ப்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. உதவினால் நமக்கே வினையாக திரும்பும்


சின்னப்பா
ஆக 03, 2025 14:24

தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கு இதுதான் நிலைமை. மாற்ற இயலாது!


Perumal Pillai
ஆக 03, 2025 14:00

07 அக்டோபர் 2023 மறக்க முடியுமா ?


JaiRam
ஆக 03, 2025 13:58

உலகில் கடைசி மூர்க்கன் இருக்கும் வரை மாவீரன் நெதன்யாகு தாக்குதலை நிறுத்த கூடாது


ரங்ஸ்
ஆக 03, 2025 13:42

பாவம். தீவிரவாதத்தின் பிடியில் சிக்கி அப்பாவி மக்கள் அழிகிறார்கள். மனித நேயம் என்பது இல்லையா ?


Jack
ஆக 03, 2025 13:42

கத்தார் சவுதி துபாய் போன்ற நாடுகளில் செல்வச்செழிப்புடன் வாழ்கிறார்கள் ..காஜா பகுதிகளில் வசிப்பவர்கள் தொண்டு நிறுவனங்கள் கொடுக்கும் விலையில்லா இலவசத்தில் வாழ பழகி கொண்டுள்ளார்கள் in


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 03, 2025 13:33

எகிப்தின் வடகிழக்கே காசா பிரச்சினை போல, எகிப்தின் தெற்கே சூடான் நாட்டில் கொடுமையான போர் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அங்கு நூற்றுக்கணக்கில் பழங்குடி மக்கள் பசியில் தினமும் இறந்து கொண்டுள்ளார்கள். சாலைகளில், காடு மலைகளில், பாலைவனங்களில் ஆங்காங்கு குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் பிணங்கள் புதைப்பதற்குக்கூட ஆட்கள் இல்லாமல் சிதறிக் கிடக்கின்றது. அங்கு நடப்பது மதம் மாறிய முஸ்லிம்களுக்கும், ஆப்பிரிக்க பழங்குடியினருக்குமான சண்டை. அதைப்பற்றி ஒருவரும் பேசுவதில்லை.


Sridhar
ஆக 03, 2025 18:10

மிக சரியாக சொன்னீர்கள்.


Rajasekar Jayaraman
ஆக 03, 2025 13:22

வினை விதைத்தவர்கள் திணை அறுக்க முடியாது வினைக்கு எதிர்வினை உண்டு வினையைத்தான் அனுபவிக்கிறார்கள் பரிதாபப்பட ஒன்றுமில்லை.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஆக 03, 2025 13:13

இப்போது ஹிஸ்புல்லாவோ இல்லை ஹமாஸோ ஒரு குண்டை இஸ்ரேல் மீது போட்டு ஓரிருவர் இறந்தால் இந்த கூட்டம் தான் கொண்டாடி மகிழும்.. அந்த அளவிற்கு தீவிரவாதிகளுக்கு துணை நிற்பார்கள்.....!!!


புதிய வீடியோ