வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டினால் அது - பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பல நாடுகளுக்கு பிடிப்பதில்லை.
Hog washing by the five countries. Too little and too late after all damages have been done.
ஜெருசலேம்: பாலஸ்தீனியர்களுக்கு எதிராக பயங்கரவாத வன்முறையைத் தூண்டியதாகக் கூறி, இஸ்ரேலிய அமைச்சர்கள் இருவருக்கு பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து மற்றும் நார்வே ஆகிய 5 நாடுகள் இன்று தடை விதித்துள்ளன.பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணியில் முக்கிய பங்காளிகளான இடாமர் பென்-க்விர் மற்றும் பெசலெல் ஸ்மோட்ரிச், இஸ்ரேலிய குடியேற்றத்தின் ஆதரவாளர்கள். இவர்கள் பாலஸ்தீனத்துக்கு எதிரான போர் மற்றும் வன்முறை செயல்பாடுகளுக்கு ஆதரவாக இருப்பதாக நீண்ட காலமாக புகார் உள்ளது.இந்நிலையில், இவர்களுக்கு தடை விதித்து பிரிட்டன் உள்ளிட்ட ஐந்து நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டினால் அது - பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பல நாடுகளுக்கு பிடிப்பதில்லை.
Hog washing by the five countries. Too little and too late after all damages have been done.