உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி 2 பயங்கரவாதிகள் வெறிச்செயல்

துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி 2 பயங்கரவாதிகள் வெறிச்செயல்

ஜெருசலேம்: இஸ்ரேலின் கிழக்கு ஜெருசலேமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.மேற்காசிய நாடான இஸ்ரேலின் ஜெருசலேமின் புறநகர் பகுதியான யிகல் யாடின் அருகே, பஸ் நிறுத்தத்தில் பயணியர் நேற்று காத்திருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த இரண்டு பேர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில், ஆறு பேர் பலியாயினர்; பலர் காயமடைந்தனர். இத்தாக்குதலை நடத்தியது இரண்டு பாலஸ்தீனர்கள் என்றும், அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக, இஸ்ரேல் போர் நடத்தி வரும் நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இத்தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பு இதுவரை பொறுப்பேற்கவில்லை என்றாலும், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை பாராட்டி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி