உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சரக்கு கப்பல்களுக்கு கட்டணம் வசூல்; ஈரானுக்கு 60 நாடுகள் எதிர்ப்பு

சரக்கு கப்பல்களுக்கு கட்டணம் வசூல்; ஈரானுக்கு 60 நாடுகள் எதிர்ப்பு

பிரஸ்ஸல்ஸ்: சர்வதேச கடல் வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் சென்றுவர கட்டணங்கள் அல்லது சுங்க வரிகள் வசூலிக்க முயலும் ஈரானின் நடவடிக்கைக்கு எதிராக, 60-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்று திரண்டுள்ளன.மேற்காசியாவில் உள்ள ஈரான் மற்றும் ஓமன் இடையே அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தி உலகிலேயே மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து வழித்தடமாகும். கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் தொடங்குவதற்கு முன், உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு தேவைகளில் ஐந்தில் ஒரு பங்கு இந்த ஜலசந்தி வழியாக தான் கொண்டு செல்லப்பட்டது.தற்போது அமெரிக்கா உடனான போரால் ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்துள்ள ஈரான், தன் முழுக் கட்டுப்பாட்டையும் அங்கு நிலைநாட்டி வருகிறது. மேலும், இந்த வழியைப் பயன்படுத்தும் கப்பல்கள் முறையான கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் ஈரான் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.ஈரானின் இந்த நடவடிக்கைக்கு எதிராக, 60-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்று திரண்டுள்ளன. சர்வதேச கடல் சட்டங்களின்படி கடல் வழிப் போக்குவரத்தின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என, இந்த நாடுகள் திட்டவட்டமாக எச்சரித்துள்ளன.ஐரோப்பிய யூனியனில் உள்ள அனைத்து உறுப்பு நாடுகளுடன் ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரிட்டன், கனடா, சிங்கப்பூர் உட்பட, 33 நாடுகளும் ஈரானுக்கு எதிராக திரும்பியுள்ளன. இது தொடர்பான, 60 நாடுகளின் கூட்டறிக்கையை ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுக் கொள்கை தலைவர் கஜா கல்லாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், 'சர்வதேச கடல் வழிப் போக்குவரத்து என்பது பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் உரியதல்ல; அது அனைவருக்கும் திறந்திருக்க வேண்டும். நீர்வழிகளை தங்களின் சுயலாபத்திற்காக வளைக்க பார்ப்பவர்களுக்கு இது ஒரு தெளிவான எச்சரிக்கையாகும். கட்டணங்கள் இல்லை, சுங்க வரியும் இல்லை என்ற எங்கள் உலகளாவிய கொள்கையில் இணைந்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி' என, குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

rajesh jayaraman
அக் 14, 2026 20:00

உங்களை ஒருவர் தாக்கினானால் என்ன செய்வீர்கள் ஒரு நிமிடம் சிந்தியுங்கள் போர் எங்கிருந்து ஆரம்பித்தது . யாரால் ஆரம்பித்தது .


Kasimani Baskaran
அக் 14, 2026 07:32

ஆபத்தான நாடுகள் வரிசையில் பாகிஸ்தான், துருக்கிக்கு அடுத்து ஈரான்தான் முதலில் நிற்கும்.


Palanisamy
அக் 14, 2026 06:57

இனிமேலாவது, இந்த 60 நாடுகளுக்கு புத்திவரட்டும். இந்தப் பட்டியலில் மேலும் பல நாடுகள் சேரும். "பாலை ஊற்றி பாம்பினை வளர்த்தாலும் நன்மையே, கடிக்கத்தானே வரும் அதை அடித்துக் கொல்லநேருமே " ஈரானின் இந்த மோசமான செயல்களை பார்க்கும் போது, இந்தப் பழைய பாடல் உடனே நியாபகத்திற்கு வருகின்றது.


அமைதி தூதர்
அக் 14, 2026 05:31

உண்டியல் குலுக்கி தர்மம் கேட்கலாம் ..


கிஜன்
அக் 14, 2026 05:24

விட்வகுரு ஒவர்டைம் பார்க்கவேண்டிய நேரம்


pujan
அக் 14, 2026 07:50

கிஜன் எங்கே உன் அலுமினிய தட்டு


சமீபத்திய செய்தி