உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தொடரும் வன்முறை சம்பவங்கள்; அமெரிக்க கடற்படையினர் கட்டுப்பாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம்!

தொடரும் வன்முறை சம்பவங்கள்; அமெரிக்க கடற்படையினர் கட்டுப்பாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: போராட்டங்கள் நான்காவது நாளை எட்டியுள்ள நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸில் அமெரிக்க கடற்படையினர் 700 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சட்டவிரோதமாக குடியேறிய 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு போராட்டம் வெடித்தன. போராட்டத்தை கட்டுப்படுத்த என்.ஜி., எனப்படும் தேசிய காவல் படை போலீசாரை அனுப்பி வைத்து டிரம்ப் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.இந்நிலையில் அதிபர் டிரம்ப் அரசின் செயல்பாடுகளால் ஆத்திரமடைந்த கலிபோர்னியா கவர்னர் கவின் நியூஸ்கம் உள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனாலும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த, நூற்றுக்கணக்கான அமெரிக்க கடற்படையினர் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.700 கடற்படையினர் லாஸ் ஏஞ்சல்ஸிற்கு அனுப்பப்பட்டு உள்ளதாக அமெரிக்காவின் வடக்கு கட்டளைப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த கடற்படையினர், ஏற்கனவே அங்குள்ள தேசிய பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் ஆகியோர், கடற்படையினரின் வருகை தேவையற்றது என்றும், இது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்றும் வன்மையாக கண்டித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Bhaskaran
ஜூன் 10, 2025 20:51

சிறுபான்மை கள்ளத்தனமாககுடியேறிகள் மதத்தின் துணை கொண்டு தீவிரவாதத்தை மறைமுகமாக வளர்ப்பதை ஒடுக்கும் நோக்கத்தில் நடவடிக்கை


V.Mohan
ஜூன் 10, 2025 19:54

பங்களாதேஷின் புதிய இராணுவ ஜெனரல் ஒருவர், நாங்கள் கொல்கத்தாவை கைப்பற்றுவோம் என்று அடாவடியாக பேசியபோது மேற்கு வங்க முதல்வர் மம்முதா பேகம் பானெர்ஜி பயந்து போய் இந்திய ராணுவத்தை புகழ்ந்து பேசிவிட்டு பின்னர் பங்களாதேஷ ராணுவ அதிகாரிக்கு எச்சரிக்கை தந்தார். இந்த பிரச்சனை எதனால் வந்தது ?? இந்த மேடம் ரோஹிங்கிய & பங்களாதேஷ் முஸ்லிம்கள் கணக்கற்றவர்களுக்கு அடையாள அட்டை, வோட்டர் ஐ டி போன்றவற்றை கொடுத்தீர்களே , அமெரிக்காவில் கழகம் போராட்டம் ஆகியவை செய்கிறார்களே அதுமாதிரி மேற்கு வங்கத்தில் செய்தால் உங்களால் என்ன செய்ய முடியும் ?? அவனவன் நாட்டிலேயே இருந்து போராடனும். இன்னொருத்தன் நாட்டிலே போய் சட்டத்தை மதிக்காமல் போராட்டம் பண்ணினா அர்ரெஸ்ட் தான் அடி thaan.


P. SRINIVASAN
ஜூன் 10, 2025 14:27

மணிப்பூர் யார் கட்டுப்பாட்டில்?


Mecca Shivan
ஜூன் 10, 2025 11:25

அந்த நாற்பத்திநான்கு நபர்கள் எந்த நாட்டினை சேர்ந்தவர்கள் என்ற விபரங்கள் தெரியாதா ?


naranam
ஜூன் 10, 2025 11:08

இத்தகைய துணிச்சலான நடவடிக்கைகள் மூலம் இந்தியாவில் உள்ள சட்ட விரோத கள்ளக் குடியேறிகளை உடனே வெளியேற்ற வேண்டும். தேசப் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் பங்களாதேஷ் முஸ்லிம்கள் ரோஹிங்யாக்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் போன்றோரை உடனுக்குடன் நாடு கடத்துவது மிக நல்லது.


Palanisamy Sekar
ஜூன் 10, 2025 10:54

ஆச்சர்யமான விஷயம். கள்ளக்குடியேறிகளை வெளியேற்றுவது என்பது உள்நாட்டு பாதுகாப்புக்கு உகந்தது. ரோஹாங்கிய முஸ்லிம்களை பாவம் பார்த்து ஏற்றுக்கொண்ட நாடுகளில் பல சொல்லொணா துன்பங்களுக்கு ஆளாகி நிற்கின்றன என்பது ஒரு உதாரணம் வன்முறைக்கு துணிந்தவர்களால் ஒருபோதும் அந்த நாட்டு மக்களுக்கு பாதுகாப்பில்லை. துணிச்சலான நடவடிக்கையை இன்னும் மேற்கொள்ள வேண்டும்.


புதிய வீடியோ