உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / யூதர்கள் மீதான தாக்குதல்: ஆஸி., அரசுக்கு இஸ்ரேல் பிரதமர் கண்டனம்

யூதர்கள் மீதான தாக்குதல்: ஆஸி., அரசுக்கு இஸ்ரேல் பிரதமர் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெல் அவிவ்: ஆஸ்திரேலியாவில் யூதர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்நாட்டு அரசு யூத எதிர்ப்புவாதத்தை தூண்டிவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவின் பாண்டை கடற்கரையில் யூத மதத்தினரின் 'ஹனுக்கா' எனும் பண்டிக்கை கொண்டாட்டம் நடந்த பகுதியில் புகுந்த இரு பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டதில், பொதுமக்கள் 16 பேர், பயங்கரவாதி ஒருவன் என மொத்தம் 17 பேர் உயிரிழந்தனர்.

தந்தை, மகன் அரங்கேற்றிய படுபாதகம்

ஆஸ்திரேலியாவில் நடந்த இந்த படு பாதக செயலை அரங்கேற்றிய நபர்கள், தந்தை, மகன் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில், தந்தை நேற்றைய சம்பவத்தில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டு விட, மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, '' உங்களது கொள்கை, யூத எதிர்ப்பு என்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது'' எனத் தெரிவித்து இருந்தேன். யூத எதிர்ப்பு கொள்கை என்பது புற்றுநோய் போன்றது. தலைவர்கள் மவுனமாக இருந்து நடவடிக்கை எடுக்காத போது உலகம் முழுவதும் பரவும் இவ்வாறு அவர் கூறினார்.ஹமாஸ் - இஸ்ரேல் இடையிலான மோதலின் போது, பாலஸ்தீனத்தை தனி நாடாக ஆஸ்திரேலியா அங்கீகரித்தது. இதற்கு இஸ்ரேல் பிரதமர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இதனை மேற்க்கோள் காட்டி, பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

bharathi
டிச 15, 2025 10:46

Israel has to turn towards PAK


Senthoora
டிச 15, 2025 10:08

நெதன்யாகுவும் சும்மா மொசாட்டுகளை வைத்து, அமெரிக்காவின் கைக்கூலி வேலை செய்வதை நிறுத்தணும்,


SUBBU,MADURAI
டிச 15, 2025 08:31

கிறிஸ்தவர்களுக்கு ஏன் இந்துக்களின் மீதும் யூதர்களின் மேல் வெறுப்பு இருக்கிறது என்பதை வரலாற்று ஆய்வு தரவுகளின் படி பார்ப்போம்.


N.Purushothaman
டிச 15, 2025 07:38

உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வதில் அந்த மக்கள் கைதேர்ந்தவர்கள் ....கேட்டால் மதம் தான் புண்ணியம்ன்னு வெங்காய விளக்கம் வேற ....


RAMAKRISHNAN NATESAN
டிச 15, 2025 07:33

இந்த விஷயத்தில் ஆஸி., ஐரோப்பாவின் நிலைமையைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் ........


Senthoora
டிச 15, 2025 05:11

இந்த சம்பவத்தை செய்த அப்பாவும் மகனும் நல்லவன் இல்லை. . இஸ்ரேல் பலமுறை ஆஸ்திரேலியர்கள் பாஸ்போர்ட் hack செய்து திருடி, பலநாடுகளுக்கு அந்த பாஸ்போர்ட்டில் இஸ்ரேலியர் சென்று பலர் எதிரிகளை போட்டுத்தள்ளி, ஆஸ்திரேலியாவுக்கு களங்கத்தை ஏட்படுத்தியபின், இசுரேலியர்களுடன் உறவு திருப்திகரமாக இருக்கவில்லை.


kmathivanan
டிச 15, 2025 05:03

அப்பாவி மக்களை ஹமாஸ் நாடு புகுந்து கொன்றதுதான் அதுக்கெல்லாம் ஆரம்பம் . எப்போதும் தன் தப்பை மறுத்து அதற்கு எதர்வினை பற்றி பேசுவதுதான் அமைதிதார்க்கம்


Kasimani Baskaran
டிச 15, 2025 04:12

இனவெறிக்கும் இன வெறுப்புக்கும் மருந்து கிடையாது.


Skywalker
டிச 14, 2025 23:48

You may hate israel, but you may not hate jews, it's like hating muslims in common for pakistan, it's unacceptable


morlot
டிச 14, 2025 23:11

When you,netanyou killed nearly 80000 innocent babies pregnant women,old persons,you didnt feel that they are human beings. Now when few jews were killed ,you are barking.For me lives if jews are superior where as other races are not inferior.All are same.But for you only jews and white people are allowed to live in this world


சமீபத்திய செய்தி