உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்கா இறையாண்மையை இழந்துவிட்டது: தேர்தல் தோல்வி குறித்து அதிபர் டிரம்ப் விரக்தி

அமெரிக்கா இறையாண்மையை இழந்துவிட்டது: தேர்தல் தோல்வி குறித்து அதிபர் டிரம்ப் விரக்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்கா கொஞ்சம் இறையாண்மையை இழந்து விட்டது. அமெரிக்கா இப்போது ஒரு கடினமான முடிவை எதிர்கொள்கிறது என நியூயார்க் நகர மேயர் தேர்தலில் தோல்வி குறித்து அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் மியாமியில் நடந்த கூட்டத்தில் அதிபர் டிரம்ப் பேசியதாவது: அமெரிக்க மக்கள் ஒரு வருடத்திற்கு முன்பு என்னை தேர்ந்தெடுத்ததன் மூலம் இறையாண்மையை மீட்டெடுத்தனர். தற்போது நியூயார்க்கில் நாங்கள் சிறிது இறையாண்மையை இழந்தோம். கம்யூனிசத்திற்கும், பொது அறிவுக்கும் இடையிலான ஒரு தேர்வை எதிர்கொள்கிறது.நாங்கள் அதையும் எதிர்கொள்வோம். தனது நிர்வாகம் ஒரு பொருளாதார அதிசயத்தை நிகழ்த்தி வரும் அதே வேளையில், தனது எதிர்ப்பாளர்கள் சட்டவிரோத வெளிநாட்டினருக்கும் அதிக செலவினங்களை விரும்புகிறார்கள். நாங்கள் அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் அமெரிக்க குடும்பங்களுக்கு அதிக சம்பளத்தை விரும்புகிறோம். கம்யூனிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள், சோசலிஸ்டுகள் மற்றும் உலகமயமாக்கல்வாதிகள் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் பேரழிவைத் தவிர வேறு எதையும் வழங்கவில்லை. இப்போது நியூயார்க்கில் ஒரு கம்யூனிஸ்ட் எப்படிச் செய்கிறார் என்பதைப் பார்ப்போம். இவ்வாறு அதிபர் டிரம்ப் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

தலைவன்
நவ 07, 2025 12:31

இதிலிருந்து மோடிஷாவும் கூட பாடம் கற்று கொள்ள வேண்டும் ?? வாக்கு வித்யாசம் எல்லாம் மிக அதிகம். நவம்பர் பதினான்கில் அதிர்ச்சி வைத்தியம் காத்திருக்கு??


Kulandai kannan
நவ 06, 2025 20:11

டிரம்பின் கவலை நியாயமானதே.


தலைவன்
நவ 07, 2025 13:56

வெளியேற்றிட வேண்டியதுதான்.


Senthoora
நவ 06, 2025 14:43

வரி போட்டால் தன் மக்களுக்குத்தான் பாதகம் என்று புரியவில்லை


V.Mohan
நவ 06, 2025 12:34

டிரம்ப் சொல்ல வந்ததை முழுமையாக சொல்லவில்லை. கண்ணியம் காத்தார் என தோன்றுகிறது. இந்தியாவையும் அதன் கலாசாரத்தையும் குழிதோண்டி புதைத்து, வெறுக்கத்தக்க படங்களை எடுத்து பெயர் பெற்றவர் மீரா நாயர். ஆப்பிரிக்க தேசத்தில் குடி பெயர்ந்து அங்கு முஸ்லீம் நபர் ஒருவரை மணந்து பின்னர் குடியுரிமைக்காக தஞ்சம் புகுந்து தீவிர இடதுசாரிகளின் ஆதரவில் அமெரிக்க பிரஜையாக குடியுரிமை பெற்றவர் இவர். அமெரிக்காவை முன்னேற்றுவதற்கான எந்த செயலையும் செய்யாது, அமெரிக்க பிரஜையாக குடியுரிமையை எப்படியோ பெற்ற வந்தேறிகளை அதிபர் டிரம்ப் எதிர்ப்பதில் அதிசயம் இல்லை வந்தேறிகளை இந்தளவு அமெரிக்கர்கள் ஆதரிப்பது, தேசத்திற்கு ஆபத்து என உணரும் டிரம்ப், இந்த இடைத்தேர்தல் முடிவு தன்மீதுள்ள கோபத்தால் நடந்துள்ளது என்பதை முழுமையாக உணர்ந்தால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர இயலும். மக்கள் மனநிலையை அவர் உணர வேண்டும்.


RAMESH KUMAR R V
நவ 06, 2025 12:17

அதிகார துஸ்பிரயோகம் அதுவே தோல்வி.


Rathna
நவ 06, 2025 11:25

மர்ம நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை எண்ணி ட்ரம்ப் கவலை படுகிறார். லண்டனில் சாதிக் கான் செய்ததை போல தீவிரத்தை ஆதரித்து கலவரத்தை தூண்டி பிரச்சனை ஏற்படுத்தியதை போல நியூயார்க் நகரமும் மாறுமோ என்பது எல்லாருக்கும் கவலைதான்.


தலைவன்
நவ 07, 2025 12:34

அடேங்கப்பா?? உலக நடிப்புடா சாமி?? கிளம்பு கிளம்பு போயி அமெரிக்காவை காப்பாத்து??


Nagercoil Suresh
நவ 06, 2025 11:20

"பூனை கண்ணை அடைத்துவிட்டு புன்சிரிப்போடு நினைக்குமாம் உலகம் இருண்டு விட்டது என" அதே போல தான் இவரும் ஒரு போர்டும் கொண்டு அலைகிறார். இது வரை யாருக்கு பயன் கிடைத்தது என கேட்டால் அமெரிக்கார்களே முகம் சுளிக்கிறார்கள்..எல்லா பொருள்களையும் அமெரிக்காவிலே தயாரித்தால் அந்த போர்டுக்கு பயன் உண்டு அல்லது நண்பர்களாய் இருக்கும் நாடுகளை பகைத்து தான் மிச்சம்...


Modisha
நவ 06, 2025 10:17

டிரம்ப் மேல் உள்ள அதிருப்தி தான் வெற்றி பெற்றது . மம்தானி அல்ல .


KRISHNAVEL
நவ 06, 2025 09:46

விவரம் தெரியாதவர், ஓட்டு திருட்டு ,வெற்றி திருட்டு னு புதுசா எங்க பப்பு மாதிரி சுவாரசியமா பேசத்தெரியல


Apposthalan samlin
நவ 06, 2025 10:27

அங்கெ EVM இல்லை


Venkatesan
நவ 06, 2025 11:27

நல்ல அரசாங்கம் யார் கொடுத்தாலும் மக்கள் அவர்களை கண்டிப்பாக தேர்ந்தெடுப்பார்கள்.


Ramesh Sargam
நவ 06, 2025 09:44

இன்று அமெரிக்காவில் அதிபர் ட்ரம்பின் புலம்பல் சத்தம். அடுத்த சிலநாட்களில் இந்தியாவின் பிஹாரில் காங்கிரஸ் தோல்வி அடைந்தவுடன் ராகுல், சோனியா இவர்களின் புலம்பல் சத்தம் அதிகமாக இருக்கும். ஆனால் ட்ரம்பை மெச்சவேண்டும். அவர் வோட்டு திருட்டு என்று கூறவில்லை. தோல்வியை ஒப்புக்கொண்டிருக்கிறார். மாறாக இந்தியாவில் ராகுல், சோனியா போன்றவர்கள் தேர்தல் கமிஷன் மீதும், மத்திய அரசின் மீதும் பல குற்றங்களை அடுக்குவார்கள்.


Senthoora
நவ 06, 2025 14:40

2026 யிலும் தொடருமா, அல்லது புதுசா யாராவது புலம்புவாங்களா?


தலைவன்
நவ 07, 2025 12:37

புலம்ப போவது நீங்களும் உங்க கூட்டமும்தான். மக்கள் தெளிவாக முடிவு எடுத்து விட்டார்கள். தொங்கு கூட்டணி குருமா ஆட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள் தனி பெரும்பான்மையுடன் தேஜஸ்வி முதல்வராவார். அவர் மட்டும்தான் தனிப்பெரும்பான்மைக்கே போட்யிடுகிறார் என்பது கூடுதல் தகவல்.


புதிய வீடியோ