உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடா அமைச்சராக அனிதா ஆனந்த் பதவியேற்பு

கனடா அமைச்சராக அனிதா ஆனந்த் பதவியேற்பு

ஒட்டாவா: வட அமெரிக்க நாடான கனடாவில், சமீபத்தில் பார்லி., தேர்தல் நடந்தது. இதில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான ஆளும் லிபரல் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. தொடர்ந்து, அமைச்சரவையை பிரதமர் மார்க் கார்னி மாற்றி அமைத்தார். வெளியுறவு அமைச்சராக இருந்த மெலினி ஜோலிக்கு பதில், ராணுவ அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்தை நியமித்தார்.இந்நிலையில், கனடா அமைச்சரவை நேற்று பதவியேற்றது. பகவத் கீதை மீது உறுதிமொழி ஏற்று, வெளியுறவு அமைச்சராக அனிதா ஆனந்த் பதவியேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

m.arunachalam
மே 15, 2025 12:34

தற்போது அவர் கனடா நாட்டு பிரஜை. ஏற்றுக்கொண்ட பதவிக்கேற்றவாறு பொறுப்புடன் நடக்க வேண்டும் . வாழ்த்துக்கள் .


S.Sathyan [Canada]
மே 15, 2025 04:34

மகாத்மா காந்தி உடன் இங்கிலாந்து சென்று வட்ட மேசை மகா நாட்டில் பங்கு பற்றியவர் தமிழ் நாட்டை சேர்ந்த திரு V A சுந்தரம் அவர்கள் : பெனாரஸ் இந்து பல்கலை கழகம் அமைப்பதில் பெரும் பணி செய்தவர் அவருடைய மகன் டாக்டர் விவேகானந்த் அவரது இரண்டாவது மகள் தான் கனடா வெளி விவகார அமைச்சர் .....அனிதா ஆனந்த் என அழைக்க படும் அனிதா இந்திரா விவேகானந்