உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியர்கள் மவுசு உயருது ., அமெரிக்க பொருளாதார அமைப்பில் தலைமை பொறுப்பு

இந்தியர்கள் மவுசு உயருது ., அமெரிக்க பொருளாதார அமைப்பில் தலைமை பொறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெக்ஸாஸ்: அமெரிக்க பொருளாதார அமைப்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவருக்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. உ.பி., மாநிலத்தில் பிறந்து பின்னர் அமெரிக்காவில் குடியேறியவர் அருண் அகர்வால். இவர் காஸியாபாத்தில் உள்ள கல்லூரியில் எம்பிஏ படித்து அமெரிக்காவில் பொருளாதார ரீதியிலான பல்வேறு பட்டங்களை பெற்றவர். பிரபல நெக்ஸ்ட் என்ற வர்த்தக நிறுவன தலைவர் ஆவார் . இவர் டெக்ஸ்டைல்ஸ், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறைகளில் ஜொலித்து வருபவர். டெக்ஸாஸ் கவர்னர் அபோட் சமீபத்தில் இந்தியா வந்தபோது அந்த குழுவிலும் அகர்வால் இடம் பெற்றிருந்தார். தற்போது அமெரிக்காவின் டெக்ஸாஸ் பொருளாதார வளர்ச்சி கழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை இம்மாகாண கவர்னர் கிரக் அப்போட் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அகர்வாலை வெகுவாக பாராட்டி உள்ளார். இதில் கூறப்பட்டிருப்பதாவது:

டெக்ஸாஸ் கவர்னர் பாராட்டு

இந்த நியமனம் டெக்சாஸின் பன்முகத்தன்மைக்கான அர்ப்பணிப்பை காட்டுகிறது. மற்றும் முக்கிய பொருளாதார பிரிவுகளில் இந்திய அமெரிக்கத் தலைவர்களின் வளர்ந்து வரும் செல்வாக்கை எடுத்துக்காட்டுகிறது. வணிகம், மற்றும் சர்வதேச உறவுகளில் அகர்வாலின் விரிவான அனுபவம், உலகளாவிய பொருளாதார சக்தியாக டெக்சாஸின் நிலைப்பாட்டை மேலும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். பொறுப்பை பெற்றுள்ள அகர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்த பொறுப்பை ஏற்று டெக்சாஸின் லட்சிய பொருளாதார நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதில் நான் பெருமைப்படுகிறேன். நமது மாநிலத்தின் பலதரப்பட்ட திறமைகள் மற்றும் உலகளாவிய தொடர்புகளை பயன்படுத்தி பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், உலக அரங்கில் டெக்சாஸின் முக்கியத்துவத்தை வலுப்படுத்தும் பணியை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Barakat Ali
ஆக 26, 2024 14:16

இடவொதுக்கீட்டை புறக்கணித்துவிட்டு, நிபுணர்களை பாஜக அரசு தன்னிச்சையாக நியமிப்பதா என்று இந்தியாவில் குரல் உயர்ந்தது .... பாஜக அரசும் பணிந்தது ..... அதே போல அமெரிக்க அரசும் நிபுணர்களை ஒதுக்கிவிட்டு இடவொதுக்கீட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாமே ......


Sampath Kumar
ஆக 26, 2024 10:53

மதிப்பு நல்லாவே உயர்ந்து உள்ளது அது போல வெற்பும் உயர்ந்து உள்ளது உதாரணம் இந்திய டாக்டர் கொலை இதுக்கு என்ன சொல்லுறீங்க ? உலகம் ஏங்கும் உள்ள இந்தியர்கள் தங்களின் திறமையால் முன்னேறி வருகிறார்கள் அனால் அதே சமயம் அந்த நட்டு மக்களின் வெறுப்பையும் சம்பாதித்து வருவது தான் முக்கியமான விஷயம் இதுக்கு இந்திய அரசே காரணம்


Kumar Kumzi
ஆக 26, 2024 13:05

ஓசிகோட்டருக்கு அடிமையான கொத்தடிமை கூமுட்டைங்க வெறுப்பை இப்பிடி தான் வெளிப்படுத்துவானுங்க


Barakat Ali
ஆக 26, 2024 14:14

அறிவில் சிகரமாக இருக்கும் அன்பர் பேரறிஞர் சம்பத்து அவர்கள், இப்போது எப்படி இந்திய அரசு காரணம் என்று விளக்குவார் ....


ஆரூர் ரங்
ஆக 26, 2024 10:44

தமிழக பொருளாதார ஆலோசனை குழுவிலும் அன்னியர் இல்லையா? மூன்று லட்சம் கோடி எக்ஸ்ட்ராவா கடன் வாங்க வைக்கவில்லையா? உலகவங்கி கட்டளைகளை மன்மோகன் சிரமேற்கோண்டு நிறைவேற்றினாரே. ஆக அன்னிய ஆலோசனை நல்லதே.


சமீபத்திய செய்தி