உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆசாத் ஓடிவிட்டார்: போரை முடிவுக்கு கொண்டு வர புடினுக்கு டிரம்ப் அறிவுரை

ஆசாத் ஓடிவிட்டார்: போரை முடிவுக்கு கொண்டு வர புடினுக்கு டிரம்ப் அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ''சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் நாட்டை விட்டு தப்பியோடிய நிலையில், உக்ரைன் மீதான போரை ரஷ்யா அதிபர் புடின் முடிவுக்கு கொண்டு வர வேண்டும், '' என அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பஷர் அல் ஆசாத் சிரியாவில் இருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதுவரை அவரை பாதுகாத்து வந்த புடின் தலைமையிலான ரஷ்யா, அவரை பாதுகாக்கவில்லை. சிரியா மீதான ஆர்வத்தை ரஷ்யா விட்டுவிட்டது. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை ஆறு லட்சத்தை தாண்டி உள்ளது. இந்த போர் துவங்கி இருக்கக்கூடாது. இத்தனை நாட்கள் நீடிக்கவும் கூடாது.உக்ரைன் போர் மற்றும் மோசமான பொருளாதாரம் காரணமாக ரஷ்யா பலவீனமாக உள்ளது. இஸ்ரேல் தாக்குதல் மற்றும் அதன் வெற்றி காரணமாக ஈரானும் பலவீனமாக உள்ளது. போரை நிறுத்த ஜெலன்ஸ்கியும் உக்ரைனும் ஒப்பந்தம் போடவேண்டும். அவர்கள் ராணுவ வீரர்கள் மற்றும் சிவிலியன்கள் என நான்கு லட்சம் பேரை இழந்துள்ளனர். அங்கு உடனடியாக போரை நிறுத்தி பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும். தேவையில்லாமல் ஏராளமான உயிர்கள் வீணாகி உள்ளன. பல குடும்பங்கள் சிதைந்துள்ளன. இது தொடர்ந்தால், நிலைமை இன்னும் மோசமாக தான் அமையும். புடினை எனக்கு நன்கு தெரியும். அவர் செயல்பட வேண்டிய நேரம் இது. இதற்கு சீனா உதவலாம். உலகம் உற்று கவனிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

M Ramachandran
டிச 08, 2024 19:50

இப்போது சொல்வது நியாயம் தான். ஆனால் கெலென்ஸ்கியை உசுபேத்தியவன் உங்கள் ஆள் தானே. அவன் தானே கண்டிக்கபட வேண்டியவன் ரஸ்சிய பொருளாதாரம் ஆட்டம் கண்டாதாலே உங்களுக்கு ஆனந்தம் தானே.


Ramesh Sargam
டிச 08, 2024 19:45

ட்ரம்ப் நோபல் அமைதி பரிசுக்கு திட்டம் வகுக்கிறார் போல தெரிகிறது.


N Sasikumar Yadhav
டிச 08, 2024 18:45

ஏற்றுக்கொள்ள கூடிய அறிக்கை இது . உடனடியாக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தால் நன்றாக இருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை