உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்; பொருளாதார தடை விதிக்குமா அமெரிக்கா?

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்; பொருளாதார தடை விதிக்குமா அமெரிக்கா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில், அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க, அமெரிக்காவில் பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப் தலைமையிலான புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்திய அமெரிக்கர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இடைக்கால அரசு

நம் அண்டை நாடான வங்கதேசத்தில், மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, கடந்த ஆகஸ்டில் அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டுக்கு தப்பி வந்தார். அப்போது நடந்த வன்முறை சம்பவங்களில், ஹிந்து கோவில்கள் தாக்கப்பட்டதோடு ஹிந்துக்கள் மீதும் தாக்குதல்கள் நடந்தன. இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது. ஹிந்துக்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி இடைக்கால அரசை வலியுறுத்தியது. அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இவர், அமெரிக்காவின் 47வது அதிபராக, அடுத்த ஆண்டு ஜன., 20ல் பதவியேற்க உள்ளார். தேர்தல் பிரசாரத்தின் போதே, வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தாக்கப்பட்டதற்கு டிரம்ப் கண்டனம் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில், அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க, டிரம்ப் தலைமையிலான புதிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்திய அமெரிக்கர்கள் வலியுறுத்தி உள்ளனர்.இது குறித்து, இந்திய அமெரிக்க டாக்டர் பாரத் பராய் கூறியதாவது:அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், தைரியமானவர். வங்கதேசத்தில் ஹிந்து கோவில்கள் மற்றும் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அவர் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்தார். டிரம்ப் தலைமையிலான புதிய அரசு, வங்கதேசத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.

நடவடிக்கை

இது தொடர்பாக, அமெரிக்க எம்.பி.,க்களை சந்தித்து நாங்கள் வலியுறுத்துவோம். மீது பொருளாதார தடை போன்ற நடவடிக்கைகளை டிரம்ப் நிர்வாகம் எடுக்க வேண்டும். வங்கதேசம் ஆடை ஏற்றுமதியை பெரிதும் நம்பி இருக்கிறது. இதற்கு தடை விதித்தால் அந்நாட்டு மக்களின் நிலை என்னவாகும்?முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசை, வங்கதேச ராணுவம் கட்டுப்படுத்துகிறது. அந்நாட்டில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால், இந்திய அரசும் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kasimani Baskaran
நவ 17, 2024 07:24

பைடன் வைத்த ஆள்தான் இன்றைய குறுக்குவழியில் வந்த பிரதமர். ஆகவே பைடன் பதவியில் இருக்கும் வரை ஒன்றும் நடக்காது. பெரும்பான்மை இஸ்லாமியர்கள் இருக்கும் ஊரில் வேறு மதத்தினர் கண்டிப்பாக வாழ வாய்ப்பில்லை. வங்கதேசத்தை விட ஸ்விட்ஸர்லாந்தை நினைத்தால் நெஞ்சு பதைபதைக்கிறது. கொடிகட்டிப்பறக்கும் ஒரு நாடு திவாலாகப்போகிறது. ரஷ்யா அணுகுண்டு போட்டுத்தான் ஐரோப்பா அழியவேண்டும் என்று இல்லை. புலம்பெயர்ந்த மனித குண்டுகளே போதும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 17, 2024 06:50

இந்தியாவில் சிறுபான்மையினர் உடன் ஏற்பட்ட பூசல்களையும், பங்களாதேஷில் சிறுபான்மையின ஹிந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களையும் எப்படி ஒப்பிட முடியும் ???? உதாரணமாக குஜராத் கலவரம் ஏற்படக்காரணம் கரசேவகர்கள் பலர் உயிருடன் எரிக்கப்பட்ட நிகழ்வாகும் ..... ஆனால் பங்களாதேஷ் ஹிந்துக்கள் அது போன்ற இழிசெயல்கள் எதையுமே செய்யவில்லையே ???? வாழும் நாட்டு பெரும்பான்மையினருடன் சுமுகமாகத்தானே இருந்தார்கள் ????


Sathyanarayanan Sathyasekaren
நவ 17, 2024 04:03

இது வரை இப்படி ஒரு தடையை விதிக்க கூறாத இந்திய இந்துக்களுக்கு, இந்திய இந்து அரசியல் வியாதிகளுக்கு சொரணை இல்லை என்பது நிரூபணமாகிறது.


Kundalakesi
நவ 17, 2024 03:57

இந்தியர்கள் வங்கதேசத்து ஆடைகளை புறக்கணிக்க வேண்டும். அதை விற்பனை செய்ய யாருமே ஆசை பட கூடாது


அப்பாவி
நவ 17, 2024 01:11

அமெரிக்கா எதுக்கு? நம்ம அதானியை உட்டு கரண்ட் கட் பண்ணலாமே. இங்கேருந்து பிற ரயிலை நிறுத்தலாமே. நமக்கு மட்டும் துட்டு வந்துரணும். அமெரிக்கா தடை விதிக்கணுமா?


முக்கிய வீடியோ