உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நேபாளத்தில் பனிச்சரிவு; மலையேற்ற வீரர்கள் 10 பேர் மாயம்

நேபாளத்தில் பனிச்சரிவு; மலையேற்ற வீரர்கள் 10 பேர் மாயம்

காத்மாண்டு; நேபாளத்தில் உள்ள ஹிம்லுங் ஹிமால் மலைப்பகுதியின் அடிவார முகாமில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி குறைந்தது 10 பேர் காணாமல் போயுள்ளனர். தேடும் பணி முழு வீச்சில் நடக்கிறது. திபெத் எல்லையை ஒட்டியுள்ள நேபாளத்தின் மனங் மாவட்டத்தில் உள்ள 7,126 மீட்டர் உயரமுள்ள ஹிம்லுங் ஹிமால் மலைப்பகுதி அமைந்துள்ளது. இங்கு மலைப்பகுதியின் அடிவார முகாமில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி குறைந்தது 10 பேர் மாயமாகினர்.காணாமல் போன 10 பேரில் மலையேற்ற வீரர்கள் மற்றும் முகாம் சமையல் பணியாளர்கள் உள்ளிட்ட உதவியாளர்கள் அடங்குவர். நேபாள சுற்றுலாத்துறை மற்றும் மலையேற்ற முகமை அமைப்புகள் நிலைமையைக் கண்காணித்து, காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகளில் சிக்கல் நீடிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
செப் 27, 2026 16:41

'பட்ட. காலிலே. படும்' என்பது. போல. அந்த. மலைத்தொடர். மிகுந்த. அபாய. பகுதியாக. உள்ளது கூடுமானவரை இந்த. சீசனில். மலையேற்றத்தைத். தவிர்க்கலாம் சாகசத்தைவிட. உயிர். முக்கியமில்லையா ?


ஜெகதீசன்
செப் 27, 2026 13:05

அப்படி மலை ஏறாவிட்டால் தான் என்ன?