உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிளைதுபாய் விமானத்தில் நடந்த சம்பவம்; முழுமையான விசாரணைக்கு குழு அமைத்தது யுஏஇ

பிளைதுபாய் விமானத்தில் நடந்த சம்பவம்; முழுமையான விசாரணைக்கு குழு அமைத்தது யுஏஇ

துபாய்: பிளைதுபாய் விமானத்தில் நடந்த பயங்கர சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைக்கு ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) உத்தரவிட்டுள்ளது.துபாயில் இருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்ற பிளைதுபாய் விமானத்தை நடுவானில் விபத்துக்குள்ளாக்க முயன்ற சம்பவம் குறித்து, பயங்கரவாதச் சதி அல்லது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதலா என்ற கோணத்தில் விசாரணையை யுஏஇ துவங்கி உள்ளது. இந்த சம்பவத்தில் பயங்கரவாத அமைப்புகளின் தொடர்பு உள்ளதா, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி அல்லது தூண்டுதல் உள்ளதா என்பதை ஆராய யுஏஇ அரசு குழு அமைத்து உள்ளது.ஐக்கிய அரபு அமீரகத்தின் சிறப்புப் பொதுத்துறை வழக்கறிஞர் குழு இது தொடர்பான விரிவான விசாரணையை முடுக்கிவிட்டு உள்ளது. 'சர்வதேசச் சட்டங்களின்படி இந்த விவகாரத்தை விசாரிக்க தங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களையோ, வதந்திகளையோ பரப்ப கூடாது; விசாரணை முடிவுகள் விரைவில் வெளிப்படையாக அறிவிக்கப்படும்' என்று யுஏஇ அரசு தெரிவித்துள்ளது. விசாரணை முழுமையாக முடிந்து, அனைத்து உண்மைகளும் கண்டறியப்படும் வரை, இஸ்ரேல் நாட்டுக்கான தங்களின் அனைத்து விமானச் சேவைகளையும் பிளைதுபாய் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

MARUTHU PANDIAR
அக் 01, 2026 21:58

ஃபால்கம் பயங்கரவாதத்தில் மூர்க்க பயங்கரவாதிகள் குடும்பத்துடன் சுற்றுலா பயணம் சென்றவர்களை 26 ஆண்களை மட்டும் அவர்கள் இந்துக் கள் தான் என்பதை உறுதி செய்து கொண்டு அதாவது அந்த சடங்கு நடக்காதவர்கள் கொலை செய்தார்கள் அல்லவா? இந்த ஓமன் மூர்க்கன் தனது இசுலாமிய அடையாளத்தை மறைந்து விமானி பயிற்சி பெற்றான் என்று செய்திகள் வருகிறது.