உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மோசடி குற்றச்சாட்டு; வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் சொத்துக்கள் பறிமுதல்

மோசடி குற்றச்சாட்டு; வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் சொத்துக்கள் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: மோசடி குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் வங்கதேச கிரிக்கெட் முன்னாள் கேப்டன் ஷகிப் அல் ஹசன் சொத்துகளை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி., ஷகிப் அல் ஹசன். அந்த நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன். கடந்த ஆண்டு மாணவர் தலைமையிலான கிளர்ச்சியின் போது, கனடாவில் இருந்தவர், மீண்டும் வங்கதேசம் செல்லவில்லை.இதற்கிடையே, கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி ஐ.ஐ.எப்.சி., வங்கியின் சார்பாக ஷகிப் அல் ஹசன் உள்பட 4 பேரின் மீது ரூ.3 கோடி அளவிலான செக் மோசடியில் ஈடுபட்டதாக வங்கதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராகாததினால் ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து இருந்தது. தற்போது அவரது சொத்துகளை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடது கை ஆல்ரவுண்டரான இவர் வங்கதேச அணிக்காக 71 டெஸ்ட், 247 ஒருநாள் போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகளில் சிறப்பாக ஆடி, மொத்தம் 712 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

என்றும் இந்தியன்
மார் 25, 2025 17:38

முஸ்லீம் ஆட்சியில் இப்படி நீதிபதிகள் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு தீர்ப்பு கொடுக்கும்போது இந்து ஆட்சியில் மட்டும் நீதிபதிகள் இப்படி ஒருக்காலும் தடாலடியாக தீர்ப்பு கொடுப்பதேயில்லை. ஏன் செகுலர், tolerant பொறுமை பொட்டுக்கடலை தான் இந்து நீதிபதிகளுக்கு தெரிந்த ஒரே தீர்ப்பா


Petchi Muthu
மார் 25, 2025 16:12

இந்த மோசடி பேர்வழியை உள்ள பிடித்து போடுங்க.. நான் முந்திய காலத்தில் இவனது ரசிகராக இருந்தேன்.. என்று கடந்தாண்டு இவன் மீது ஊழல் குற்றச்சாட்டு பதியப்பட்டதோ அன்றே வெறுத்து விட்டேன் இந்த மோசடி அவரைப் பார்த்தாலே எரிச்சல் வருகிறது


முக்கிய வீடியோ