உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உறவை மேம்படுத்த விரும்பும் வங்கதேசம்: மோடிக்கு மாம்பழம் அனுப்பினார் முகமது யூனுஸ்

உறவை மேம்படுத்த விரும்பும் வங்கதேசம்: மோடிக்கு மாம்பழம் அனுப்பினார் முகமது யூனுஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: வங்கதேசத்தில் விளைச்சல் ஆகியுள்ள ஆயிரம் கிலோ எடை கொண்ட 'ஹரிபங்கா' மாம்பழங்களை பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் அனுப்பி வைத்துள்ளார்.வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான மாணவர் போராட்டத்தால், கடந்தாண்டு ஆகஸ்ட் 5ல் அவரது ஆட்சி கவிழ்ந்தது. அவர் இந்தியாவுடன் நல்ல நட்புறவை பேணியவர். அவர் பதவி இழந்து இந்தியாவில் தஞ்சமடைந்தார்.நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் தற்போது அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளது. யூனுஸ், சீனா மற்றும் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். கடந்த, 1971ல் பாகிஸ்தானில் இருந்து தனிநாடாக பிரிந்த பின், முதன் முறையாக பாகிஸ்தான் உடன் வர்த்தக உறவை ஏற்படுத்தியுள்ளார். இதன் காரணமாக இந்தியா வங்கதேசம் இடையிலான உறவு சிக்கலடைந்துள்ளது.இதனிடையே தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடந்த பிம்ஸ்டெக் மாநாட்டின் இடையே பிரதமர் மோடியை , முகமது யூனுஸ் சந்தித்து பேசினார். ஹசீனா அரசு கவிழ்ந்த பிறகு இரு தலைவர்களும் சந்தித்துக் கொள்வது இதுவே முதல்முறையாகும். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேம்படுத்த இந்தியா தயாராக உள்ளதாக மோடி தெரிவித்து இருந்தார். இரு நாட்டு பிரச்னைகளை ஆக்கப்பூர்வமான சூழ்நிலையில் விவாதிக்க தயாராக உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் தெரிவித்து இருந்தது.வங்கதேசத்தில் அதிகம் விளைச்சல் ஆகும் ஹிபங்கா மாம்பழங்களை அந்நாட்டு அரசு இந்தியத் தலைவர்களுக்கு பல தசாப்தங்களாக அனுப்பி வருகிறது. அந்த வகையில், இந்தாண்டும் இந்திய அரசுக்கு ஆயிரம் கிலோ எடை கொண்ட மாம்பழங்களை முகமது யூனுஸ் அரசு அனுப்பி வைத்துள்ளது. இவை நாளை இந்தியா வந்தடையும் என டில்லியில் உள்ள வங்கதேச தூதரகம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் திரிபுரா முதல்வர் மாணிக் சஹாவுக்கும் மாம்பழங்களை வங்கதேசம் அனுப்பி வைத்துள்ளது.இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் , அந்நாடு மாம்பழங்களை அனுப்பி வைத்துள்ளது என்பது உறவை சீர்படுத்த முயற்சி செய்வதை காட்டுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

venugopal s
ஜூலை 14, 2025 11:21

பதிலுக்கு நம் பிரதமர் வழக்கமாக எல்லோருக்கும் கொடுப்பது போல் இவருக்கும் அல்வா கொடுத்தாரா?


Iyer
ஜூலை 14, 2025 07:59

NOBEL PRIZE பெற்றவர்கள் 90% தன்னாட்டுக்கே தேசதுரோகியாக இருப்பான். அதில் இந்த யூனுஸ் ம் ஒருவன். நீதியாகவும், நேர்மையாகவும், ஊழல் இன்றி - ஷேக் ஹசீனா - பங்களாதேஷ் ஐ ஆண்டு கொண்டிருந்தார் இந்த ஊழல் மன்னன் யூனுஸ் - அமெரிக்கா கைக்கூலியாகி தன்னாட்டுக்கே துரோகம் செய்தான் பங்களாதேஷில் இன்று - நேர்மையாக தேர்தல் நடத்தினால் மீண்டும் ஷேக் ஹசீனா பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவது உறுதி


V RAMASWAMY
ஜூலை 14, 2025 07:34

பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் உள்ள உறவைத் துண்டித்தால் தான் பாரதம் வங்க தேசத்துடன் கை கோர்க்கலாம்.


Bhakt
ஜூலை 14, 2025 00:18

Bharat should divide good and evil and rule.


Saai Sundharamurthy AVK
ஜூலை 13, 2025 23:56

ஒருவேளை, இந்த மாம்பழங்களின் பின்னால் மம்தா, ராகுலின் சதி இருக்குமோ! அவர்கள் சொல்லித் தான் இந்த வேலையை இவர் செய்கிறாரா !!!! இதை சாக்காக வைத்து, மோடியை சமாதானப்படுத்தி ஊடுருவல்கார்களை இந்தியாவில் நிரந்தரமாக தங்குவதற்கு ஏற்பாடு செய்து விடலாம் என்று மட்டமான பிளான் போடுகிறாரா ?? காங்கிரஸின் சதியாகக் கூட இருக்கலாம். ஏனெனில் ராகுலும், யூனிசும் அமெரிக்க டீப் ஸ்டேட்டின் உறுப்பினர்கள் ஆயிற்றே !!!


ஈசன்
ஜூலை 13, 2025 23:46

பாகிஸ்தானுடன் உள்ள கறாறை பங்கதேஷிடமும் காட்ட வேண்டும். மேற்கு வங்கத்தில் உள்ள எல்லையோர மாவட்டதில் இந்துக்கள் மேல் நடத்தப்பட்ட தாக்குதல்களை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். யூசுப் கொடுக்கும் மாம்பழங்கள் இது போன்று நிகழ்வுகளை நீர்த்து போக வைத்துவிடும். பிரதமர் ராஜதந்திரிதான். இருந்தாலும் கவனமாக இருப்பது நல்லது .


Saai Sundharamurthy AVK
ஜூலை 13, 2025 23:44

ஆப்பரேஷன் சிந்தூர் நடக்கும் வரை என்ன திமிராக இருந்தார். தங்கள் நாட்டுக்கு சீனாவும், பாகிஸ்தானும் உதவுவார்கள் என்று இருமாப்புடன் , துருக்கியிலிருந்து ட்ரோன்களை வேறு வாங்கி குவித்து இந்தியாவை மிரட்ட முற்பட்டார். ஆனால், நிலைமை என்ன ஆனது. அந்த மூன்று நாடுகளின் ஐதங்களும், விமானங்களும், ட்ரோன்களும் இந்திய ராணுவ தளவாடங்களின் முன்னால் ஒன்றுமில்லாமல் போய் விட்டது. அந்த மூன்று நாடுகளும் இந்தியாவிடம் தோற்றுத் தான் போனது. அமெரிக்காவே ஆடிப் போய் விட்ட பிறகு வேறு வழியில்லாமல் இந்த பிராந்தியத்தில் இந்தியாவை விட்டால் பங்களாதேஷின் பாதுகாப்புக்கு வேறு நாடே கிடையாது என்கிற நிலைக்கு வந்து விட்டார். கூடவே, அவருக்கு இந்தியா மீது பயம் வேறு ஏற்பட்டிருக்கிறது. அது தான்... இப்போது பல்லை காட்டுகிறார்.....


Raja k
ஜூலை 13, 2025 23:38

வெற்றி வெற்றி மோடிக்கு வெற்றி, மோடியால் மட்டுமே இது முடியும், வங்கதேசத்து மாம்பழங்கள் மீண்டும் இந்தியாவுக்கு வந்தது, மாம்பங்கள் இந்தியாவுக்கு வர காரனமாக இருந்த மோடியை பாராட்ட வார்த்தைகள் இல்லை,,,


Ramesh Sargam
ஜூலை 13, 2025 22:34

தயவுசெய்து அந்த மாம்பழங்களை ஆய்வுக்கூடத்தில் சரியாக சோதித்து, ஒரு பிரச்சினையும் இல்லை என்று உறுதிசெய்தபிறகு பிரதமருக்கு சாப்பிட கொடுக்கவும். வங்கதேச அரசை நம்பவேண்டாம். அதுவும் இந்த முகம்மது யூனுஸ் மிக மிக மோசம்.


A viswanathan
ஜூலை 13, 2025 23:56

பங்களாதேஷ் உடன் எந்த உறவும் வேண்டாம்.சீனாகாரனின் தூண்டுதல்பேரில் மாம்பழம் அனுப்பியிருக்கலாம்.எச்சரிக்கை.