உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உங்களின் உலக அமைதி நடவடிக்கைக்கு பாராட்டுக்கள்; டிரம்பை மெச்சிய பில் கிளிண்டன்

உங்களின் உலக அமைதி நடவடிக்கைக்கு பாராட்டுக்கள்; டிரம்பை மெச்சிய பில் கிளிண்டன்

வாஷிங்டன்: இஸ்ரேல்-ஹமாஸ் அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் வரவேற்றுள்ளார். பிராந்தியத்தில் அமைதி நிலவ எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கை என்றும் அவர் பாராட்டி இருக்கிறார்.அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்த 20 அம்ச திட்டத்தை ஒப்புக் கொண்டு, இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டு உள்ளது. எகிப்தில் இது தொடர்பாக நடைபெற்ற அமைதிக்கான உச்சி மாநாட்டில், போர் ஒப்பந்தம் கையெழுத்தானது.டிரம்பின் இந்த முயற்சியை உலக நாடுகளின் பல்வேறு தலைவர்கள் வரவேற்று உள்ளனர். இந் நிலையின் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் இந்த போர் நிறுத்தத்தை வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;அக்.7ம் தேதி 2023 முதல் இஸ்ரேல் மீதான தாக்குதல் தாங்க முடியாத இழப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. இதை பார்ப்பதற்கும், அது பற்றி பேசுவதற்கும் மனது மிகவும் கடினமாக உள்ளது.போர் நிறுத்தம் நடைமுறை, 20 பிணைக்கைதிகள் விடுவிப்பு, காசாவுக்கான உதவிகள் போன்ற நடவடிக்கைகளுக்கு நன்றி. அனைவரையும் ஈடுபாட்டுடன் வைத்திருந்த அதிபர் டிரம்ப், கத்தார் மற்றும் பிறநாட்டு தலைவர்கள் பாராட்டுக்களுக்கு தகுதியானவர்கள்.எதிர்காலத்தை யோசித்து, அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அமெரிக்கா மற்றும் மற்ற நாடுகளின் ஆதரவுடன் பாலஸ்தீனியர்கள், இஸ்ரேல் மக்கள் கண்ணியம், பாதுகாப்பு ஆகியவற்றை வழங்கும் வகையில் நீடித்த அமைதிக்கான முயற்சியாக மாற்ற வேண்டும்.இவ்வாறு பில் கிளிண்டன் கூறி உள்ளார்.எகிப்து பயணத்தை முடித்துக் கொண்டு வாஷிங்டன் திரும்பும் போது விமானத்தில் ஏறிய டிரம்பிடம், பில் கிளிண்டனின் வரவேற்பை நிருபர்கள் சுட்டிக்காட்டினர். அதற்கு பதிலளித்த டிரம்ப், இது மிகவும் சிறந்த ஒன்று. அவர் உண்மையைத்தானே சொல்லி இருக்கிறார். அவருடன்(பில் கிளிண்டன்) நான் நன்றாக பழகியிருக்கிறேன். என் நண்பர். எனது திருமணத்திற்கு வந்திருக்கிறார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramaraj P
அக் 15, 2025 14:14

இது போரெல்லாம் ஒன்றும் இல்லை. ஹமாஸ் கோழைத்தனம் செய்து அப்பாவி மக்களை கொன்றது. இஸ்ரேல் இவ்வளவு நாள் செத்து பாம்பை அடித்துக் கொண்டு இருந்தது.


Anu Sekhar
அக் 14, 2025 18:14

கிளின்டன் ஒரு உணமையான அரசில் வாதி . நல்ல காரியம் செய்தல் எதிரிகளையும் பாராட்ட வேண்டும். எப்பொருள் யார் யார் வாய் ... நம் திருவள்ளுவர் உரை ....


Thravisham
அக் 14, 2025 11:18

டிரம்ப் புகழ் என்ற போதைக்கு அடிமையாகி விட்டார்.


Ramesh Sargam
அக் 14, 2025 11:17

இனிமேல் பாராட்டி என்ன பயன்? அதான் நோபல் அமைதி பரிசு வேறுஒருவருக்கு கொடுக்கப்பட்டுவிட்டதே.


புதிய வீடியோ