உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 179 பேரை பலி கொண்ட தென்கொரிய விமான விபத்துக்கு பறவை மோதியதே காரணம்!

179 பேரை பலி கொண்ட தென்கொரிய விமான விபத்துக்கு பறவை மோதியதே காரணம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

முவான்: கடந்த மாதம் இறுதியில் தென்கொரிய விமான விபத்தில் 179 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு பறவை மோதியதே காரணம் என்று உறுதி செய்யும் வகையில் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.கடந்த டிச., 29ம் தேதி பாங்காங்கில் இருந்து 175 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் என 181 பேரை ஏற்றிக் கொண்டு, தென்கொரியா புறப்பட்ட விமானம், முவான் விமான நிலையத்தில், தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது. விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீ பற்றியதில், அதில் பயணித்த 179 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 விமானிகள் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். விமான விபத்திற்கு ஜெஜீ ஏர் விமானம் மன்னிப்பு கேட்டுள்ளது. 'துயரத்திற்கு வருந்துகிறோம். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்களால் முடிந்த உதவிகளையும் செய்வோம்' என விமான நிர்வாகம் உறுதி அளித்திருந்தது. இதனிடையே, விமானத்தின் கருப்பு பெட்டிகளை மீட்டு, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விபத்துக்கு காரணம் பறவையாக இருக்குமோ என்ற சந்தேகம் விமான நிலைய அதிகாரிகளுக்கு ஆரம்பத்திலேயே இருந்தது.காரணம், விபத்து நடப்பதற்கு 4 நிமிடங்களுக்கு முன்பு, விமானத்தின் இன்ஜின் பகுதியில் பறவை ஒன்று மோதியதாகவும், இதனால், அவசரகால எச்சரிக்கையை விமானிகள் கொடுத்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அதை உறுதி செய்யும் விதமாக, விபத்துக்குள்ளான விமானத்தின் இன்ஜினில் பறவையின் இறகு மற்றும் ரத்தக்கறை இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Karthik
ஜன 17, 2025 21:10

பிழைத்த இருவர் பைலட்டா ? பணிப்பெண்ணா ?. அப்போது பின் பகுதியில் இருந்த இரண்டு பணிப்பெண்கள் மட்டுமே என்றது . இப்போது முன்பகுதியில் இருந்த இரண்டு விமானிகள் மட்டுமே என்கிறது . இந்த பத்திரிகை ஊடகம் குழப்புவது யாரோ?? ஒருவேளை த.. நாட்டுல எல்லாரும் புல் மப்புல தான் இருக்காங்க ன்னு முடிவே பண்ணிட்டாங்களோ???


Natarajan Ramanathan
ஜன 17, 2025 18:21

விமானிகள் இறந்து விட்டார்கள். வேறு இருவர்தான் பிழைத்துக்கொண்டார்கள். ஆனால் ஒரு பறவை மோதுவதைகூட தவிர்க்க முடியாதவகையில் விமானங்கள் இருப்பது கேவலம்.


N.Purushothaman
ஜன 17, 2025 14:34

உயிரோடு இருப்பவர்கள் விமானிகள் அல்ல ...விமான சிப்பந்திகள் கேபின் க்ரூ ....


புதிய வீடியோ