வாசகர்கள் கருத்துகள் ( 3 )
மக்களை எல்லாம் கொன்னுட்டா, அமைதியா இருக்கும் என்று சொல்ற அமைதி மார்க்கம்.
கேட்கவும் படிக்கவும் இன்பமாக இருக்குதையா
இன்னிக்கி செவாய்கிழமைதானே, வெள்ளிக்கிழமை இல்லியே. காலண்டரை தப்பா பார்த்துட்டனுகளா
இஸ்லாமாபாத்: குவெட்டாவில் உள்ள பாகிஸ்தான் துணை ராணுவப் படை தலைமையகத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் பலத்த காயமுற்றனர்.பாகிஸ்தானின் குவெட்டாவில் சர்கூன் சாலையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து பலத்த துப்பாக்கிச் சூடு நடந்ததால், நகரம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் அவசரநிலையை அதிகாரிகள் அறிவித்தனர். தகவல் அறிந்து போலீசார் மற்றும் மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர்.குண்டுவெடிப்பு காரணமாக அருகிலுள்ள கட்டடங்களின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் உடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். ராணுவப் படை தலைமையகம் அருகே நடந்த குண்டு வெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 30 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.டாக்டர்கள், செவிலியர்கள் உடனடியாக பணிக்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.குண்டுவெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களை எல்லாம் கொன்னுட்டா, அமைதியா இருக்கும் என்று சொல்ற அமைதி மார்க்கம்.
கேட்கவும் படிக்கவும் இன்பமாக இருக்குதையா
இன்னிக்கி செவாய்கிழமைதானே, வெள்ளிக்கிழமை இல்லியே. காலண்டரை தப்பா பார்த்துட்டனுகளா