உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / புளூ ஆரிஜின் நிறுவனத்தின் ராக்கெட் வெடித்து சிதறியது; இன்ஜின் சோதனை ஓட்டத்தில் பரபரப்பு

புளூ ஆரிஜின் நிறுவனத்தின் ராக்கெட் வெடித்து சிதறியது; இன்ஜின் சோதனை ஓட்டத்தில் பரபரப்பு

நமது நிருபர்'அமேசான்' நிறுவனர் ஜெப் பெசோசின் விண்வெளி நிறுவனமான, புளூ ஆரிஜினுக்கு சொந்தமான ராக்கெட் ஒன்று இன்ஜின் சோதனை ஓட்டத்தின் போது ஏவுதளத்திலேயே வெடித்து சிதறியது.அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், உலகப் பணக்காரர்களில் ஒருவருமான ஜெப் பெசோஸ், உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான, 'அமேசான்' நிறுவனத்தை நடத்தி வருகிறார். விண்வெளி துறை மீதான ஆர்வத்தால், 2000ல், 'புளூ ஆரிஜின்' என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை அவர் தொடங்கினார். இதன் வாயிலாக, 'நியூ கிளென்' என்ற பிரமாண்ட ராக்கெட்டுகளை உருவாக்கி வருகிறார்.அடுத்த வாரம் திட்டமிடப்பட்டிருந்த செயற்கைக்கோள் ஏவுதலுக்கு முன்னதாக, 'நியூ கிளென்' ராக்கெட்டின் இன்ஜின் சோதனையை, 'புளூ ஆரிஜின்' நிறுவனம் மேற்கொள்ள முடிவு செய்தது. இதையடுத்து, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கானவெரல் விண்வெளி ஏவுதளத்தில், ராக்கெட்டின் ஏழு இன்ஜின்களும் இயக்கி சோதனை நடந்தது.சில வினாடிகளிலேயே, 321 அடி உயரம் கொண்ட அந்த ராக்கெட்டின் அடிப்பகுதியில் ஏற்பட்ட கோளாறால், ஒட்டுமொத்த ராக்கெட்டும் வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட அதிர்வுகள், அருகே உள்ள பகுதிகளில் உணரப்பட்டது-. இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் காயமும் ஏற்படவில்லை. எலான் மஸ்க்கின், 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்துக்கு போட்டியாக களமிறங்கிய ஜெப் பெசோசின் விண்வெளி நிறுவனத்துக்கு இச்சம்பவம் பின்னடைவாக கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
மே 29, 2026 22:17

இதனால் அந்த நிறுவனத்துக்கு எத்தனை மில்லியன் டாலர் நஷ்டமோ? எல்லாம் அமேசான் வாடிக்கையாளர்கள் பணம்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை