சவூதியில் காலமான தமிழர் உடல் தஞ்சைக்கு அனுப்பி வைப்பு
ரியாத்: சவூதி அரேபியாவில் மரணமடைந்த செல்வ பகவதி அவர்களின் உடல் தஞ்சாவூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை - சவுதி அரேபியா மற்றும் #NRTIA வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர்கள் சங்கம் -ரியாத் ஆகிய அமைப்பினர் இணைந்து இந்த அரும்பணியை செய்தனர். செல்வ பகவதி 2018 முதல் சவூதி அரேபியாவில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். துரதிர்ஷ்டவசமாக அவர் 09.08.2025 அன்று மரணமடைந்தார். சவூதி அரேபியாவின் கிங் காலித் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடல், சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளும் முடிந்தபின் 26.08.2025 அன்று திருச்சி சர்வதேச விமான நிலையத்தை அடைந்து, அங்கிருந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு அரசு ஏற்பாடு செய்த ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.டாக்டர். சாந்தோஷ் பி.டி., பராலீகல் ஒருங்கிணைப்பாளர் அவர்கள் குடும்பத்தாருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, தகவல்களை பகிர்ந்து கொண்டதோடு,தேவையான அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களையும் தயார் செய்து மேலும், இந்திய தூதரகம் (ரியாத்) உடன் நெருக்கமாக ஒருங்கிணைப்புகளை மேற்கொண்டு, நலத்துறை அனுமதி பெற்ற பின் உடலை இந்தியா அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.இந்த முயற்சியில் தி.மு.க அயலக அணி பிரிவை சேர்ந்த நிர்வாகி அப்துல் நாசர்,, தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரை கலியபெருமாள், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் சாக்கோட்டை க. அன்பழகன் எம்எல்ஏ, திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செ. இராமலிங்கம் BA. திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய து. செயலாளர் ரெ. கருணாநிதி மற்றும் இணை செயலாளர் விஜயன் ஆகியோர் தொடர்ந்து ஆதரவு வழங்கினர் . இந்த முழு செயல்முறைக்கும் டாக்டர் கோவி. செழியன் (தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர்), இந்திய தூதரகம் - ரியாத், தமிழ்நாடு அயலகத் தமிழர் நல வாரியத்தின் நலவாரியம் (N.R.T.) மற்றும் சவுதி அரேபியா வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர்கள் சங்கம் - ரியாத் மண்டலம்)Non Resident Tamil Indian Association (NRTIA) ஆகியவை தன்னலமற்ற ஒத்துழைப்பை வழங்கின.செல்வ பகவதியின் குடும்பத்தினர், இந்த கடினமான நேரத்தில் தங்களுக்கு துணை நின்ற அமைச்சர் உட்பட அனைத்து அரசு அமைப்புகளுக்கும், சமூக அமைப்புகளுக்கும், மற்றும் ஒருங்கிணைப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.