உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மாஸ்கோவில் குண்டு வெடிப்பு; ரஷ்ய ராணுவ கமாண்டர் பலி

மாஸ்கோவில் குண்டு வெடிப்பு; ரஷ்ய ராணுவ கமாண்டர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: மாஸ்கோவில் நடந்த குண்டுவெடிப்பில் ரஷ்ய ராணுவத்தில் உயர் பொறுப்பு வகித்த அதிகாரி கொல்லப்பட்டார்.ரஷ்யாவின் அணு, உயிரியல் மற்றும் ரசாயனப் பாதுகாப்புப் படைகளின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் செயல்பட்டு வந்தார். ரஷ்ய ராணுவத்தில் உயர் பொறுப்பு வகிக்கும் மிகச் சில அதிகாரிகளில் முக்கியமானவர் இவர்.இன்று அதிபர் மாளிகை கிரெம்ளினுக்கு அருகில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்திற்கு வெளியே குண்டுவெடிப்பு ஏற்பட்டது. மின்சார ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mncpagm5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதன் விளைவாக கிரிலோவ் மற்றும் அவருடன் இருந்த மற்றொருவரும் பலியானார்கள்.இந்த சம்பவம் ரஷ்ய அரசு தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ரஷ்ய புலனாய்வு அமைப்பு கூறியதாவது:மின்சார ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில், இகோர் கிரில்லோவ் மற்றும் அவரது உதவியாளர் கொல்லப்பட்டனர்.உக்ரைன் ராணுவம் இத்தகைய குண்டுவெடிப்பை நடத்தியிருக்கலாம் என சந்தேகம் உள்ளது.இந்த சம்பவத்தை தொடர்ந்து, குற்றவியல் விசாரணையை தொடங்கி இருக்கிறோம். சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு ரஷ்ய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.ரஷ்யா வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா ஜாகரோவா கூறுகையில், கிரில்லோவ் தாய் நாட்டுக்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் பாடுபட்டார். சிரியா, உக்ரைன் நாடுகளில் அமெரிக்கா, நேட்டோ படையினரின் ரசாயன, உயிரியல் ஆயுத ஆய்வுக்கூடங்கள் பற்றி கண்டறிந்து அம்பலப்படுத்தினார். தடை செய்யப்பட்ட வழிமுறைகளில் சாலிஸ்பரி, ஆம்ஸ்பரியில் பிரிட்டன் மேற்கொண்ட ஆயுத சோதனைகள் பற்றியும் அம்பலப்படுத்தினார். தாய் நாட்டை மிகவும் நேசித்தார் என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை