உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / முடிவுக்கு வந்த எல்லை மோதல்: டிரம்ப் முன்னிலையில் தாய்லாந்து-கம்போடியா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்து

முடிவுக்கு வந்த எல்லை மோதல்: டிரம்ப் முன்னிலையில் தாய்லாந்து-கம்போடியா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோலாலம்பூர்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிலையில், தாய்லாந்து - கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.கடந்த ஜூலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையே எல்லை பகுதிகளில் மோதல் ஏற்பட்டது. பல ஆண்டுகள் இல்லாத வகையில், இம்மோதலில் பலர் கொல்லப்பட்டனர். மேலும், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு தற்காலிகமாக இடம்பெயர்ந்தனர்.இதையடுத்து, இம்மோதலை முடிவுக்கு கொண்டு வர மலேசியா மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் மத்தியஸ்தம் செய்தனர். இதையடுத்து ஜூலை இறுதியில் சண்டையை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. தற்போது கோலாலம்பூரில் நடப்பாண்டுக்கான 'ஆசியான்' எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.இம்மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக ஆசியான் அமைப்பின் 10 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதமர்கள் மற்றும் அதிபர்கள் மலேசியாவுக்கு வருகை தந்துள்ளனர். உறுப்பு நாடுகளின் தலைவர்களைத் தவிர, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீன பிரதமர் லி கியாங், ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி, பிரேசில் அதிபர் லுாயிஸ் இனாசியோ லுாலா டா சில்வா, தென்னாப்ரிக்க அதிபர் சிரில் ரமபோசா, கனடா பிரதமர் மார்க் கார்னி, தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் வருகை தந்துள்ளனர்.அந்த வகையில், மலேசியா சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிலையில், தாய்லாந்து - கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதனால் தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையே எல்லை பகுதிகளில் மோதல் முடிவுக்கு வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

K.Ravi Chandran, Pudukkottai
அக் 26, 2025 18:16

நோபல் பரிசு வாங்குற வரைக்கும் நம்ம பஞ்சாயத்து ஓய மாட்டார் போல.


arunachalam
அக் 26, 2025 18:05

இந்தாளுக்கு வேற வேலையே இல்லை போல. எல்லா இடத்திலும் டீப் ஸ்டேட் ஐ அனுப்பி யுத்தத்தை தொடங்கிவிட்டது, பின் இவர் போய் சமாதானப்புறா பறக்கவிட்டு வெள்ள காகிதத்துல கையொப்பம் வாங்குவார். இவ்வளவு தூரம் நோபல் சமாதான பரிசு ரூபாய்க்காகா பிட்ச்சை எடுத்த ஒருவரை சரித்திரம் கண்டதில்லை. தகுதி இல்லாதவர்களுக்கு இதற்க்கு முன்னும் இந்த வருடமும் கொடுத்திருக்கிறார்கள். அது உண்மை.


Modisha
அக் 26, 2025 15:35

போகிற போக்கில் சின்ன பசங்க கபடி விளையாட்டில் சண்டை வந்தா கூட இவுரு சமாதானம் பண்ணுவாரு போல.


KRISHNAN R
அக் 26, 2025 12:51

அமெரிக்கா மற்றும் சீன நாடுகள்,, பிற நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த நடத்தும் மறைமுக நாடகம்


ஜெகதீசன்
அக் 26, 2025 12:35

சபாஷ். ட்ரம்ப் உண்மையிலேயே நல்லா பஞ்சாயத்து பண்ணுகிறார் போல தெரியுதே!


Venkateswaran V
அக் 26, 2025 12:28

டிரம்ப் எப்படியாவது நோபல் பரிசு வாங்கி விடவேண்டும் என்று துடிக்கிறார் போல. எப்படி இருந்த டிரம்ப் இப்படி ஆகி விட்டார்


முக்கிய வீடியோ