உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தமிழகத்திற்கு முதலீட்டாளர்களை அழைத்து வாருங்கள்: ஜெர்மனிவாழ் தமிழர்களுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகத்திற்கு முதலீட்டாளர்களை அழைத்து வாருங்கள்: ஜெர்மனிவாழ் தமிழர்களுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்திற்கு முதலீட்டாளர்களை அழைத்து வாருங்கள் என ஜெர்மனிவாழ் தமிழர்களிடம் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் எட்டு நாள் பயணமாக, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து சென்றுள்ளார். ஜெர்மனி சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு, அங்கு வாழும் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று, உயர்நிலை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் இன்று ஜெர்மனிவாழ் தமிழர்களை சந்தித்த புகைப்படத்தை முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''வேர்களை மறக்காத ஜெர்மனி நாட்டுத் தமிழ் உறவுகள் அடைந்துள்ள உயரம் கண்டு உள்ளம் பூரித்தேன். அவர்கள் அளித்த வரவேற்பின் ஆரவாரத்தில் அகம் குளிர்ந்தேன்.தமிழகத்துக்கு வாருங்கள், நமது திராவிட மாடல் அரசு அமைத்து வரும் தமிழர் தொன்மையின் பண்பாட்டுச் சின்னங்களைக் காணுங்கள்!உங்கள் சகோதரன்தான் முதல்வராக இருக்கிறான் என்ற உரிமையோடும் நம்பிக்கையோடும் வந்து முதலீடு செய்யுங்கள், முதலீட்டாளர்களை அழைத்து வாருங்கள்'' என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் பாசம்

ஜெர்மனி வாழ் தமிழர்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: முதலில் எல்லோருக்கும் அன்பான வணக்கம். நல்லா இருக்கீங்களா? பல்லாயிரம் கிலோ மீட்டர்களை கடந்து, வேறு ஒரு நாட்டில் நீங்களும், நானும் சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி தான். உண்மையான தமிழ் பாசம். உலகின் எந்த மூலைக்குப் போனாலும் தமிழன் இருப்பான். தமிழ்க் குரலை கேட்கலாம் என்று சொல்கிற அளவுக்கு உலகெல்லாம் பரவி தனது அறிவால், உழைப்பால் உயர்ந்திருக்கும் இனம் தான் நமது தமிழினம்.

தமிழகத்திற்கு வாருங்கள்!

ஜெர்மனியில் தமிழர்களைச் சந்திப்பது மகிழ்ச்சி. தமிழகம் தொழில் துறையில் முன்னேறி உள்ளது. தமிழகம் வளர வேண்டும். முதலீட்டாளர்களை தமிழகத்தில் முதலீடு செய்ய ஊக்குவித்து நீங்கள் முடிந்தளவுக்கு உதவி செய்ய வேண்டும். தமிழர் என்ற அடையாளத்தை விட்டுவிடாதீர்கள். உங்கள் வேர்களை, தமிழை மறக்காதீர்கள். ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழகத்துக்கு குழந்தைகளோடு வாருங்கள். தமிழகத்தின் வளர்ச்சியை, மாற்றத்தை பாருங்கள்.

உதவ வேண்டும்

நமது பண்பாட்டை, எழுச்சியை எடுத்துச் சொல்லும் கீழடி, பொருநை அருங்காட்சியகங்கள், கலைஞர் உலகத்திற்கு குழந்தைகளை அழைத்து வந்து சுற்றிக் காட்டி வரலாற்றை சொல்லிக் கொடுங்கள். சின்னதா பிஸ்னஸ் செய்தாலும், உங்க தொழிலை தமிழத்திலும் தொடங்குங்க. பெரிய நிறுவனங்களில் வேலை செய்தால் தமிழகத்தில் தொழில் தொடங்க வலியுறுத்துங்கள். உங்கள் சொத்த கிராமங்களை கவனித்து கொள்ளுங்கள். அங்கு படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள், ஏழை எளிய மாணவர்களுக்கு உங்களால் முடிந்த கல்வி உதவியை செய்யுங்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

Anu Sekhar
செப் 02, 2025 17:16

ஜெர்மனி நாட்டுல லஞ்சம் கட்டிங் எல்லாம் கிடியாது . நேர்மையாக இருப்பார்கள். நீங்க எப்ப கொள்ளை அடிக்காம இருக்கிறீர்களோ அப்போ தான் உங்களை திரும்பி பார்ப்பார்கள். சரியா?


Sridhar
செப் 01, 2025 16:28

இத இங்கேயிருந்தே சொல்லியிருக்கலாமே?


RAMAKRISHNAN NATESAN
செப் 01, 2025 16:13

இதைச்சொல்லவா அம்புட்டு தூரம் போன ?


Murthy
செப் 01, 2025 16:12

இதை சொல்லத்தான் அங்கு போனாரோ ?? முதலீடு எவ்வளவு ஈர்த்தார் .....வெள்ளை அறிக்கை வருமா


ஜெகதீஸ்வரன் தண்டபானி
செப் 01, 2025 16:09

இந்த திராவிட நாடகம் எப்போது முடிவுக்கு வரும். ஜெர்மன் தொழில் அதிபர்களை சந்தித்து கேட்பதை தமிழ் மக்களிடம் கேட்கிறார்?


Anand
செப் 01, 2025 14:10

இதை இங்கிருந்தே சொல்லியிருக்கலாம்


Barakat Ali
செப் 01, 2025 16:30

காமெடியில் உச்சம் தொடுகிறார் .....


N Srinivasan
செப் 01, 2025 14:09

இது என்ன புது கதை ?


T MANICKAM
செப் 01, 2025 13:05

நீங்க கமிஷன் அடிக்காம இருந்தாலே போதும் நம்ம நாட்டிலேயே மிக சிறந்த தொழில் அதிபர்கள் நல்ல படியாக இருக்காங்க அவர்களிடம் கலெக்சன் வாங்காம இருந்தாலே போதும். அப்புறம் இந்தியா தேச பற்று முக்கியம்.


Palanisamy Sekar
செப் 01, 2025 12:54

இப்படி ஒரு கொடுமையை பார்த்திருக்கோமா? என்னமோ ஜெர்மன் தொழில் அதிபர்களோடு கையெழுத்திட்டு ஒப்பந்தத்தை நிறைவேற்றப் போவதாக சொல்லிட்டு, நம்ம ஆளுக அங்கே வேலைக்கு போன நிலையில் அவர்களது முதலாளிகளை அழைத்துவர சொல்வது விலா நோக சிரிக்கவைத்துவிட்டது. அவனவன் மாதச்சம்பளம் ஒழுங்கா வந்தாலே போதும்ன்னு தெய்வத்தை வேண்டிட்டு இருக்கும் இடத்தில இவர் போயி அவர்களை இங்கே முதலீடு செய்ய அழைத்துவாருங்கள் என்பது கோமாளித்தனமாக இருக்கிறது.


raja
செப் 01, 2025 12:10

அவங்க அழைச்சிட்டு வரணுமுன்னா நீ எதுக்குப்பா ....


புதிய வீடியோ