உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அயர்லாந்தில் இந்தியர்கள் மீது கொடூர தாக்குதல்; எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது கொடூர தாக்குதல்; எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டப்ளின்: அயர்லாந்தில் இரண்டு இந்தியர்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அங்கு வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.அயர்லாந்தின் டப்ளினில் 32 வயது இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்தோஷ் யாதவைஆறு இளைஞர்கள் தாக்கியதில் அவரது கன்னத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது. முன்னதாக,டல்லாட்டில் இந்தியர் ஒருவர் மீது மர்ம நபர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்தியதுடன், அவரது ஆடையை களைந்து கொடுமைப்படுத்தினர்.இது இனவெறி காரணமாக நடந்ததா என விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், அயர்லாந்தில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:அயர்லாந்தில் இந்திய குடிமக்களுக்கு எதிரான உடல் ரீதியான தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக அயர்லாந்து அதிகாரிகளுடன் தூதரகம் தொடர்பில் உள்ளது. அதே நேரத்தில், அயர்லாந்தில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், வெறிச்சோடிய பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறோம். டப்ளினில் உள்ள இந்திய தூதரகத்தினைதொலைபேசி: 08994 23734, மின்னஞ்சல்: cons.mea.gov.inவாயிலாக தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ramesh
ஆக 02, 2025 06:51

அங்கேயும் நம் திராவிடத்தீ சுடர்விட ஆரம்பித்து விட்டது ... அயர்லாந்து , அயர்லாந்து நாட்டவருக்கே என்று முழங்க ஆரம்பித்து விட்டார்கள் சபாஷ்.,


Jack
ஆக 01, 2025 20:51

ஆரிய நாடா ?


முக்கிய வீடியோ