உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சுற்றுலா வாங்க: இந்தியர்களிடம் கெஞ்சுகிறார் மாலத்தீவு அமைச்சர்

சுற்றுலா வாங்க: இந்தியர்களிடம் கெஞ்சுகிறார் மாலத்தீவு அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாலே: இந்தியர்கள், தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வர வேண்டும் என அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் இப்ராஹிம் பைசல் கூறியுள்ளார்.மாலத்தீவு அதிபராக முகமது முயிசு பதவியேற்றது முதல் இந்தியாவுடனான அந்நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் அந்நாட்டு அமைச்சர்கள் 3 பேர் இந்தியா குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் அவதூறாக கருத்து தெரிவித்தனர். இது விரிசலை மேலும் அதிகப்படுத்தியதுடன், மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை இந்தியர்கள் பெரும்பாலானோர் தவிர்த்து வருகின்றனர். இதனால், சுற்றுலாவையே பெரிதும் நம்பியுள்ள அந்நாட்டு பொருளாதாரத்திற்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், மாலத்தீவு சுற்றுலாத்துறை அமைச்சர் இப்ராஹிம் பைசல் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: மாலத்தீவுக்கு வரலாறு உள்ளது. எங்கள் புதிய அரசு, இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறது. அமைதி மற்றும் நட்புறவுடன் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த விரும்புகிறோம். எங்கள் நாட்டிற்கு வரும் இந்தியர்களை, எங்கள் மக்களும், அரசும் வரவேற்பார்கள். சுற்றுலாத்துறை அமைச்சர் என்ற முறையில், தயவு செய்து மாலத்தீவின் சுற்றுலாவில் இந்தியர்களும் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். எங்களது பொருளாதாரம் சுற்றுலாவை நம்பி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

அரவழகன்
மே 07, 2024 20:19

வாய்ப்பில்லை ராஜா சீனாவிடம் தொங்கு


sri
மே 07, 2024 19:38

மதியாதார் தலைவாசல் மிதிக்கவேண்டாம்


M Ramachandran
மே 07, 2024 19:29

இவன் சரியானா சப்பி சீனன் ஐஸ் கிரீம் சூப்பி இனி இந்தியர்கள் மால தீவு பக்கமே போக மாட்டார்கள்.நிலமை தெரியாமல் இங்கிருந்து ஒரு தேச துரோக கும்பல் பணம் பண்ணும் சாக்கில் அங்கு செல்ல முற்பட்டது மேலே இருந்து ஒரு ஓங்கி ஒரு சம்மட்டி அடி துண்டை காணோம் துனிய காணோம் என்று வேறு இடத்திற்கு ஓட்டம்


DHANA K
மே 07, 2024 16:49

அதிபருக்கு ஆணவம் அதிகம் அழிவு நிச்சயம்


DHANA K
மே 07, 2024 16:43

அதிபருக்கு ஆணவம் அழிவு நிச்சயம்


Srinivasan Krishnamoorthi
மே 07, 2024 16:34

மால தீவு சீனாவால் ஆக்கிரமிக்க படும் நாள் அருகில் உள்ளது அப்போது இந்தியா தலையிட்டால் தான் விடிவு கிடைக்கும்


Venkatasubramanian krishnamurthy
மே 07, 2024 16:15

இந்த வேண்டுகோளை ராகுலிடமோ அல்லது மம்தாவிடமோ கேட்டால் அவர்களின் சொந்தச் செலவில் ரோஹிங்க்யா முஸ்லீம்களை அனுப்பி வைப்பார்கள் மானமுள்ள இந்தியனுக்கு இனி மாலத்தீவு நினைப்பு வராது


vijay
மே 07, 2024 15:51

உங்க அதிபரே வந்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாலும், எங்கள் நாட்டின் லட்சதீவு பற்றி அதிக விழிப்புணர்வு வந்துடுச்சு எங்கள் தீவை நாங்கள் அரசாங்கம் மேம்படுத்துவோம் மாக்க நாடான நீங்கள் பாஸ்தான் போன்ற நிலைக்கு வரவேண்டும் வெறுப்பு உணர்வில் இருக்கும் உங்கள் நாடு சுற்றுலாவை நம்பி மட்டுமே பொருளாதாரம் நடக்கிறது குடிக்க, கழுவ எல்லாவற்றிக்கும் நன்னீர் தேவைக்கும், நல்ல தண்ணீர் தேவைக்கும் இஸ்ரேல் தொழில்நுட்ப உதவி, இந்திய பல ஆண்டுகளாக கொடுத்த செய்த பல்வேறு உதவிகளை பெற்று வாழ்ந்தீர்கள் இப்போ இந்தியா தேவை இல்லை, இஸ்ரேலும் தேவை இல்லை, உங்களுக்கு சீனா மட்டும் தேவை அதுதானே முக்கியம் இந்தியா கூட மன்னிக்க வாய்ப்புள்ளது ஆனால் இஸ்ரேல் நல்லா வெளுத்துவங்கிடும் எதிர்காலத்துல பாதான் போலவே ஒவ்வொரு நாடாக போயி கேட்கணும் ஏற்கனவே சீனா போயி அண்ணனே, அய்யாவே உங்க நாட்டிலுருந்து மக்களை மாலைதீவுக்க சுற்றுலா கெஞ்சி கேட்டாரு சோறு இல்லை போ போ


HoneyBee
மே 07, 2024 15:23

கண் கெட்ட‌ பொறவு சூரிய நமஸ்காரம் வாய் சவடால் இருந்தா எப்போவும் இப்படி தான் ஆகும் அதிகமா வாயால ‌வடை சுட கூடாது‌‌அதனால்‌ அழிவு தான்


Venkatesan
மே 07, 2024 14:44

ஐயா நீங்கள் யாரோடு வேண்டுமானாலும் உறங்குங்கள் ஆனால் எங்களை அநாகரீகமாக பேச வேண்டாம் உங்கள் நாட்டை விட பல சிறந்த இடங்கள் சீனாவில் உள்ளது மேலும் சீனாவிலிருந்து அதிக தொலைவு வேறு உங்கள் நாடு ஆகையால் சீனாக்காரன் வரமாட்டான் எல்லா காலங்களிலும் உதவியை வாங்கிவிட்டு நன்றி மறந்தால் அதற்கான பலனை அனுபவித்து தானே ஆக வேண்டும்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி