மாற்றத்தை ஏற்படுத்தும் அதிபர்: டிரம்பை பாராட்டிய கனடா பிரதமர் மார்க் கார்னி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் ஓவல் அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் நிருபர்கள் சந்திப்பில், மாற்றத்தை ஏற்படுத்தும் அதிபர் டிரம்ப் என கனடா பிரதமர் மார்க் கார்னி பாராட்டினார்.அமெரிக்காவிற்கு டிரம்ப் அழைப்பின் பேரில், கனடா பிரதமர் மார்க் கார்னி சென்று இருந்தார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்தபோது கனடா பிரதமர் மார்க் கார்னியை கை குலுக்கி அதிபர் டிரம்ப் வரவேற்றார். அப்போது கனடா பிரதமர் டிரம்ப் இடம் நகைச்சுவையைச் செய்தார். 'நான் உங்களுக்காக சிவப்பு நிறத்தில் டைய் அணிந்து உள்ளேன்'' என மார்க் கார்னி கூறும் வீடியோ வெளியாகி உள்ளது. சந்திப்பின் போது, டிரம்ப் கார்னியுடன் நட்புரீதியான தொனியில் பேசினார். ஏப்ரல் மாதம் பதவியேற்றதிலிருந்து வெள்ளை மாளிகைக்கு இரண்டாவது முறையாக மார்க் கார்னி வருகை தந்துள்ளார். ஏற்கனவே சிறந்த தலைவர் கார்னியை டிரம்ப் பலமுறை பாராட்டினார். அதிபர் டிரம்ப், மார்க் கார்னி ஆகிய இருவரும் உறவை வலுப்படுத்துவது, அமெரிக்க அரசு நிர்வாக முடக்கம் மற்றும் இஸ்ரேல்-காசா மோதல் என பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.ஆதரிப்போம்!
பின்னர் நிருபர்கள் சந்திப்பில் மார்க் கார்னி கூறுகையில்,''இந்த ஆண்டு இரண்டாவது முறையாக தனக்கு விருந்து அளித்ததுக்கு அதிபர் டிரம்பிற்கு நன்றி. மாற்றத்தை ஏற்படுத்தும் அதிபர் டிரம்ப். மத்திய கிழக்கில் அமைதியை நிலை நாட்ட டிரம்ப் மேற்கொண்டு வரும் முயற்சியை நாங்கள் ஆதரிப்போம். அதற்காக நாங்கள் எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வோம்'' என தெரிவித்தார்.51வது மாநிலம்
பிரதமர் மார்க் கார்னியுடனான இருதரப்பு சந்திப்பின் போது கனடாவை 51வது அமெரிக்க மாநிலம் என டிரம்ப் மீண்டும் நகைச்சுவையாக பேசி இருக்கிறார். பின்னர் டிரம்ப் கூறியதாவது: எங்களுக்கு சில மோதல்கள் இருந்தன. ஆனால் நாங்கள் அதை சரி செய்வோம். எங்களுக்குள் ஒரு வலுவான உறவு இருந்தது. நாங்கள் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். நாங்கள் காசா மோதல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.