உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரம்மபுத்திரா நதியில் மெகா அணை கட்டும் வேலையை தொடங்கியது சீனா!

பிரம்மபுத்திரா நதியில் மெகா அணை கட்டும் வேலையை தொடங்கியது சீனா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: பிரம்மபுத்திரா நதியில் மெகா அணை கட்டும் வேலையை சீனா தொடங்கி உள்ளது. இந்த அணையால், இந்தியா, வங்கதேசத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில், யார்லாங் சாங்போ நதியில், பிரமாண்டமான அணையைக் கட்ட சீனா திட்டமிட்டது. அருணாச்சலப் பிரதேசத்துக்கு அருகே அமைந்துள்ள இந்த நதி இந்தியாவில் பிரம்மபுத்திரா என்று அழைக்கப்படுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vl8jbiax&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நான்கு ஆண்டுகளாக இழுபறியில் இருந்த திட்டத்தை தற்போது செயல்படுத்த அந்த நாடு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அணை கட்டும் திட்டத்தின் தொடக்க விழாவில், பிரதமர் லி கியாங் கலந்து கொண்டார். இந்த அணையால், இந்தியா மற்றும் வங்கதேசத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்தனர்.பொருளாதார ரீதியாவும், ராஜதந்திர ரீதியாகவும் திபெத்தை இணைக்கும் இந்த திட்டத்திற்கு சீன அரசு கடந்த டிசம்பரில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அணை திட்டம் குறித்து இந்தியா சீனாவிடம் கடந்த ஜனவரியில் அதிருப்தி தெரிவித்து இருந்தது. இந்தத் திட்டத்தில் ஐந்து நீர்மின் நிலையங்கள் கட்டப்படும், மொத்த முதலீடு 1.2 டிரில்லியன் யுவான் (167.1 பில்லியன் டாலர்) என மதிப்பிடப்பட்டு உள்ளது. பிரம்மபுத்திராவில் அணை கட்டும் பணி தொடங்கியதும், இந்தியாவுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய சீனாவிடம் மத்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Apposthalan samlin
ஜூலை 20, 2025 17:03

சீனா காரன் 1500 உடன் வேலை பார்க்கிறேன். இந்தியா மக்கள் சாப்ட்வேர் சயின்டிஸ்ட் மூளை உள்ளவர்கள் என்று சொல்லுவான் . அரசாங்கம் சரி இல்லை என்றும் சொல்லுவான் .


நிக்கோல்தாம்சன்
ஜூலை 20, 2025 14:16

சீனா சிதறுண்டு போனால் இந்த திட்டம் நிறுத்தப்படுமா ?


GMM
ஜூலை 20, 2025 13:36

சில ஆயிரம் ஆண்டுகள் ஏழ்மை கலாச்சார வாழ்க்கையில் சீனர் பிரம்மபுத்திரா நதி ஓரம் குடியேறி இருப்பர். சில நூறாண்டுகளுக்கு முன் வறுமை காரணமாக நதியோரம் குடியேற சக்தி இல்லை? அணைக்கு பின் திபெத், நேபாளம், அசாம்.. போன்ற பகுதிகளை ஆக்கிரமிக்க துவங்குவர். வங்க தேசம், திபெத் நேபாளம் இந்திய பகுதியாக மாற வேண்டும். சீனா போலி வர்த்தக உறவை நிறுத்த வேண்டும். உலகில் அதிக தரம் குறைந்த சீனா தயாரிப்புகள்?


T.sthivinayagam
ஜூலை 20, 2025 12:45

சீனா செயல் சரியானது அல்ல சீனாவுடன் ஆனா அனைத்து ராஜாங்க உறவையும் நிறுத்த வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை