உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வழக்கமாக கோடை காலத்தில் பரவும் வைரஸ் தான்; சீனா சமாளிப்பு

வழக்கமாக கோடை காலத்தில் பரவும் வைரஸ் தான்; சீனா சமாளிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: சீனாவில் பரவி வரும் வைரஸ், வழக்கமாக கோடை காலத்தில் பரவுவதுதான் என அந்நாட்டு சுகாதாரத்துறை கூறியுள்ளது.சீனாவில் எச்.எம்.பி.வி., என்ற புதுவகையான நுரையீரல் தொற்று பரவ துவங்கி இருப்பதால், மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இது பிற நாடுகளுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளதால், ஆசியா முழுதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் சீனா செல்ல உள்ளோர் தங்களது பயணத்தை மறுபரிசீலனை செய்யும்டி சில நாடுகள் அறிவுறுத்தி உள்ளன.இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறியதாவது: இந்த வைரஸ் பரவல் வழக்கமாக ஆண்டுதோறும் பரவுவது தான். சுவாத தொற்றுகள் குளிர்காலத்தில் உச்சத்தில் இருக்கும். சீன குடிமக்கள் மற்றும் சீனாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் உடல்நலனில் சீன அரசு எப்போதும் அக்கறையுடன் இருக்கும் என்பதை உறுதி அளிக்கிறேன். சீனாவில் பயணம் செய்வது என்பது பாதுகாப்பானது தான். தற்போது பரவும் வைரசால் ஏற்படும் பாதிப்பு குறைவு தான். கடந்த ஆண்டை விட தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைவு. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி