உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பேச்சுவார்த்தைக்கு வாங்க; வர்த்தகத்தில் அச்சுறுத்தல் கூடாது; அமெரிக்காவுக்கு சீனா வலியுறுத்தல்

பேச்சுவார்த்தைக்கு வாங்க; வர்த்தகத்தில் அச்சுறுத்தல் கூடாது; அமெரிக்காவுக்கு சீனா வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: சீனா, அமெரிக்கா ஆகிய இருநாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் தீவிரம் அடைந்துள்ளது. ''பிளாக் மெயில், அச்சுறுத்தல் விடுக்க கூடாது'' என சீனாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.சீன பொருட்களுக்கு இதுவரை 145 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 245 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனாவின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்பதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்கா- சீனா ஆகிய இருநாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், ''பிளாக்மெயில், அச்சுறுத்தல் விடுக்க கூடாது'' என சீனாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. இது குறித்து சீனா வெளியுறவுத்துறை கூறியதாவது: அமெரிக்கா வர்த்தகப் போரை தொடங்கியது. நமது நியாயமான நலன்களையும், சர்வதேச நியாயத்தையும், நீதியையும் பாதுகாக்க சீனா தேவையான எதிர் நடவடிக்கைகளை எடுத்தது. அமெரிக்கா உண்மையிலேயே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்பினால், அதிகபட்ச அழுத்தத்தைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, சீனாவை பிளாக்மெயில் செய்வதையும், மிரட்டுவதையும் நிறுத்த வேண்டும். சமத்துவம், மரியாதை மற்றும் பரஸ்பர நன்மை ஆகியவற்றின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இவ்வாறு சீனா வெளியுறவுத்துறை கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Sampath Kumar
ஏப் 17, 2025 10:22

முதலாளித்துவம் ஒரு நாள் தன்னை தானே அழித்து கொள்ளும் என்ற கார்ல் மார்க்கின் பொன் மொழிகள் நினைவிற்கு வருகிறது


KRISHNAN R
ஏப் 17, 2025 10:20

ஒரே விஷயம் என்னவென்றால் பிசினஸ்... டிரம்ப், சிங்கு பிங்கு, கும் உங்கு.. பொடின்.. இன்ன பிற சிலரால்........ உலகில் உள்ள..அனைவருக்கும்.... தொல்லை


VENKATASUBRAMANIAN
ஏப் 17, 2025 08:07

அப்படி வா வழிக்கு. இப்போது பேச்சுவார்த்தைக்கு சீனா அழைக்கிறது. அமெரிக்கா சரியான திசையில் செல்கிறது. சீனப் பொருட்கள் இரண்டு வகையான தரம் உள்ளது. இது புரியாமல் பேசுகிறார்கள். அதனால்தான் விலை குறைவாக கொடுத்து மார்க்கெட் பிடிக்கிறார்கள்.


அப்பாவி
ஏப் 17, 2025 07:53

சீனாவின் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு இறக்குமதியை விட பல மடங்கு அதிகம். சீனாவின் தொழிற்சாலைகள் கடனில் வாங்கிக் கட்டப்பட்டவை. ஏற்றுமதி டாரிஃப் அதிகமானால் அவற்றால் இலாபத்தில் இயங்க முடியாது. மூழ்கிவிடும் அபாயம் உண்டு. உள்நாட்டு பொருளாதாரம் நொறுங்கிய வேளையில், இந்த ட்ரம்ப் வரி விதிப்பு பெரிய இடியாக இறங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


R.RAMACHANDRAN
ஏப் 17, 2025 07:41

சீன பொருட்களுக்கு அமெரிக்கா 245 சதவிகிதம் வரி விதிக்கிறது என்றால் அந்த அளவிற்கு அவை விலை குறைவாக உள்ளதால் மக்கள் விரும்பி வாங்குகின்றனர் என்பதே பொருள்.


புதிய வீடியோ