உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  சீனாவின் செயற்கை சூரியன் திட்டம்; பிரமாண்ட மின்காந்தம் தயார்

 சீனாவின் செயற்கை சூரியன் திட்டம்; பிரமாண்ட மின்காந்தம் தயார்

பீஜிங்: செயற்கை சூரியன் திட்டத்தின் புதிய மைல்கல்லாக, 5.82 லட்சம் கிலோ எடையுள்ள, உலகின் மிகப்பெரிய மின்காந்தத்தை உருவாக்கி, நம் அண்டை நாடான சீனா சாதனை படைத்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் நிலக்கரி, பெட்ரோல் போன்ற எரிபொருட்களைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கப்படுவதால், காற்று மாசுபாடு ஏற்படுவதுடன், எதிர்காலத்தில் இந்த எரிபொருட்கள் தீர்ந்து விடும் அபாயமும் உள்ளது. சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் பெற்றாலும், அதிக அளவில் கிடைப்பதில்லை. இதற்கு மாற்றாக, சூரியனில் இயற்கையாக நடக்கும் அணுக்கரு இணைவு முறையை பூமியில் பின்பற்றி, தடையில்லாமல் துாய்மையான மின்சாரத்தைப் பெற சீன விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டு உள்ளனர். அதற்காக சீனாவில் உருவாக்கப்பட்டது தான் செயற்கை சூரியன் திட்டம். இந்த செயற்கை சூரியனை உருவாக்குவதற்கு மிகவும் சக்திவாய்ந்த மின்காந்தங்கள் தேவை. சூரியனுக்குள்ளே இருக்கும் கடுமையான வெப்பத்தையும், வாயுவையும் வழக்கத்தை விட மிகக் கடுமையான வெப்பத்திற்கு உட்படுத்தப்படும். அதில் இருந்து உருவாகும் மின்சக்தி எனப்படும் பிளாஸ்மாவையும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் பூட்டி வைக்க இந்த காந்தங்கள்தான் பயன்படுகின்றன. இந்நிலையில், சீன அறிவியல் அகாடமியின் பிளாஸ்மா இயற்பியல் நிறுவனம், ஆங்கில எழுத்தான 'டி' வடிவத்தில், 69 அடி நீளமும், 40 அடி அகலமும் கொண்ட, 5.82 லட்சம் கிலோ எடை கொண்ட பிரமாண்டமான மின்காந்தத்தை தயாரித்துள்ளது. இந்த காந்தம், 10 கோடி டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் உருவாக்கப்படும் பிளாஸ்மாவை, சக்திவாய்ந்த தன் மின்காந்தப் புலத்தால் கட்டுப்படுத்தி குளிர்விக்கிறது. இந்த புதிய மின்காந்தத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை வெற்றி பெற்றது. இதன் வாயிலாக, 2027-ம் ஆண்டுக்குள் சிறிய அளவிலான சோதனை உலையை உருவாக்குவது, 2030ல் அணுக்கரு இணைவு மூலம் வணிக ரீதியாக மின்சாரம் உற்பத்தி செய்வது என்ற தன் லட்சிய திட்டத்தையும் சீனா எட்டுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் வெற்றி பெற்றால், எதிர்காலத்தில் மின்சார தட்டுப்பாடும் இருக்காது, காற்று மாசுபாடும் ஏற்படாது என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Vaasagan
ஜூலை 29, 2026 11:26

கலாய்ச்சிட்டாராம் ... நாசா விஞ்ஞானி, நீ கொஞ்சம் விளக்கம் கொடு பார்ப்போம். எதையாவது உளற வேண்டியது. அப்போதான் செகுலர் நெனச்சுப்பாங்க


Balasubramanian
ஜூலை 29, 2026 10:15

இது என்ன புதுசா? சூரிய காந்தக் கல் சத்திர காந்தக் கல் என்று நம் இலக்கியங்களில் ஏற்கனவே உண்டு! அவைகளை கண்டு பிடித்து சூரிய சக்தியை உபயோகிக்கலாம்! இவர்கள் கூட நம்மூர் நாலந்தா போன்ற இடங்களில் இருந்து ஆட்டையை போட்ட ஏடுகளில் இருந்து இதை தயாரித்து இருக்க வேண்டும்!


தமிழன்
ஜூலை 29, 2026 09:14

நம்ம ஒன்றிய அரசு இதுக்கு போட்டியாக மிகப்பெரிய அளவில் ஒரு பூசை மற்றும் யாகம் நடத்த வேண்டும். பங்கேற்பவர்களுககு ஆளுக்கு ஒருகோடிரூபாய் தட்சணை கொடுக்கவேண்டும். மக்கள் பணம்தானே ... பாரத் ஆத்தாகி ஜெய் . முழு உலகமே இந்தியாவை திரும்பி பார்க்க வேண்டும்....


Anand
ஜூலை 29, 2026 11:50

மதமாரி கழிசடை ஏன் சம்பந்தமே இல்லாமல் ஊளையிடுது?


dandanakka
ஜூலை 29, 2026 08:19

அவனவன் எங்கேயோ போய்கிட்டு இருக்கான்...நம்ம இன்னும் குண்டு சட்டிக்குள்ள குதிரை ஓடிக்கிட்டு இருக்கோம்.


gopi
ஜூலை 29, 2026 09:00

நீ எந்த டாஸ்மாக் சட்டிக்குள்ள இருக்கே dandanakka


Chandhra Mouleeswaran MK
ஜூலை 29, 2026 10:26

சீனாக்காரன் அடுத்த "மக்கள் தொகைக் கட்டுப்பாடு இயந்திரம்" கொரோனா வைரஸைத் தயாரித்து உலகமுழுதும் விட்டுப்பார்த்தான். அப்படி ஒன்றும் பெரிதாக அது மக்களை அழிக்கவில்லை அவன் எதிர்பார்த்தபடி அது இந்தியாவில் ஒன்றும் பெரிதாகக் கிழிக்கவில்லை இப்போது இது செயற்கைச் சூரியனைத் தயாரித்து, அதை வைத்து அணுவுலை அமைத்து அதில் அணுசக்தியைக் "கட்டுப் படுத்தி" வைத்து, அதைக் கொண்டு மின்சாரம் தயாரித்து, அதைக் கொண்டு உணவுப் பொருள் தயாரிக்கிப் போகிறான் உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா தலையை நான்கு சுற்றுச் சுற்றி மூக்கைத் தொடும் வேலை ஏ அப்பா விஞ்ஞானிமாரே பேசாமல் ஒரேயடியாக மனிதனுக்கு வயிற்றுப் பசி எடுக்காமல் இருக்க ஒரு புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரச்சிகரமான கண்டுபிடிப்பு நடத்துங்கப்பா எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும் எல்லாருமே இத்தனை செய்து கொண்டு வயிற்றுப் பாட்டிற்குத்தானே அலைகிறோம் மனிதனுக்கு "அன்ன விச்சாரம் அதுவே விச்சாரம்"


சசிக்குமார் திருப்பூர்
ஜூலை 29, 2026 07:41

ஏற்கனவே கொரானா மூலமாக மூன்று சதவீதம் மக்கள் தொகை குறைத்தார்கள். அப்போது நடந்த ஊரடங்கால் ஆறு சதமாக புதிய பிறப்புக்கு கணக்கு வேறு. இனி உலகத்தை அழிக்காமல் விடமாட்டார்கள் சீனா


viki raman
ஜூலை 29, 2026 02:56

shabash


புதிய வீடியோ