உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எலும்பு முறிவுக்கு மூன்றே நிமிடத்தில் தீர்வு: சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

எலும்பு முறிவுக்கு மூன்றே நிமிடத்தில் தீர்வு: சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: உடைந்த எலும்புகளை சரிசெய்ய, 'போன் க்ளூ' எனும் புதிய 'எலும்பு பசை'யை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது, எலும்பு முறிவுகளை மிக விரைவாக அதாவது மூன்று நிமிடங்களுக்குள் குணப்படுத்த உதவும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். நம் அண்டை நாடான சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜெஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் லின் சியான்பெங் தலைமையிலான ஆராய்ச்சியாளர்களால், உடைந்த எலும்புகளை சரிசெய்வதற்கான புதிய எலும்பு பசை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 'போன் - 2' என பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம், உடைந்த எலும்புத் துண்டுகளை இரண்டில் இருந்து மூன்று நிமிடங்களில் ஒட்ட வைக்க முடியும் எனவும், இதனால், சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கான நேரம் கணிசமாக குறையும் எனவும் கூறப்படுகிறது. தற்போது பயன்படுத்தப்படும் உலோக உள் வைப்புகளுக்கு பதிலாக இது ஒரு புரட்சிகரமான மாற்றாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது-. மேலும், எலும்பு குணமாகும் போது, இந்த பசை உடலால் இயற்கையாகவே உறிஞ்சப்பட்டு விடும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதனால், உலோக தகடுகள் மற்றும் ஆணிகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையில், அவற்றை அகற்ற இரண்டாவதாக செய்யப்படும் அறுவை சிகிச்சை தேவையிருக்காது. ஆய்வக சோதனைகளில், இந்த பசை மிகவும் வலுவானது என்பது தெரியவந்துள்ளது. இந்த பசையை இதுவரை 150க்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் சோதிக்கப்பட்டதில், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் இரண்டிலும் நல்ல முடிவுகளை கொடுத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த போன் - 2 பசை பரவலாக பயன்பாட்டுக்கு வர மேலும் சில சோதனைகள் தேவைப்பட்டாலும், இதன் கண்டுபிடிப்பாளர்கள், சீனா மற்றும் சர்வதேச காப்புரிமைகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். எவ்வளவு வேகமான நீரோட்டம் இருந்தாலும், தண்ணீருக்கு அடியிலும், கடினமாக பரப்பிலும் சிப்பிகள் உறுதியாக ஒட்டிக்கொள்ளும் விதமே, இப்பசை கண்டுபிடிப்புக்கான உத்வேகமாக அமைந்தது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Tamilan
செப் 15, 2025 11:28

மோடி ஆட்சியில் மற்ற நாடுகள்தான் முன்னேறுகின்றன


Nagendran,Erode
செப் 15, 2025 13:59

அந்த நாட்டுக்கு நீ போய் விட வேண்டியதுதானே ஏன் இங்கு இருந்து கொண்டு ...


K Jayaraman
செப் 15, 2025 10:39

ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை தவறி விழுந்து விட்டால், வட்டமான தகட்டில் மேல் பகுதியில் கயிற்றை கட்டி , அதன் அடிப்படையில் இந்த பசையை தடவி ஆழ்துளை கிணற்றுக்கு உள்ளே விட்டு குழந்தையைஎடுக்க முடியுமா என்று பார்க்கலாம் .


Sekar
செப் 15, 2025 09:48

ரஷ்யாவின் கேன்சரை குணப்படுத்தும் கண்டுபிடிப்பு சீனாவின் எலும்பு முறிவுக்கான தீர்வு என புதிய கண்டுபிடிப்புகள். திறன் சார்ந்து மாணவர்கள் கல்விபெறும் வண்ணம் இந்திய கல்வி முறையில் மாற்றம் வேண்டும். இதற்கு பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் பங்கு மிக அதிகமிருக்கிறது என்பதால் ஆசிரியர்கள் கல்வியில் மேம்பட்டவர்களாக, கற்பிக்கும் திறன் மிக்கவர்களாக மற்றும் நல் ஒழுக்கம் உள்ளவர்களாக திகழ வேண்டும். நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஆசிரியர்கள் தகுதி மற்றும் திறன் பரிசோதனை மேலும் அவர்களுக்கு தேவையான டெக்னாலஜி அப்டேட்ஸ்கள் அரசின் சம்பந்தபட்ட துறை பொறுப்புடன் செயல்படுத்த வேண்டும்.


Kalyanaraman
செப் 15, 2025 09:16

எலும்பு முறிவு துறையையே புதுப்பிக்கும் அளவுக்கு நல்ல கண்டுபிடிப்பு. விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் போது அதனுடைய தரம் பற்றி மேலும் தெரிய வரும். ஏனெனில், இது சீனாவின் கண்டுபிடிப்பு. நமது சித்தா, ஆயுர்வேத மருத்துவங்களில் கண்டுபிடிப்புகளை மத்திய-மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் நமது பாரம்பரிய மருத்துவம் உலக மக்களுக்கு நன்மை பயக்கும்.


KOVAIKARAN
செப் 15, 2025 07:38

இது போன்ற கண்டுபிடுப்புகளை நான் என்னுடைய கற்பனையில் மூன்று பகுதிகளாக நான் எழுதி கடந்த வருடம் வெளிவந்த என்னுடைய crime thriller நாவலான, AMARAMIT - THE GREAT, Part I, II, III கதையில் கீழ்கண்ட வாறு எழுதியுள்ளேன். 1. கதாநாயகன் அமெரிக்காவில் ஒரு நெடுஞ்சாலையில் காரில் செல்லும்போது, ஒரு FBI அதிகாரி குண்டடிபட்டு கிடைக்கும்போது, நமது தமிழகத்தைச் சேர்ந்த கதாநாயகன் தன்னிடமிருந்த ஒரு பொடியை குண்டடிபட்ட இடத்தில் தூவுகிறான். ஐந்து நிமிடங்களில், அந்த துப்பாக்கி குண்டு வெளியே ரத்தத்துடன் சேர்ந்து வெளி வருகிறது. இந்த பொடியை அவனது தாயார் பலவிதமான மூலிகைகளை சேர்த்து தயாரித்துள்ளதாக எழுதியுள்ளேன். 2. அதேபோல, பம்பாயில், காயம்பட்ட கதா நாயகனுடைய தங்கைக்கு எலும்பு முறிவு உள்ளது. அதை அவர்களின் தயார் மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு மருந்தை வைத்துக் கட்டுகிறார். அந்தப் பெண்ணின் எலும்பு முறிவு, நான்கு நாட்களில் சரியாகிவிடுவதாக எழுதியுள்ளேன். எனவே, நமது காட்டியுள்ள பலவகையான மூலிகைகளை பயன்டுத்தி பல மருந்துகள் கண்டுபிடிக்கலாம். கேரளாவில் இதற்கான பல வைத்தியசாலைகள் உள்ளன.


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 15, 2025 11:17

நமது சித்தா ஆயுர்வேதம் வைத்திய முறைகளை இன்னமும் இரகசியம் என்ற பெயரில் மறைத்து வைத்து கொண்டே உள்ளார்கள். ஆங்கில மருத்துவம் போல வெளிப்படை தன்மை இல்லை. ஆகவே சித்தா ஆயுர்வேதம் மருத்துவ முறைகள் வளர்ச்சி குறைவாகவே உள்ளது. அதே போல மருந்து தயாரிக்கும் முறைகளையும் காலத்திற்கேற்ப நவீன மயமாக்க முயற்சி செய்யவில்லை. இதனால் இந்த துறைகளின் வளர்ச்சி விகிதம் மிக மிக மிக மெதுவாக உள்ளது. சமூக ஊடகங்களில் இந்த சித்தா ஆயுர்வேதம் மருத்துவர்கள் மற்றும் சமூக ஊடக நண்பர்கள் கருத்துக்கள் பெரும்பாலானவை நேர் மறை கருத்துகளாக இருப்பதற்கு பதிலாக எதிர் மறை கருத்துக்களாக உள்ளது. இதைச் செய்ய கூடாது அதை செய்ய கூடாது என்று தான் அதிகம் கூறுகிறார்கள். இந்த போக்கையும் சித்தா ஆயுர்வேதம் மருத்துவர்கள் மாற்றி கொள்ள வேண்டும்.


SUBBU,MADURAI
செப் 15, 2025 07:37

ஏலே மூர்க்கனே பொய்கிந்து போகிற போக்கில் கோமியத்தை கிண்டல் செய்து உன் வன்ம கருத்தை பதிவிட்டு இருக்கிறாய் அரேபியாவில் உன் இரத்த சொந்தங்கள் ஒட்டகத்தின் கோமியத்தை குடிப்பது YouTube ல் கொட்டிக் கிடக்கிறது அதை பார்த்து விட்டு பின் உன் கருத்தை பதிவு செய்.


Subramanian
செப் 15, 2025 06:09

But what is the side effects after 10/15 years. They will not do the research for the sane and even if it is done, won’t reveal the results.


naranam
செப் 15, 2025 05:45

அடுத்தடுத்து பல புதிய கண்டுபிடிப்புகள் சீனாவில்! எப்படி மேலும் மேலும் கல்லூரிகளிலும் அரசு வேலையிலும் இட ஒதுக்கீடு பெறுவது மற்றும் உரிமை அல்லது ஓசித் தொகை பெறுவது என்பதில் பல கண்டுபிடிப்புகள் பெருகி விட்டன!


ஜெய்ஹிந்த்புரம்
செப் 15, 2025 03:47

கோமியத்துக்கு இதை விட சிறப்பான குணங்களுண்டு. அதை ஆராய்ந்து பேட்டண்ட் வாங்கி இந்தியா ஒரு வல்லரசு நாடு ஆகலாம்.


Gokul Krishnan
செப் 15, 2025 09:02

உன் கருத்தை ஆப்கானிஸ்தான் இடம் முதலில் சொல்லு பெண்கள் பள்ளிகள் கல்லூரிகளில் வர கூடாது பயில கூடாது .அசோக சின்னம் கட்டிடத்தில் இருந்தால் எதிர்க்கும் உன் கூட்டம் ரூபாய் நோட்டில் இருக்கும் அசோக சின்னத்தை வேண்டும் என்று சொல்லி கிழித்து விட வேண்டியது தானே


Kasimani Baskaran
செப் 15, 2025 03:47

அப்படியே பிரிந்து கிடைக்கும் ஆத்தா தீமகாவினரை ஒன்று சேர ஏதாவது சீனப்பசை கண்டுபிடித்தால் நன்றாக இருக்கும்.


Vasan
செப் 15, 2025 05:59

அதற்கு சீனப்பசை போதாது. சீனிப்பசை வேண்டும். Sweet box.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை