உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டெக்சாஸில் வெள்ளம்: 15 குழந்தைகள் உட்பட 43 பேர் பலி; 27 பெண்கள் மாயம்

டெக்சாஸில் வெள்ளம்: 15 குழந்தைகள் உட்பட 43 பேர் பலி; 27 பெண்கள் மாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெக்சாஸ்: அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.அமெரிக்காவின், தென்- மத்திய டெக்சாஸ் மாகாணத்தின், மலைப் பகுதியில் அமைந்துள்ள கெர் கவுன்டியில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் திடீரென கனமழை கொட்டியது. இதனால் குவாடலுாப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குவாடலுாப் நதியில் 45 நிமிடங்களில் 26 அடி அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்து, கரையில் இருந்த குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதில் 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். மேலும் குவாடலுாப் ஆற்றங்கரையோரம் இருந்த கிறிஸ்துவ கோடைக்கால முகாமில் தங்கியிருந்தவர்களில், 27 பெண்கள் மாயமாகி இருப்பதாகத் தெரியவந்துள்ளது. வெள்ளம் ஏற்பட்ட போது முகாமில் 700 பெண்கள் இருந்துள்ளனர். இறந்தவர்களில் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. கெர் கவுன்டியின் சராசரி ஆண்டு மழைப்பொழிவில் மூன்றில் ஒரு பங்கு மழை அதாவது, 30 செ.மீ., மழை ஒரே இரவில் பெய்துள்ளதே நிலைமை மோசமாக காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramesh Sargam
ஜூலை 06, 2025 12:42

அண்ணே, டிரம்ப் அண்ணே, முதலில் பாதிக்கப்பட்ட உங்க ஊர் மக்களுக்கு ஏதாவது செய்யப்பா... பிறகு மற்ற நாட்டு விஷயங்களில் தலையிடலாம். நோபல் பரிசும் வாங்கலாம்.


Pmnr Pmnr
ஜூலை 06, 2025 12:12

இயற்கையால் ஏற்படும் விளைவு ஒன்றும் செய்ய முடியாது


வல்லவன்
ஜூலை 06, 2025 11:48

F1 மற்றும் H1b மக்களின் அமெரிக்க வாழ்க்கைக்கு நம்ம ஊர் மிடில் கிலாஸ் மாதவன் வாழ்க்கை எவ்வளவோ மேல்


Kasimani Baskaran
ஜூலை 06, 2025 09:23

அண்டார்டிகாவில் பனி வெகு வேகமாக உருகுவதால் பல இடங்களில் நீர் மட்டம் மற்றும் மழையின் அளவும் வெகுவாக அதிகரிக்கும்.


Jack
ஜூலை 06, 2025 09:22

டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் ஹெய்ல் ஸ்டார்ம் அடிக்கடி வந்து வீட்டு roof டேமேஜ் ஆவது சர்வசாதாரணம் ..பத்தாயிரம் முதல் இருபதாயிரம் டாலர் தண்ட செலவு ..சில சமயங்களில் மூன்று நான்கு மாதங்களில் மாற்ற வேண்டிய அவசியம் வரும் .. கார்களை வெளியில் நிறுத்தினால் கண்ணாடிகள் உடையும் …அமெரிக்காவில் வாழ்வது பெரிய சவால் .. பில் கேட்ஸ் எலான் மாஸ்க் சுந்தர் பிச்சை போன்ற சில பணக்காரர்களுக்கு தான் சொகுசு வாழ்க்கை ..H1B விசாவில் வேலை பார்ப்பவர்கள் பிச்சை எடுப்பவர்களை விட ஒரு படி மட்டும் உயர்ந்தவர்கள்


வல்லவன்
ஜூலை 06, 2025 11:39

100% சரி


krishnan
ஜூலை 06, 2025 08:25

இயற்கை அன்னையின் முன் அனைவரும் சமமே


Jack
ஜூலை 06, 2025 15:06

மார்க்கம் அன்னை என்றால் பொங்குவாங்களே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை