உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டீப்சீக் ஏ.ஐ.,... ஒரே இரவில் அமெரிக்க கனவை கலைத்த சீனா

டீப்சீக் ஏ.ஐ.,... ஒரே இரவில் அமெரிக்க கனவை கலைத்த சீனா

பெய்ஜிங் : ஒரே இரவில் அமெரிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப சாம்ராஜ்யத்தை ஆட்டம் காண வைத்திருக்கிறது, சீனா. டீப்சீக் ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த இரண்டு மாடல்களை அறிமுகம் செய்து, அந்நாட்டின் கனவை கலைத்திருக்கிறது.அண்மைக் காலமாக ஏ.ஐ., தொழில்நுட்ப போட்டி உலகளவில் பெரும் வேகம் எடுத்திருக்கிறது. அமெரிக்காவின் 'என்விடியா' நிறுவனத்தின் அதிக திறன் கொண்ட சிப்களை சீனா பெற்று வந்த நிலையில், இந்த துறையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதை தவிர்க்கும் நோக்கில், அந்நாட்டுக்கு அமெரிக்க சிப்களை விற்பனை செய்ய, 2022லேயே தடை விதிக்கப்பட்டது.

அதிர்ச்சி:

எனினும், அதற்கு முன்பே சீனா எதிர்காலத் தேவை கருதி, சிப்களை கொள்முதல் செய்து குவித்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் அறிமுகமான சீனாவின் டீப்சீக் செயலி சார்பில் வெளியிடப்பட்ட ஆர்1 மற்றும் வி3 ஏ.ஐ., மாடல்கள், நேற்று முன்தினம் அமெரிக்க பங்குச் சந்தைகளை உலுக்கியது. ஒரே நாளில், ஆப்பிள் ஆப்ஸ்டோரில் பதிவிறக்க எண்ணிக்கையில், சாட் - ஜி.பி.டி.,யை சீனாவின் டீப்சீக் ஏ.ஐ., மாடல்கள் கடந்து, உலகின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனங் களுக்கு அதிர்ச்சி அளித்தன.

சரிவு:

சீனாவின் புதிய ஏ.ஐ., மாடல்கள், குறைந்த விலையில் உற்பத்தி செய்யக்கூடிய சிப்களை பயன்படுத்தும் என்ற தகவல் வெளியானதும், சிப் தயாரிப்பில் கோலோச்சும் என்விடியா நிறுவன பங்கு விலை அதலபாதாளத்துக்கு சரிந்தது. அதனுடன், மைக்ரோசாப்ட், ஆல்பபெட், டெல் டெக்னாலஜிஸ் என, பல அமெரிக்க தொழில்நுட்ப நிறுவன பங்குகளும் வீழ்ந்தன.சீன ஏ.ஐ., தாக்கத்தால், அமெரிக்காவின் நாஸ்டாக் 3.07 சதவீதமும்; எஸ் அண்டு பி 500, 1.50 சதவீதமும் வீழ்ந்தன. என்விடியா பங்கு விலை 17 சதவீதம் சரிந்தது. அதோடு, பிலடெல்பியாவின் செமிகண்டக்டர் வர்த்தக குறியீடும் 9.20 சதவீதம் வீழ்ச்சி கண்டது. இது 2020க்குப் பிறகு சந்தித்த மிகப் பெரிய சரிவாகும்.என்விடியாவின் 'எச்800' சிப் வாயிலாக செயல்படும் டீப்சீக் ஏ.ஐ., சேவைக்கு மிகக் குறைந்த தரவு போதுமானது. இதனால், ஓபன் ஏ.ஐ.,யின் சாட் - ஜி.பி.டி.,க்கு ஆகும் செலவை விட பலமடங்கு குறைவு என்பது, இந்த துறையினரின் புருவத்தை உயர்த்திஉள்ளது. இதனால், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப சந்தையில், அமெரிக்கா மட்டுமின்றி; சர்வதேச அளவிலும் சீனா பெரும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.

'டீப்சீக்' வரலாறு

* வென்பெங் என்பவர் 2015ல் துவங்கிய 'ஹை ப்ளையர்' என்ற ஆராய்ச்சி அமைப்பின் சார்பில், பயர் ப்ளையர் என்ற பிரிவு துவங்கப்பட்டது * 2023ல் ஏ.ஐ., ஆராய்ச்சியில் கவனத்தை திருப்பிய வென்பெங், டீப்சீக் என்ற ஏ.ஐ., செயலியை கடந்த வாரம் அறிமுகம் செய்தார் * பைடு, அலிபாபா போன்று சுதந்திரமாக செயல்படும் இந்நிறுவனம், குறைந்த விலை சிப்களை பயன்படுத்தி வெளியிட்ட ஏ.ஐ., மாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன* ஏ.ஐ., உலகின் கவனத்தை பெற்ற ஒரு நாளிலேயே, தன் பயனர்கள் சேவையில் ஊடுருவல் நடந்ததாக, டீப்சீக் தெரிவித்துள்ளது. * பெரிய அளவில் தன் சேவையில் தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பதிவிட்டுள்ளது. * என்விடியா பங்கு விலை வீழ்ந்ததால், அதன் சி.இ.ஓ., ஜென்சங் ஹாங் 1.78 லட்சம் கோடி ரூபாயை இழந்தார்* முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த 500 பெரும் பணக்காரர்கள் மொத்தம் 9.28 லட்சம் கோடி ரூபாயை இழந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Barakat Ali
ஜன 29, 2025 16:48

சீனாவுக்கு அமெரிக்காவுடன்தான் போட்டி ......


Svs Yaadum oore
ஜன 29, 2025 11:42

Deep seek நிச்சயம் சில பின்விளைவுகள் உருவாக்கும் ....இலவசம் ....அணைத்து துறையிலும் இதன் விளைவுகள் இருக்கும் ..ஏற்கனவே இது வெட்ட வெளிச்சம் ....


Palanisamy T
ஜன 29, 2025 10:54

உலக அரங்கில் சீனா என்றும் நம்பமுடியாத ஊர். அவர்களுக்கு என்றும் அவர்களின் சுயநலத்திற்குத்தான் அதிக


GMM
ஜன 29, 2025 07:46

சீனா அமெரிக்க சிப் களை அதிகம் வாங்கி குவித்து, திடீர் போட்டி உருவாக்கி, அமெரிக்க நிறுவனம் பங்குகளை சிதைகிறது. உலக பொருளாதாரத்தை கூட தகர்க்கும்.. அமெரிக்கா நீண்டகாலம் ஆராய்ச்சி செய்து கண்ட அறிய கண்டுபிடிப்பை பாகிஸ்தான், சீனாவிடம் அடகு வைத்து விட்டது. தொழில் ரகசியங்களை அமெரிக்கா, இந்திய போன்ற நாடுகள் காப்பாற்றவில்லை என்றால், முதல் குறி அவர்களை நோக்கி இருக்கும். சீனா, பாகிஸ்தான் தொழில் தர்மம் கடைபிடிப்பது இல்லை. தொழில் தர்மம் பற்றி விரும்பாது.


நிக்கோல்தாம்சன்
ஜன 29, 2025 07:18

இந்த பயன்பாட்டை பெறுவதற்கு உங்களது தனிப்பட்ட தரவுகளை கட்டாயம் கொடுக்கவேணும் என்று டீப்சீக் சொல்லியுள்ளது புருவத்தை உயர்த்தியது ,


அப்பாவி
ஜன 29, 2025 06:36

கேவலம். ஆப்பிள் ஃபோனில் அதிகமாக டவுன்லோடு ஆன ஆப் என்று டீப் சீக் வந்ததால் உலகமே இருண்டிடுச்சுன்னு ஒரு பாவ்லா. சீன கண்டுபிடிப்பில் பெரும்பாலானவை அமெரிக்காவிலிருந்து திருடப்பட்டவை. அதற்கு காரணம் அமெரிக்கா தான். சீனாவில் போய் ஃபேக்டரிகளைக் கட்டி லாபம் பார்த்த அமெரிக்க கார்ப்பரேட்கள் சீனாவை வளர்ந்தது உட்டதில் பெரும்பங்காற்றினார்கள். அதன் பலனை இப்போது அணுபவிக்கிறார்கள்.


திகழ் ஓவியன், Ajax, Ontario
ஜன 29, 2025 08:39

அப்பாவி, உன் இரும்பு கரம் விடியல் சார் (அந்த சார் யாரு?) ...


Kasimani Baskaran
ஜன 29, 2025 06:13

தொழில் என்றால் போட்டி இருக்கத்தான் செய்யும். இன்னும் நாலு மாதத்தில் அமெரிக்கா இதை விட பிரமாதமான தொழில் நுணுக்கத்தை கொண்டுவரலாம். இந்தியா கூட கொண்டு வரலாம். யார் உழைக்கிறார்களோ அவர்களுக்கு பலன்.


Senthoora
ஜன 29, 2025 05:55

இந்த விடயத்தால் கடுப்பான டிரம்ப், இப்போ ரூம் போட்டு யோசிப்பார் , எப்படி சீனாவுக்கு ஆப்படிக்கலாம் என்று.


முக்கிய வீடியோ