உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க தேர்தலில் டிரம்ப் கட்சி படுதோல்வி

அமெரிக்க தேர்தலில் டிரம்ப் கட்சி படுதோல்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த தேர்தலில், பல்வேறு மாநிலங்களில் டிரம்ப் கட்சி (குடியரசு கட்சி) படுதோல்வி அடைந்துள்ளது.அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் இரண்டாம் முறை பதவியேற்ற பிறகு, இந்தாண்டு முதல் முறையாக தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. மாநில கவர்னர், அட்டர்னி ஜெனரல் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான இடங்களில் டிரம்ப்பின் குடியரசு கட்சி தோல்வியை தழுவியுள்ளது.அதன் விபரம் பின்வருமாறு:* விர்ஜினியா மாநில கவர்னர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஸ்பான்பெர்கர், டிரம்ப் கட்சியின் (குடியரசு கட்சி) வேட்பாளரை தோற்கடித்தார். விர்ஜினியா மாநிலத்தில் அட்டர்னி ஜெனரல் பதவிக்கான தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த கசாலா ஹாஸ்மி வெற்றி பெற்றுள்ளார்.* நியூஜெர்சி மாநில கவர்னர் தேர்தலில், ஜனநாயக கட்சியை சேர்ந்த மிக்கி செரில், டிரம்ப் கட்சியின் வேட்பாளரை தோற்கடித்தார். நியூயார்க் மேயர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் மம்தானி, டிரம்ப் கட்சியின் வேட்பாளரை தோற்கடித்தார்.* மாசாசுசெட்ஸ் நகர மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த மிசேல் வூ வெற்றி பெறும் நிலையில் உள்ளார். இதேபோல, கலிபோர்னியா மாநிலத்தில் மாவட்ட தொகுதி மறு வரையறை தொடர்பான ஜனநாயக கட்சியின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவும் மக்கள் ஓட்டளித்துள்ளனர். இதன் மூலம் கலிபோர்னியா மாநிலத்தில் ஜனநாயக கட்சியின் நிலை வலுவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதான் காரணம்?

டிரம்ப் அதிபராக 2வது முறை வெற்றி பெற்று பதவிக்கு வந்த பிறகு, பல்வேறு தடாலடி முடிவுகளை அறிவித்து வருகிறார். முக்கியத்துவம் இல்லாத அரசு துறைகளை குறைப்பது, அரசு ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வது, வெளிநாடுகளுக்கு வரி விதிப்பது என அவரது முடிவுகளால் தினமும் அமெரிக்க அரசியல் பரபரப்பாகவே இருந்து வருகிறது.இத்தகைய சூழலில் நடந்து முடிந்துள்ள இந்த தேர்தல், டிரம்ப் ஆட்சியின் மீதான கருத்துக் கணிப்பாகவே கருதப்படுகிறது. தேர்தல் தோல்வி பற்றி கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், 'வேட்பாளர் பட்டியலில், எனது பெயர் இல்லாததும், அரசு நிர்வாகம் முடக்கப்பட்டது காரணம்'' என்று தெரிவித்துள்ளார்.வெற்றி பெற்றவர்களுக்கு, ஜனநாயக கட்சியை சேர்ந்த, முன்னாள் அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

A CLASS
நவ 05, 2025 17:52

அடுத்த அதிபர் தேர்தலில் தனது பெயர் வேட்பாளர் பட்டியல் இடம் பெறவில்லை என்றால் குடியரசு கட்சி தோற்கும் என்று சூசகமாக சொல்கிறார்.


Rajendran Saravanan
நவ 05, 2025 17:19

விளையாட்டு பதிவுகளும் இடம்பெறவேண்டும்


Rajendran Saravanan
நவ 05, 2025 17:17

பதிவுகள் அருமை.


Appan
நவ 05, 2025 16:12

டிரம்ப் ஏதும் கவலை படாமல் உலக சுற்றுப்பயம் செயது . அரச மரியாளை வாங்கி சந்தோசப்படுகிறார். மேலும் கடந்த மதம்அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தரலை. அதை பற்றி ஒன்னும் பேசுவது இல்லை. அவர்கள் சாப்பாட்டுக்கு ஒன்னும் இல்லாமல் போனால் ஒன்னும் கவலை இல்லை இது தான் அமெரிக்க . ..டிரம்புக்கு அமெரிக்காவை பற்றி எந்த கவலையும் இல்லை. மீடியாக்களின் மேல் மான நஷ்ட ஈடு போட்டு பணம் வாங்குவது தான் முழுநேர வேலை. மீடியாக்களும் டிரம்புக்கு பணம் கொடுத்து காரியம் செய்து கொள்கிறார்கள். இது புது வகை ஊழல்...


duruvasar
நவ 05, 2025 15:41

வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இல்லை . இப்போ புரியுதுங்களா ராகுலுக்கும் ஸ்டாலினுக்கும் எந்த ஊரில் கொம்பு சீவி விட்டிருக்கிறார்களென்று


உண்மை கசக்கும்
நவ 05, 2025 15:37

நியூயார்க் மேயராக ஒரு கம்மி வெற்றி. நம்ம ஊரு கம்மிகளுக்கு குஷி...


Suppan
நவ 05, 2025 17:08

கம்மி மட்டுமல்ல. மதவெறியனும் கூட.


Ramalingam Shanmugam
நவ 05, 2025 18:13

கம்மிகள் கும்மி அடிப்பார்கள்


ராமகிருஷ்ணன்
நவ 05, 2025 14:51

அமெரிக்க விடியலார் டிரம்பர் இப்படியே இருந்தா அமெரிக்கர்களை பாக்கிஸ்தான் மக்களை போல பிச்சை எடுக்க வைத்து விடுவார். வாழ்ந்து கெட்டவர்களின் நாடாக போகிறது. மற்ற நாட்டு மக்களிடம் காசை புடுங்கி உன் மக்களை வாழ முடியாது


Kudimagan Mannar
நவ 05, 2025 14:42

சுவீட் எடு கொண்டாடு


Amar Akbar Antony
நவ 05, 2025 14:21

விரைவில் அமெரிக்கா எனும் திமிர் பிடித்த நாட்டின் தலைவர்களால் இஸ்லாமிய மூடர்களின் கைகளுக்கு வரும். பின்னர் வருத்தப்படுவார்கள் உண்மையான அமெரிக்கர்கள். இவெயெல்லாம் நடக்கக்கூடாது என்பதற்கு உண்மையான இந்தியன் காங்கிரெஸ் மற்றும் கூட்டணிக்களவாணிகளுக்கு வாக்களிப்பதில்லை.


nagendhiran
நவ 05, 2025 14:18

தேவையா?


சமீபத்திய செய்தி