உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பயங்கரவாத உள்கட்டமைப்பை அழித்தது நியாயமானது: பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்

பயங்கரவாத உள்கட்டமைப்பை அழித்தது நியாயமானது: பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்:பயங்கரவாத உள்கட்டமைப்பை அழித்தது நியாயமானது என்று பிரி்ட்டனின் முன்னாள் பிரதமரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் கூறியுள்ளார்.ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், இந்திய நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ரிஷி சுனக் கூறியதாவது:வேறொரு நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்திலிருந்து தனக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுவதை எந்த நாடும் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. பயங்கரவாத உள்கட்டமைப்பை இந்தியா தாக்குவதில் நியாயம் உள்ளது. பயங்கரவாதிகளுக்கு இதை விட எந்தத் தண்டனையும் இருக்க முடியாது. இவ்வாறு ரிஷி சுனக் கூறியுள்ளார்.பிரிட்டன் பார்லிமென்டில் அந்நாட்டு பிரதமர் ஸ்டார்மர், பேசும்போது, நாங்கள் இரு நாடுகளுடனும், மற்ற சர்வதேச கூட்டாளி நாடுகளுடன் பதற்றத்தைக் குறைத்தல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து அவசர ஆலோசனை, பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்று கூறினார்.இந்நிலையில் ரிஷி சுனக் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kasimani Baskaran
மே 08, 2025 03:58

முக்கால் நூற்றாண்டுகளாக இந்தியாவின் பகுதிகளை ஆக்கிரமித்து இருக்கிறார்கள். அடித்து விரட்டுவதை விட்டு விட்டு வசனம் பேசுவது சரியல்ல. குறைந்தது மூன்று துண்டாக உடைக்க வேண்டும்


Bhakt
மே 08, 2025 02:22

அவங்க இவர் பூர்வீக இந்தியர்னு தூக்கிட்டாங்க...நம்ம மட்டும் மையோனிஸ்களையும், வின்சிகளையும் தேசிய கட்சியின் ஓனர்களாக விட்டு வச்சிருக்கோம்.


Easwar Kamal
மே 07, 2025 23:58

இப்போ எல்லாம் ஆதிர்ப்பானுவ அதுவே பதவியில் இருக்கும்போது வாய் திறக்கமட்டுணுவை. இந்த ரிஷியே பிரிட்டனில் இறுக்கமுடியாமல் அமெரிக்காவில் சுத்திகிட்டு இருக்குது.


Ramesh Sargam
மே 07, 2025 22:44

இப்பொழுது உள்ள இந்திய அரசு செய்வது எல்லாம் நியாயமானதுதான்.


புதிய வீடியோ