உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சென்னை வழியாக இலங்கை தப்பினார்களா பஹல்காம் பயங்கரவாதிகள்; உண்மை என்ன?

சென்னை வழியாக இலங்கை தப்பினார்களா பஹல்காம் பயங்கரவாதிகள்; உண்மை என்ன?

கொழும்பு: சென்னையில் இருந்து சென்ற விமானத்தில் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் சென்றதாக வெளியான தகவலை தொடர்ந்து, கொழும்பு விமான நிலையத்தில் அந்நாட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் பின்னணியில், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qh1z77pz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்பரப்பில் நுழைய தடை, பாகிஸ்தானியர்களுக்கு விசா ரத்து, பாக்., பொருட்களை இறக்குமதி செய்ய தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளையும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் அடையாளம் கண்டனர். அவர்களின் போட்டோக்களை வெளியிட்டு, தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகள், சென்னையில் இருந்து நண்பகல் 11.59க்கு இலங்கை சென்ற விமானத்தில் தப்பிச் சென்றதாக சென்னை விமானநிலைய அதிகாரிகளுக்கு இமெயில் வந்தது. இதைக் கண்ட அதிகாரிகள் அதிர்ந்து போயினர். சென்னையில் இருந்து விமானம் இலங்கைக்கு புறப்பட்டு சென்று விட்டதால், உடனடியாக கொழும்பு விமான நிலைய அதிகாரிகளுக்கு, இது பற்றி தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், சம்பந்தப்பட்ட விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் கொழும்பு விமான நிலைய அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர். ஆனால், சந்தேகிக்கும்படியான நபர்கள் யாரும் இல்லை என்று உறுதியானது. அதன்பிறகு, அந்த இமெயில், புரளி என அதிகாரிகள் உறுதி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

fitz gerard rayen
மே 04, 2025 08:43

உண்மைதான் கடைசீயாக யாராவது ஒரு ஆளை பிடித்து இவன் தீவிரவாதி சொல்லி கதையை முடிப்பார்கள்


Raja k
மே 03, 2025 21:17

காஷ்மீர்ல் தாக்குதல் நடத்தி விட்டு பல மாநிலங்கள் தாண்டி சென்னை வந்து தப்பினார்கள் என்றால் உள்துறை அமைச்சகமும், மத்திய அரசும் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது.


Suresh Rajagopal
மே 03, 2025 21:26

செய்தியை முழுதும் படிக்காமல் எதற்கு இந்த பிதற்றல்?


Tetra
மே 03, 2025 21:30

உண்மை


S.Martin Manoj
மே 03, 2025 20:56

தீவிரவாதிகள் காஷ்மீரில் இருந்து சென்னை வந்திருக்கிறார்கள் என்றால் அது மத்திய உளவுத்துறையின் மிகப்பெரிய தோல்வி,விமானநிலையம் மத்திய அரசின் கட்டுபாட்டில் உள்ளது இதுகூட தெரியாமல் தற்குறிகள் மாநில அரசை குறை சொல்லி கருத்து பதிவிடுகிறார்கள்.


Tetra
மே 03, 2025 21:32

பத்து நாளாக அல்லது குறைந்தது ஐந்து நாளாகவாவது இங்கு இருந்திருப்பார்கள் அல்லவா?


பெரிய ராசு
மே 03, 2025 22:00

நீ உன்னிடம் என்ன எதிர்பார்க்க முடியும் ... திருட்டு திமுக முட்டுக்கொடு


திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானஸ்கந்தன்
மே 03, 2025 20:55

உண்மையோ பொய்யோ கொளுத்தி போட்டா தமிழ் நாட்டு மீது ஒரு அவப்பேர் வரட்டுமே அதுக்கு கண்ணு காது மூக்கு வச்சு புரளியை கிளப்பி விட்டா டிம்க்கா காரன்மேல பழி விழட்டுமே. எத்தனையோ தாக்குதல்களில் இதுவும் ஒன்னு. அதுக்கு தாளம் போட இங்கேயும் சில ஜீவன்கள்.


India our pride
மே 03, 2025 20:48

நமக்கு உள் நாட்டு எதிரிகள் அதிகமாக உள்ளனர்.


பாமரன்
மே 03, 2025 20:39

விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசின் கன்ட்ரோலில் இருக்கும் விமான நிலையங்கள் மூலம் மத்திய அரசின் இமிக்ரேஷன் க்ளியர் பண்ணுனா தான் முடியும்...அது யாராக இருந்தாலும் ...ராகுல் காந்தி ஸ்டாலின்... அவ்ளோ ஏன் இப்போ எங்கயோ ஒளிஞ்சிருக்கும் ம்மே ம்மே கூடன்னு தெரியாமல் கும்மிடிப்பூண்டி தாண்டாத பகோடாஸ் எழுதுதுக... படிங்கயான்னா கேட்டால் தானே...???


Gopalan
மே 03, 2025 20:18

இந்த திராவிட ஆட்சியில் கோவையில் சிலிண்டர் வெடித்ததை கண்டு கொள்ளாத அரசு எப்படி இயங்கும் இந்த விஷயத்தில்?? அண்ணாமலை போன்றவர்களால் மட்டுமே தமிழக அரசுக்கு தகுந்த உதவி செய்வார்கள்.


GMM
மே 03, 2025 20:03

வதந்தியாக இருந்தாலும், சில மாநிலங்கள் தேச விரோதிகள் புகலிடம் ஆகி விட்டன. நீதிபதியால் , அரசியல் வழக்கறிஞரின் அதிகார பிரிவினை வாதம் மூலம் மாநில உண்மை நிலை அறிய முடியவில்லை. வழக்கின் வாத அடிப்படையில் தீர்வு வழங்குவதால், அனுபவத்தில் தான் ஆபத்தை உணர முடியும். சில மாநிலங்களில் தேச விரோதிகள் வீடு கட்டி குடியேறி விட்டனர். மாநில சட்டம் ஒழுங்கு அதிகாரம் மாற்ற வேண்டும். மாநிலங்களில், மத்திய காவல் நிலையம் அவசியம். மத்திய பாதுகாப்பு படை பிரிவு நிலை கொள்ள வேண்டும். மாநில வரவு செலவு திட்டத்தில் கட்டாயம் நிதி ஒதுக்க வேண்டும்.


Ramesh Sargam
மே 03, 2025 19:56

சென்னை வழியாக தப்பிக்க வாய்ப்பிருக்கிறது. அந்த வாய்ப்பை யார் ஏற்படுத்திக்கொடுப்பார்கள் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டிய அவசியமில்லை. அது யார் என்று உங்களுக்கே தெரியும்.


பாமரன்
மே 03, 2025 20:40

இவரெல்லாம் எப்படி அமிரிக்கா போனாருன்னு தெர்ல... ரிஜெக்ட் ஆகி வந்தது சரி தான்


M R Radha
மே 03, 2025 21:31

99% அது சைக்கோ அண்ட் குருமா கேங்காதான் இருக்க முடியும்


Murugesan
மே 03, 2025 19:53

மத்திய அரசே இமெயில் அனுப்பிய தேசவிரோத திராவிட அயோக்கியனை பிடிங்க, தமிழக காக்கிச்சட்டைகள் திராவிட அரசியல்வாதிங்க காலை சுத்துகின்ற திருடனுங்க


புதிய வீடியோ