உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்திய - சீன எல்லையில் தீபாவளி கொண்டாட்டம்

இந்திய - சீன எல்லையில் தீபாவளி கொண்டாட்டம்

பீஜிங்: கிழக்கு லடாக்கில் பிரச்னைக்குரிய பகுதிகளில், இருநாட்டு படைகளும் விலக்கி கொள்ளப்பட்டதாகவும், தீபாவளி பண்டிகை தினமான இன்று(அக்.,31), எல்லையில் சீன ராணுவத்தினருக்கு நம் வீரர்கள் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நம் அண்டை நாடான சீனாவின் ராணுவம், கிழக்கு லடாக் பகுதிக்குள் 2020 மே மாதம் ஊடுருவ முயன்றது; இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இரு நாட்டு வீரர்களும் மோதிக் கொண்டனர். இதனால் எல்லையில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டன.கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்த பல சுற்று பேச்சுக்குப் பின், சமீபத்தில் உடன்பாடு ஏற்பட்டது. எல்லையில் இருந்து படைகளை விலக்கி கொள்ளும் நடவடிக்கைகள் துவங்கின. இந்த நடவடிக்கை குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின் ஜியான் கூறுகையில், “எல்லையில் நீடித்து வந்த பிரச்னைக்கு இரு நாடுகளும் தீர்வு கண்டுள்ளன. ''இதன் வாயிலாக, மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி தற்போது கிழக்கு லடாக் பகுதியில் உள்ள இருநாட்டு படைகளும் ஏற்கனவே திட்டமிட்டப்படி முறையாக விலக்கி கொள்ளப்பட்டு வருகின்றன,” என்றார்.இதற்கிடையே, இந்தியா - சீனா இடையே எல்லையில் நீடிக்கும் பதற்றத்தை தணிக்கும் வகையில் இருநாட்டு படைகளும் விலக்கி கொள்ளும் நடவடிக்கைக்கு, அமெரிக்க அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.எல்லை பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதை கொண்டாடும் விதமாக, தீபாவளி பண்டிகை தினமான இன்று, எல்லையில் சீன ராணுவத்தினருக்கு நம் வீரர்கள் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவிக்க உள்ளதாக நம் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
அக் 31, 2024 12:33

பார்த்து பட்டாசு வெடிக்கலாம் என்று கூப்பிட்டு உண்மையான வெடியை வைத்துவிடப்போகிறார்கள் இந்த சீனாக்காரர்கள்....


J.V. Iyer
அக் 31, 2024 04:30

இவர்கள் எதிர்பாராத சமயத்தில் காலை வருவார்கள். இவர்களை முழுவதும் நம்பக்கூடாது.


jgn
அக் 31, 2024 02:31

Really HONURABLE JAYSANKAR UNDER PM MODIJEE TRYING THIER BEST TO SAFEGUARD THE COUNTRY. GEO POLITICALLY TOO MANY COUNTRIES ON WAR ZONE, PAK IS TRYING WITH CHINA TO DISTURB INDIA, MR..A.DOVEL HAD HUGE EXPERIENCE IN NATIONAL SECURITY.INDIA AND CHINA HISTROLLICALY SIMILAR THINKING ONLY LAST 75 YEARS CHINA TOTALLY DIFFRENT POLITICAL .40% world population India and China no luxury to war, only make money both countries. Jai Hind


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை