உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பனாமா கால்வாய் வேணும்; அடம் பிடிக்கிறார் டிரம்ப்; அடுத்து என்ன நடக்குமோ!

பனாமா கால்வாய் வேணும்; அடம் பிடிக்கிறார் டிரம்ப்; அடுத்து என்ன நடக்குமோ!

வாஷிங்டன்: 'சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள பனாமா கால்வாய், அமெரிக்கா வசம் வரப்போகிறது' என பதவியேற்பு விழாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.பனாமா என்பது மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று. இந்த நாட்டின் வழியாக அமைக்கப்பட்டுள்ள கால்வாய்க்கு பனாமா கால்வாய் என்று பெயர். கப்பல்கள், தென் அமெரிக்காவின் கடைக்கோடி முனையை சுற்றிக்கொண்டு செல்வதை தவிர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டதே இந்த கால்வாய். இது, ஒரு முனையில் அட்லாண்டிக் பெருங்கடலையும், மற்றொரு முனையில் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=svig7ftk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சுமார் 82 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தக் கால்வாயை, 1914ல் பெரும் பொருட்செலவில், பல்லாயிரம் தொழிலாளர்கள் உழைப்பில் அமெரிக்கா உருவாக்கியது. தொடர்ந்து அதை நிர்வகித்தும் வந்தது. இந்தக் கால்வாய் திறக்கப்பட்டு 110 ஆண்டுகள் ஆகின்றன. கால்வாய் அமெரிக்காவின் வசம் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பனாமாவில் பல ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வந்தன.அந்த நாட்டு அரசும், தங்களிடம் கால்வாயை ஒப்படைக்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தியது. இதன் விளைவாக இரு நாடுகளும் 1977ல் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டன.அதன் அடிப்படையில், கால்வாய் 1999ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி பனாமா வசம் ஒப்படைக்கப்பட்டது. அன்று முதல் பனாமா நாட்டு அரசுதான் இந்த கால்வாயை நிர்வகிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 14 ஆயிரம் கப்பல்கள் இந்த பனாமா கால்வாய் வழியாகச் செல்கின்றன. அமெரிக்காவின் கப்பல்களில் சுமார் 75 சதவீதம், பனாமா கால்வாய் வழியாகதான் சென்று வருகின்றன. இதற்காக பனாமா பெரும் கட்டணத்தை அமெரிக்காவிடம் வசூலிக்கிறது; அமெரிக்க கடற்படை கப்பல்கள் இடம் கூட கட்டணம் வசூலிக்கின்றனர் என்பது தான் டொனால்டு டிரம்பின் குற்றச்சாட்டாக உள்ளது. இதனால், சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள பனாமா கால்வாய், அமெரிக்கா வசம் வரப்போகிறது என பதவியேற்பு விழாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் கூறியதாவது: பனாமா கால்வாய் நிர்வாக உரிமையை பனாமா நாட்டிற்கு, அமெரிக்கா வழங்கியது ஒரு முட்டாள் தனம். பனாமா கால்வாயை சீனா இயக்குகிறது. அதை சீனாவிடம் நாங்கள் கொடுக்கவில்லை. சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள பனாமா கால்வாய், அமெரிக்கா வசம் வரப்போகிறது. பனாமா கால்வாய்க்கான கட்டணத்தை குறைக்க வேண்டும். முடியாவிட்டால் அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இதற்கு பதில் அளித்து, பனாமா அதிபர் கூறுகையில், ' பனாமா கால்வாய் சீனாவுக்கானது அல்ல. இந்த கால்வாய் மீது சீனா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. உலகில் உள்ள எந்த நாடும் எங்கள் நிர்வாகத்தில் தலையிடவில்லை, என்றார். கால்வாய், சீனாவின் ஆதிக்கத்தில் இருக்கிறது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். அதை பனாமா அரசு மறுத்துள்ளது. உண்மையில், இந்த கால்வாயில் இரு முனைகளிலும் அமைந்துள்ள துறைமுகங்களை, ஹாங்காங்கை சேர்ந்த தனியார் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இதைத்தான் சீனாவின் ஆதிக்கம் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

தாமரை மலர்கிறது
ஜன 21, 2025 20:44

அமெரிக்கா கப்பல்களுக்கு இலவச ரைடு வேணும்கிறார். தராவிடில், பனாமாவை திருடிக்கொள்வோம் என்று மிரட்டுகிறார். நூறு வருடங்களுக்கு முன், ஒரு பெரிய ராஜ்ஜியம் சின்ன ராஜ்யங்களை கப்பம் கட்ட சொல்லி நிர்பந்தம் செய்யும். பிரிட்டிஷ் ஆட்சியில் நமக்கு நடந்தது. அதை அமெரிக்கா செய்ய ஆரம்பிக்க வேண்டும் என்கிறார். காரணம் பணத்தை தவிர எந்தவித உற்பத்தியும் செய்யாத அமெரிக்காவின் அழிவு காலம் ஆரம்பமாகிவிட்டது. அதை சரிசெய்ய, அமெரிக்காவின் செல்வந்ததை உயர்த்த, பக்கத்துக்கு நாடுகளை சூறையாட வேண்டும் என்று ஒரு பெரிய ராஜ்ஜியம் நினைப்பது இயற்கை தான். அது ஆயிரம் ஆண்டுகளாக நடைபெற்றது தான்.


sankaranarayanan
ஜன 21, 2025 18:42

பனாமா கால்வாயை நிர்வாகிக்கும் பொறுப்பு எப்படி அமெரிக்கா கோருகிறதோ அதே போபை அமெரிக்காவிடம் விட்டுவிடலாமே அவர்கள் கூவம் ஆற்று முதலைகன்று திராவிட மாடல் அரசும் விரைவில் கூவம் ஆற்றின் நிர்வாக பொறுப்ளை பிடித்துவிடுவார்கள் சாராய தண்ணீர் கூவத்தில் கலந்து ஓடாமல் பார்த்துக்கொள்வார்கள் அப்பப்போ தகுந்த சன்மானமும் கட்சி பிரமுகர்களுக்கு வந்து கொண்டே இருக்கும்


Natarajan Ramanathan
ஜன 21, 2025 16:47

இது மட்டும் தமிழ் நாட்டில் இருந்திருந்தால் பனாமா கால்வாய் தூர் வாரும் டெண்டரை பாலு எடுத்து மாதம் ஒரு லட்சம் கோடியாவது கொள்ளை அடிப்பான்.


GMM
ஜன 21, 2025 14:54

பனாமா கால்வாயை வெளிநாட்டு தனியார் நிறுவனம் நிர்வகித்தால், பனாமா அதிபர் நிர்வகிக்கவில்லை. அமெரிக்கா விடம் கொடுக்க ஏன் விரும்பவில்லை. பனாமா அதிபர் சத்தம் இல்லாமல் அமெரிக்காவிடம் ஒப்படைக்கவும். கட்ச தீவை இந்திய தொழில் அதிபர் அல்லது அண்டை மாநிலங்களுக்கு கொடுக்க கருணாநிதிக்கு எண்ணம் வரவில்லை. இலங்கைக்கு ஏன் கொடுத்தார்? அறிவாலயத்தை கொடுக்கலாம் அல்லவா? கட்ச தீவை இந்தியா திரும்ப பெற வேண்டும்.


Kasimani Baskaran
ஜன 21, 2025 14:26

பனாமா நாட்டு அரசின் கட்டுப்பாடு என்றால் எப்படி ஹாங்காங் நிறுவனங்கள் நிர்வகிக்கும்? ஹாங்காங் நிறுவனம் இடதுசாரிகளுடையதாகவோ அல்லது பைடனுடையதாகவோ கூட இருக்கலாம் - அல்லது அதில் இவர்கள் பெருமளவு பங்குகளை வைத்திருக்க வாய்ப்பு இருக்கிறது.


ஆரூர் ரங்
ஜன 21, 2025 14:04

கூவம் ஆற்றை வாங்க வரீங்களா? இப்படிக்கு ஏற்கனவே கச்சத் தீவை தாரை வார்த்தவர்கள்..


Sankare Eswar
ஜன 21, 2025 12:55

உனக்கு என்ன வேணும்னாலும் எடுத்துக்க ராசையா ... 2025 ஜோரா இருக்கணும் புரியுதா ...


Laddoo
ஜன 21, 2025 12:12

கட்டுவா இருந்தால் கட்ச தீவு போல இதையும் வாரி விட்டிருப்பார்


Kasimani Baskaran
ஜன 21, 2025 14:21

லட்டு... கட்டு... பிரமாதம்.


சமீபத்திய செய்தி