உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இதை செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: எலான் மஸ்குக்கு டிரம்ப் எச்சரிக்கை

இதை செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: எலான் மஸ்குக்கு டிரம்ப் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு நிதியுதவி செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என தொழில் அதிபர் எலான் மஸ்குக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்க அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் எலான் மஸ்க். தற்போது டிரம்ப் -மஸ்க் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறிமாறி விமர்சனம் செய்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்பை நேரடியாக எதிர்க்க துவங்கியுள்ள தொழிலதிபர் எலான் மஸ்க், 'தி அமெரிக்கா பார்ட்டி' என்ற பெயரில் கட்சி துவங்க இருப்பதாக அறிவித்தார். இந்நிலையில் செய்தி சேனலுக்கு அதிபர் டிரம்ப் அளித்த பேட்டி: எலான் மஸ்க் மிகவும் அவமரியாதைக்குரியவர். அது மிகவும் மோசமான விஷயம் என்று நான் நினைக்கிறேன். அவர் வெள்ளை மாளிகையை அவமரியாதை செய்தார். அவரால் (எலான் மஸ்க்) நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். நான் அவருக்கு நிறைய உதவி செய்திருக்கிறேன். அதிபர் பதவியை அவமரியாதை செய்ய முடியாது.வரி குறைப்பு மற்றும் செலவு மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டளிக்கும் குடியரசுக் கட்சியினருக்கு எதிராக போட்டியிட ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு எலான் மஸ்க் நிதியுதவி செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். மஸ்க் உடனான உறவுகளை சீர்படுத்தும் எண்ணம் இல்லை. நான் மற்ற வேலைகளைச் செய்வதில் மிகவும் பிஸியாக இருக்கிறேன். அவரிடம் பேசும் எண்ணம் எனக்கு இல்லை. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 08, 2025 15:13

பாகிஸ்தான் அதிபர் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் இருவரும் டிரம்ப் பாணியில் பேசி எலான் மஸ்க் டிரம்ப் சண்டையை நிறுத்தலாம். அதாவது நீங்கள் இருவரும் இப்படியே சண்டை போட்டால் பாகிஸ்தான் உங்களுடன் வர்த்தகம் செய்யாது எனக்கூறி மிரட்டி அவர்கள் சண்டையை நிறுத்தி அமைதிக்கான நோபல் பரிசை இருவரும் அதிபர் ஃபீல்டு மார்ஷல் பகிர்ந்து கொள்ளலாம். டிரம்ப் சிஜஏ பாகிஸ்தான் என்றால் மிகவும் பிடிக்கும்.


Ramesh Sargam
ஜூன் 08, 2025 12:45

நான் மற்ற வேலைகளைச் செய்வதில் மிகவும் பிஸியாக இருக்கிறேன். அப்படி எதுவும் செய்வதாக தெரியவில்லையே. முன்பெல்லாம் மற்ற நாட்டு பொருட்கள் மீது வரி விதித்து பிசியாக இருந்தீர். இப்பொழுது மஸ்க்வுடன் மோதல் பிஸி. நாட்டு மக்களுக்காக என்ன செய்தீர், சொல்லுங்கள் பார்க்கலாம்.


Kasimani Baskaran
ஜூன் 08, 2025 10:24

மிக நெருக்கமான உறவில் இருந்தவர்கள் திடீர் என்று லடாய் ஆவது அங்கு புதிதல்ல. மறுபடியும் இது சரியாக வாய்ப்பும் கூட இருக்கத்தான் செய்கிறது. ஏனென்றால் நாசாவின் திட்டங்களுக்கு காகித அளவில் மஸ்க் வெந்நீர் ஊற்றமுடியும். அமெரிக்காவால் ஏலியன் தொழில் நுணுக்கங்களை நாசாவில் உபயோகித்து அதை பொது வெளியில் சொல்ல முடியாது.


SUBBU,MADURAI
ஜூன் 08, 2025 09:34

Trump on India and Pakistan tensions: Both are strong nuclear nations. I told them NO trade if youre bombing each other. I stopped that war it couldve escalated further, maybe even to a NUCLEAR conflict. Fighting Musk online, claiming ceasefire offline: Creditjeevi


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை